Advertisment

ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

ஜார்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து சம்பாய் சோரன் புதன்கிழமை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்கிறார் என்று தெரிவித்தது. இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hemant Soren CP Radha

ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஜூலை 4-ம் தேதி ஜே.எம்.எம் தலைவர் ஹேமந்த் சோரன் சந்தித்தார். (Express Photo)

ஜார்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து சம்பாய் சோரன் புதன்கிழமை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்கிறார் என்று தெரிவித்தது. இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.

Advertisment

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) நிர்வாகத் தலைவர் ஹேமந்த் சோரனை மாநிலத்தில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: Hemant Soren to take oath as Jharkhand CM today: JMM

முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளதாக ஜே.எம்.எம் கட்சியின் பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

ஆளும் கூட்டணியின் 45 எம்.எல்.ஏ.க்கள் ஹேமந்த்தை தலைவராக தேர்ந்தெடுத்ததையடுத்து, தனது ராஜினாமாவை சமர்பிப்பதற்காக சம்பாய் சோரன் புதன்கிழமை ஆளுநரை சந்தித்தார். ஹேமந்த் கைது செய்யப்பட்ட 5 மாதங்களுக்குப் பிறகு ஜூன் 28-ம் தேதி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ஹேமந்த் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ராஞ்சியில் நிலம் தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்ட பணமோசடி வழக்கில் அவர் குற்றவாளி அல்ல என்று நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு செய்தி வெளியிட்டது போல, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், அது நன்றாக இருக்காது என்று கூறி, முதல்வர் பதவியை விட்டுவிட சம்பாய் சோரன் தயங்கினார். அவரும் ஒரு பிரபலமான மக்கள் தலைவர் என்றும், ஹேம்ந்த் சோரன் ஜாமீனில் வெளியே இருப்பதால் ஹேமந்தின் அரசாங்கத்தை மீண்டும் சீர்குலைக்கும் முயற்சிகள் நடக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜார்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து சம்பாய் சோரன் புதன்கிழமை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்கிறார் என்று தெரிவித்தது. இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jharkhand Cm Hemant Soren
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment