Advertisment

2019க்கு பிறகு கணிசமாக விரிவடைந்த ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு வளையம்

மாறாக கண்ணோட்டம் கொண்ட எவரும் இந்திய அரசின் கடுமையான தண்டனை நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முடியாது. அது மாணவராக இருந்தாலும் சரி, செயற்பாட்டாளராக இருந்தாலும் சரி அல்லது அரசியல்வாதியாக இருந்தாலும் சரி என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பி.டி.பி. கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
JK security net cast wider

Naveed Iqbal

Advertisment

JK security net cast wider: கடந்த மூன்று ஆண்டுகளில் எண்கவுண்டர்களை தாண்டி ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பை கணக்கில் எடுத்துக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் செயல்கள் அதிகரித்துள்ளன. பாதுகாப்பு சட்டங்களின் கீழ் தடுப்பு காவல்கள், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி சோதனை ஆகியவையும் போராட்டக்காரர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் வலைப்பின்னல்கள், அமைப்புகளில் இருக்கும் நபர்களிடம் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கிறது அந்த அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள்.

நான்கு ஆண்டுகள் தரவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் இந்த பகுதிகளில் ஒரு புதுப்பிக்கப்பட்ட உந்துதலை வெளிப்படுத்தியுள்ளதாக கூறுகிறது. இது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) மற்றும் பொது பாதுகாப்பு சட்டம் (பிஎஸ்ஏ), பல ஏஜென்சி பயங்கரவாத கண்காணிப்பு குழுவின் அரசியலமைப்பு (பிஎஸ்ஏ) மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ள மாநில விசாரணைக் குழு ஆகியவற்றின் பரவலான பயன்பாட்டால் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

2019ம் ஆண்டு முதல் கலகக்காரர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வரும் நபர்களாக காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்ட 1900 நபர்கள், ஓவர் கிரவுண்ட் வொர்க்கர் வலைப்பின்னல்களை உடைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

யூனியன் பிரதேச நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட தரவுகளில் 195 பயங்கரவாத தொகுதிகள் மற்றும் 35 பயங்கரவாதிகளில் பதுங்குக் குழிகள் கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் அழிக்கப்பட்டுள்ளது என்றும் பதிவு செய்துள்ளது.

இதுவரை செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளை தாக்கவே கவுண்ட்டர் டெரரிஸம் பயன்படுத்துப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இருக்கின்ற திறமையான திட்டங்களை செயல்படுத்தி தீவிரவாத உள்கட்டமைப்பையே முழுமையாக அழிப்பது தொடர்பாக தீர்வுகளை காண வேண்டும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மொத்த நெட்வொர்க்குகளில் நிதி மற்றும் தளவாட இணைப்புகளை முற்றிலுமாக ஒழித்தால் தான் இது சாத்தியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உ.பா மற்றும் பி.எஸ்.ஏ. போன்ற சட்டங்களில் இடம் பெற்றுள்ள அம்சங்களே இதற்கு காரணம். உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டு 437 ஆக இருந்தது. இது 2020ம் ஆண்டு 557 ஆக இருந்தது. பிறகு 2021ம் ஆண்டு அது 500க்கும் குறைவாக வைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த வழக்குகளின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,700 க்கும் அதிகமாக உள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அல்லது 1,362 பேர் தற்போதும் காவலில் உள்ளனர்.

2020ம் ஆண்டு பி.எஸ்.ஏ. சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 134 ஆக இருந்தது. 331 ஆக இது அதிகரித்துள்ளது. இத்தகைய செயல்பாடுகள், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட பிறகு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், பிடிபியின் இளைஞரணித் தலைவர் வஹீத் பாரா ஜம்முவில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டு ஸ்ரீநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் புல்வாமா மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் அவர் வெற்றி பெற்ற போதும் பதவிப் பிரமாணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

நவம்பர் மாதம் மனித உரிமை செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ் தேசிய விசாரணை முகமையால் கைது செய்யப்பட்டார். தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கிய விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட உபா வழக்கில் தொடர்புடையவர் என்று கூறி அவர் கைது செய்யப்பட்டார்.

