Advertisment

மாவட்ட நிர்வாகத் தேர்தல் : ஜம்முவில் பெரும்பான்மை பெற்ற பாஜக!

காஷ்மீரில் 32 மற்றும் ஜம்முவில் 17 இடங்களில் 50 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னணி வகித்தனர்.

author-image
WebDesk
New Update
மாவட்ட நிர்வாகத் தேர்தல் : ஜம்முவில் பெரும்பான்மை பெற்ற பாஜக!

Bashaarat Masood 

Advertisment

JK votes split : Valley goes to Gupkar Alliance Jammu to BJP: ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முதலாக நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்களில் குப்கார் கூட்டணி 100க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 280 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று செவ்வாய் கிழமை அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின.

வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கும் போதே, பாஜக 75 டிடிசி தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றது உறுதியானது. இந்துக்கள் அதிகமாக இருக்கும் ஜம்மு, உதம்பூர், கத்துவா, சம்பா போன்ற ஜம்மு பிரிவில் இருக்கும் மாவட்டங்களில் 56 தொகுதிகளில் 49-ல் வெற்றி பெற்றது பாஜக.

தேர்தல் முடிவுகள் பாஜக குறைந்தது ஜம்முவில் ஆறு மாவட்டங்களில் டிடிசி தொகுதிகளை தக்க வைத்துள்ளது என்பது தெளிவாகிறது. இருப்பினும் காஷ்மீரில் பெரிய அளவு சோபிக்க இயலவில்லை. மக்கள் கூட்டணி கட்சி ஜம்முவின் 9 டிடிசி மாவட்டங்களிலும் வெற்றி பெற்றது. மேலும் அங்கு 5 மாவட்டங்களில் வெற்றியை யார் தக்கவைத்தது என்பதில் இன்னும் தெளிவு கிட்டவில்லை. சுயேட்சை வேட்பாளர்களின் பங்கு இந்த தேர்தல் முடிவில் முக்கிய பங்கினை ஆற்றும் என்று தெரிய வந்துள்ளது.

publive-image

பாஜகவும் மக்கள் கூட்டணியும் டிந்த வெற்றியை தத்தம் வெற்றி என்று பதிவு செய்துள்ள நிலையில் பாஜக, குப்கார் கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் என்று தங்களின் கருத்தினை பதிவு செய்துள்ளது. மக்கள் கூட்டணி, சட்டப்பிரிவு 370-ஐ சட்டத்திற்கு புறம்பாக ரத்து செய்ததை மக்கள் எதிர்க்கின்றனர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அளவுக்கு அதிகமாக மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்திருப்பது எதைக் காட்டுகிறது. அவர்கள் வெடிகுண்டுகளையும் தோட்டாக்களையும் காட்டிலும் அதிக அளவும் ஜனநாயக செயல்முறைகளை நம்புகின்றனர் என்று பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் சையத் சானவாஸ் ஹூசைன் கூறியுள்ளார். அமைதியான, சுதந்திரமான தேர்தல் முடிவுஅக்ள் குப்கார் கூட்டணியின் எண்ணங்களுக்கு மாறாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் முதல்வர் மற்றும் மக்கள் கூட்டணியின் துணை தலைவர் மெகபூபா முஃப்தி இந்த வெற்றி, ஜம்மு காஷ்மீரின் மக்கள் , ஆர்ட்டிக்கிள் 370வதை நீக்கியதை கடுமையாக எதிர்த்த JKPAGD-க்கு கூட்டணிக்கு அதிக அளவில் வாக்களித்ததை காட்டுகிறது. இம்மக்கள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை தக்க வைக்க முயற்சிக்கும் எங்களின் கூட்டணிக்கு அதிக அளவு ஆதரவை தந்துள்ளனர் என்று முஃப்தி ட்வீட் பதிவிட்டுள்ளார். எங்களின் வெற்றியை களத்தில் நின்று ஆதரவு தந்த எங்களின் தொண்டர்களுக்கு சமர்பிக்கின்றோம். ஆரம்பத்தில் பாரா வாஹித் கைது செய்யப்பட்டது முதல் தேர்தல் நாட்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுத்தது வரை நமக்கு கஷ்டங்களை தர இந்திய அரசு முயற்சிக்காத செயல்கள் ஒன்றும் இல்லை என்றும் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் அவர்.

