/tamil-ie/media/media_files/uploads/2017/05/mortuary-main.jpg)
ஜூலை 6ம் தேதி சோபியன் பகுதியில் குடியிருந்து வந்த கான்ஸ்டபிள் ஜாவைத் அகமது தர் அவருடைய வீட்டிலிருந்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சூப்ரிடெண்ட் ஆப் போலிஸ் ஷைலேந்திர மிஷ்ரா அவருக்கு பாதுகாவலராக செயல்பட்டவர் ஜாவைத். அவருடைய பிணம், குல்காம் பகுதியில் இருக்கும் குளம் அருகே அடுத்த நாள் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த வாரம் குல்காம் பகுதியில் இருக்கும் முடல்ஹமா பகுதியில் வசித்து வரும் சலீம் ஷா என்ற கான்ஸ்டபிளை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றார்கள். இவர் கத்துவா பகுதியில் பாதுகாப்பு பணிக்காக செல்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 20 இரவு அன்று சிலர் அவரை வீடு புகுந்து கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்த ஷாவின் பயிற்சிகள் முடிந்தவுடன் புல்வமா பகுதியில் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வு நடைபெற்று ஒருவாரம் கூட ஆகாத நிலையில், நேற்று அவந்திபூர் பகுதியில் பணி செய்து வரும் கான்ஸ்டபிள் ஷகீல் அகமதுவை காணவில்லை என்று காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறார்கள் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள். புல்வமா பகுதியில் வசித்து வரும் தங்களுடைய உறவினரை காணச் சென்ற போது இப்படி நடந்துவிட்டது என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.