மாறுபாட்ட கருத்தினை முன்வைப்பதையே குற்றமாக கருதி அதற்காக கடுமையான சட்டங்கள் மூலம் தண்டனைகள் வழங்கப்படுகிறது. து. சில சமயங்களில் இந்தச் சட்டங்கள் ஒரு நபர் செய்ததாகக் கூறப்படும் குற்றத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கலாம். பாதுகாப்பு ஏஜென்சிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் அரிதான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய மிகவும் தீவிரமான அமைப்புகளாகும். ஆனால், அவர்கள் கையில் ஆயுதங்கள் வழங்கி அவர்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துவிட்டது. மாறாக கண்ணோட்டம் கொண்ட எவரும் இந்திய அரசின் கடுமையான தண்டனை நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முடியாது. அது மாணவராக இருந்தாலும் சரி, செயற்பாட்டாளராக இருந்தாலும் சரி அல்லது அரசியல்வாதியாக இருந்தாலும் சரி என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பி.டி.பி. கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து முடுக்கி விடப்பட்டுள்ளன. 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் 197 சந்தர்ப்பங்களில் 400 க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இது முந்தைய இரண்டு ஆண்டுகளில் (2018 மற்றும் 2019) கொல்லப்பட்ட நபர்களின் எண்ணிக்கைக்கு சமம்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை டிஜி தில்பாக் சிங்கை தொடர்பு கொண்ட போது, “கடந்த ஆண்டில் மட்டும் 89 தொகுதிகள் உடைக்கப்பட்டன, 670 OWGக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இது தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறினார். இந்த OWG-க்கள் அனைத்து சாயல்களிலும் செயல்படுகிறார்கள். வயது, பாலினம், வேலை மற்றூம் இடம் ஆகிய எதையும் பொருட்படுத்தாமல் செயல்படுகின்றனர். அவர்களைக் கண்டுபிடித்து அடையாளம் காணும் திறன்தான் மாறிவிட்டது, நாங்கள் தொடர்ந்து அவர்களை கடுமையாகத் தாக்குவோம் என்றும் அவர் கூறினார்.

இந்த நோக்கத்தின் அடிப்படையில், பல்வேறு ஏஜென்சிகளின் நடவடிக்கைகளை திறம்பட ஒருங்கிணைக்க TMG அல்லது பயங்கரவாத கண்காணிப்பு குழு (Terror Monitoring Group) மார்ச் 2019ம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. மாநில விசாரணைக்குழு 2021ம் ஆண்டு இறுதியில் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் உள்துறை உருவாக்கியது. இது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு குழுவாகும்.

அதிகாரப்பூர்வ தகவல்களின் படி ஜம்மு காஷ்மீரில் 169 கலகக்காரர்கள் உள்ளனர். அவர்களில் 163 நபர்கள் காஷ்மீரை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டுகள்ளில் 134 நபர்கள் போராட்டக்குழுக்களில் தங்களை இணைத்துக் கொண்டனர். பல்வேறு செயல்பாடுகளில் அவர்களில் 72 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் கைது செய்யப்பட்டனர். 40 பேர் இன்னும் செயல்பாட்டில் உள்ளனர். இந்த செயல்பாடுகளில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை தரப்பில் 20 பேர் பலியாகியுள்ளனர். 23 பாதுகாப்பு படையினர் 2021ம் ஆண்டு கொல்லப்பட்டனர்.

2021 இல் லஷ்கர்-இ-தொய்பா அதிக உயிரிழப்புகளைக் கண்டது, அதைத் தொடர்ந்து ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன். இதற்கிடையில், எல்லை தாண்டிய ஊடுருவலைப் பொறுத்தவரை, 2021 மொத்த மற்றும் நிகர ஊடுருவல் இரண்டிலும் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jammu Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment