ஜம்மு – காஷ்மீரில் நேற்று வரை நடைபெற்றது என்ன? சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

Jammu Kashmir bifurcation : நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவில் திருத்தம் மேற்கொண்டுள்ளது

ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 144 தடை ஸ்ரீநகரில் ஜம்மு & காஷ்மீர் அரசு அமல்படுத்தியது. பாதுகாப்பு படைகளும் அங்கு குவிக்கப்பட்டது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - ஷுவைப் மசூதி)
ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 144 தடை ஸ்ரீநகரில் ஜம்மு & காஷ்மீர் அரசு அமல்படுத்தியது. பாதுகாப்பு படைகளும் அங்கு குவிக்கப்பட்டது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் – ஷுவைப் மசூதி)

Jammu and Kashmir reorganization bill 2019: Photo Gallery

ஞாயிறு மாலை, மொபைல், பிராட்பேன்ட் இன்டர்நெட் மற்றும் கேபிள் போன்றவை ஸ்ரீநகரில் துண்டிக்கப்பட்டது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - ஷுவைப் மசூதி)
ஞாயிறு மாலை, மொபைல், பிராட்பேன்ட் இன்டர்நெட் மற்றும் கேபிள் போன்றவை ஸ்ரீநகரில் துண்டிக்கப்பட்டது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் – ஷுவைப் மசூதி)

 

முன்னாள் முதல்வர்கள் மெஹ்பூபா முஃப்தி மற்றும் ஒமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - ஷுவைப் மசூதி)
முன்னாள் முதல்வர்கள் மெஹ்பூபா முஃப்தி மற்றும் ஒமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் – ஷுவைப் மசூதி)

 

(எக்ஸ்பிரஸ் புகைப்படம் – ஷுவைப் மசூதி)

 

(எக்ஸ்பிரஸ் புகைப்படம் - ஷுவைப் மசூதி)
(எக்ஸ்பிரஸ் புகைப்படம் – ஷுவைப் மசூதி)

 

பாராளுமன்றத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் - திமுக தலைவர்கள்
பாராளுமன்றத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் – திமுக தலைவர்கள்

 

பாராளுமன்றத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள்
பாராளுமன்றத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள்

 

பாராளுமன்றத்தில் பேசிய ப.சிதம்பரம், “இது மிகவும் வருத்தத்திற்குரிய நாள். இந்திய அரசியலமைப்பு வரலாற்றில், இது ஒரு கருப்பு தினம்” என்றார். மேலும், “பாராளுமன்றத்தில் இன்று மாபெரும் தவறான முடிவு எடுக்கப்பட்டிருப்பதை எதிர்கால சந்ததியினர் உணரும் போது, வரலாறு உங்களின் முடிவு பிழையானது என்பதை உங்களுக்கு நிரூபிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்த மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்பாக பாராளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்த மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்பாக பாராளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி

 

ஜம்மு - காஷ்மீர மாநிலம் தொடர்பான அறிவிப்புக்கு முன்பாக பாராளுமன்றத்துக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா
ஜம்மு – காஷ்மீர மாநிலம் தொடர்பான அறிவிப்புக்கு முன்பாக பாராளுமன்றத்துக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா

 

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370  சட்டப்பிரிவில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் இதனை அறிவித்தார். இதனால் ஜம்மு கஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் என இரண்டு யூனியன்களாக உருவாக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயல்படும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என அறிவித்துள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jk shutdown section 144 srinagar photos

Next Story
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜம்மு-காஷ்மீர் தலைவர்களுக்கு துணை நிற்கும் காங்கிரஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com