publive-image

ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரான ஒமர் அப்துல்லா பேசிய போது, ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று முடிந்த டிடிசி தேர்தல் முடிவுகள் மக்கள் எங்களின் கூட்டணிக்கு அளித்த ஆதரவை காட்டுகிறது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து மற்றும் ஆர்ட்டிக்கிள் 370 பிரச்சனையை கௌரவ பிரச்சனையாக பாஜக இந்த தேர்தலை பார்த்தது. தற்போது மக்கள் பேசியுள்ளனர். ஜனநாயத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இவர்களின் குரல்களை கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

ஜம்முவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான செனாப், பிர் பஞ்சால் பகுதிகளிலும் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புல்வாமாவின் கக்கபோரா, குரெஸின் துலைல், மற்றும் மத்திய காஷ்மீரில் அமைந்திருக்கும் ஸ்ரீநகரின் கோன்மோஹ் பகுதியிலும் பாஜக வெற்றியை பதிவு செய்துள்ளது.

சுமார் 50 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னணி வகித்து வந்தனர். இந்த அரசியல் ஆதாரங்கள் பாஜகவின் சிறந்த பூத் நிலை நிர்வாகமும் காரணம் என கூறியுள்ளனர். டிடிசி தேர்தலிலும் காங்கிரஸ் முத்திரை பதிக்க தவறிவிட்டது.காஷ்மீரில் 9 இடங்களிலும் ஜம்முவில் 17 இடங்களிலும் காங்கிரஸ் முன்னணி வகித்தது.

பின்னிரவு தாண்டிய இறுதி முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டது. ஃபாரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு யூனியன் பிரதேசத்தின் காஷ்மீர் மற்றும் ஜம்மு பிரிவுகளில் கணிசமான ஆதரவைப் பெற்ற ஒரே அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. எவ்வாறாயினும், அல்தாஃப் புகாரி தலைமையிலான மத்திய அரசின் ஆதரவுடைய ஜம்மு-காஷ்மீர் அப்னி கட்சிக்கு இதன் முடிவுகள் பெரும் பின்னடைவாகும். இக்கட்சி 10 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.

publive-image

அதிகாரப்பூர்வ தகவல்கள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மக்கள் கூட்டணியே முன்னணி வகித்து வருகிறது என்று கூறியது. அல்லது 112 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது. தேசிய மாநாட்டு கட்சி 68 இடங்களிலும், பி.டி.பி. 28 இடங்களிலும் வெற்றி பெற்றது. காஷ்மீர் பகுதியில் மக்கள் கூட்டணி 85 இடங்களில் முன்னணி வகுத்தது. இதில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், பிடிபி 27 கட்சிகளிலும், சாஜத் லோனின் கட்சி 8 இடங்களிலும் சி.பி.ஐ (எம்) கட்சி 5 இடங்களிலும் முன்னணி வகுத்தது.

மொத்தமாக தேசிய மாநாட்டு கட்சி காஷ்மீரில் 42 இடங்களிலும் ஜம்முவில் 26 இடங்களிலும் முன்னணி வகுத்தது. இரண்டு பகுதிகளிலும் அதிக இடங்களில் முன்னணி வகுத்த தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருந்தது. இந்து மக்கள் அதிகம் இருக்கும் ஜம்மு பகுதிகளில் காங்கிரஸை காட்டிலும் பாஜகவிற்கு அதிக சவால்விடுக்கும் வகையில் போட்டியிட்டது இந்த கட்சி.

காஷ்மீரில் 32 மற்றும் ஜம்முவில் 17 இடங்களில் 50 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னணி வகித்தனர். ஆச்சரியம் என்னவென்றால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏராளமானோர் களத்தில் இருந்ததால் இது வாக்குப் பங்கைப் பிரிக்க உதவியது என்று PAGD இன் வட்டாரங்கள் தெரிவித்தன.

செவ்வாய் கிழமை மாலையில் தேர்தல் ஆணையம் 280 இடங்களில் 241 இடங்களுக்கான தேர்தல் முடிவுகளை அறிவித்தது. அதில் பாஜக 68 இடங்களிலும், தேசிய மாநாட்டு கட்சி 55 இடங்களிலும், பி.டி.பி. 26 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், அப்னி பார்ட்டி 10 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 43 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவித்தது.

With inputs from ARUN SHARMA in JAMMU

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment