Advertisment

‘ஆளுநர் எதற்காக காத்திருக்கிறார்?’ ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க கோரிய ஜே.எம்.எம்- காங்கிரஸ் கூட்டணி கேள்வி

சம்பய் சோரன் ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்துள்ள குறித்து, ஆளுநர் உடனடியாக செயல்படாதது ஜே.எம்.எம்-காங்கிரஸ் முகாமில் சில கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
JMM Congress coalition question to Governor as Hemant Soren succession plan stalled Tamil News

அடுத்த முதல்வர் நியமிக்கப்படாதது "அரசியலமைப்பு நெருக்கடிக்கு" வழிவகுக்கும் என்று ஆளும் கூட்டணி காட்சிகள் தெரிவித்தன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Jharkhand CM Hemant Soren: ஆளும் ஜே.எம்.எம்-காங்கிரஸ் கூட்டணிக்கு, அனைத்து சட்ட விதிகளையும் பரிசீலித்த பிறகு, ஜே.எம்.எம். கட்சியின் சம்பய் சோரனை சட்டமன்றக் கட்சியின் தலைவராக நியமிப்பதற்கான அவர்களின் முன்மொழிவுக்குத் திரும்புவதாக ஆளுநர் கூறினார். அமலாக்கதுறையால் கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, முதல்வர் ஹேமந்த் சோரன் புதன்கிழமை இரவு ராஜ்பவனில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

Advertisment

ஜே.எம்.எம், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகளின் ஆளும் கூட்டணிக்கு முறையே 29, 17 மற்றும் ஒரு எம்எல்ஏ உள்ளனர். எதிர்க்கட்சியில் பா.ஜ.க 26 மற்றும் ஏ.ஜே.எஸ்.யு கட்சி 3 இடங்களைப் பெற்றுள்ளது. சிபிஐ(எம்-எல்) மற்றும் என்சிபி (ஏபி) கட்சிகளுக்கு தலா ஒரு எம்எல்ஏவும், இரண்டு சுயேச்சைகளும் உள்ளனர்.

சம்பய் சோரன் ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்துள்ள குறித்து, ஆளுநர் உடனடியாக செயல்படாதது ஜே.எம்.எம்-காங்கிரஸ் முகாமில் சில கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். ஆளும் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களை ஆளுநர் சந்திக்கவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ தீபிகா பாண்டே சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “எங்களுக்கு ஆளுநர் நேரம் கொடுத்தார், பின்னர் மரியாதை இல்லாமல் போகச் சொன்னார். எங்களின் பெரும்பான்மையைக் கண்டு நாங்கள் வெளியே தள்ளப்பட்டுள்ளோம். ராஜ் பவன் பாஜகவின் முகவரைப் போல் செயல்படுகிறது, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தலைவர்களும் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்." என்று அவர் கூறினார். 

சம்பாய் சோரன், ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், “ஜே.எம்.எம்.,யின் சட்டமன்றக் கூட்டத்தில், நான் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதையடுத்து, இன்றே, கூட்டணிக் கட்சிகளின் மாண்புமிகு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் என்னை ஒருமனதாக கூட்டு சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இத்துடன், சட்டமன்றக் கட்சித் தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரின் ஆதரவுக் கடிதங்களையும் இந்தக் கடிதத்துடன் இணைக்கிறேன். இதனால், பெரும்பான்மை எண்ணிக்கையை விட 47 கௌரவ உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு உள்ளது. எனவே, எனது கோரிக்கையை ஏற்று புதிய ஆட்சி அமைக்க என்னை முதலமைச்சராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அடுத்த முதல்வர் நியமிக்கப்படாதது "அரசியலமைப்பு நெருக்கடிக்கு" வழிவகுக்கும் என்று ஆளும் கூட்டணி காட்சிகள் தெரிவித்தன. “எங்களிடம் பெரும்பான்மை உள்ளது; கவர்னரை தடுப்பது எது? தற்போதைய நிலவரப்படி, செயல் முதல்வர் கூட இல்லை. ஓட்டைகள் இல்லாதபோது ஆளுநர் யாரைக் கலந்தாலோசிக்க விரும்புகிறார்? என்றார் ஒரு தலைவர்.

மற்றொருவர் பேசுகையில், "இது மக்கள் தலையிட நேரம் கொடுக்கிறது... அடுத்த சில நாட்களுக்குள் ஒரு புதிய முதல்வர் பதவியேற்கவில்லை என்றால், அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும்." என்று கூறினார். 

சமூக வலைதளத்தில் பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரும், சுயேச்சை எம்எல்ஏவுமான சரயு ராய் தனது பதிவில், “ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, ஜார்க்கண்டில் முதல்வர் இல்லை, ஆட்சி இல்லை என்று ஆளுநர் அறிவித்துள்ளார். மாநிலத்தில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாற்று அரசாங்கம் அமையும் வரை குறுகிய கால ஜனாதிபதி ஆட்சிதான் மாநிலத்தில் ஒரே வழி." என்று கூறியுள்ளார். 

ஜார்க்கண்ட் சபாநாயகர் ரவீந்திரநாத் மஹதோ, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “இப்போது நாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் கவலைப்பட ஒன்றுமில்லை. அரசு முன்பு எப்படி செயல்பட்டதோ அப்படியே செயல்படும். எந்த அச்சுறுத்தலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை - எங்களிடம் பெரும்பான்மை உள்ளது மற்றும் எப்போது வேண்டுமானாலும் நிரூபிப்போம்." என்று அவர் கூறினார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Hemant Soren’s succession plan stalled, JMM-Congress coalition asks: ‘What is the Governor waiting for?’

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Jharkhand Cm Hemant Soren
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment