JNU hostel fees hike protests :பார்வை குறைப்பாடு உடைய மாணவர் ஒருவர் தான் தாக்கப்பட்டதாக கூறினார். முன்னாள் மாணவர் ஒருவருக்கு தலையில் 5 தையல்கள். வகுப்பு நடத்தும் ஆசிரியருக்கோ லத்தியில் அடி. திங்கள் கிழமை மாலை அன்று “மாணவர்கள் மீது எந்தவிதமான தடியடியும் ப்ரோயப்படுத்தவில்லை” என்று காவல்துறை கூறுகிறது. குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று பாராளுமன்றத்தை நோக்கி “உயர்த்தப்பட்ட விடுதி கட்டணத்தை குறைக்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் பேரணி நடத்தினர் மாணவர்கள். அதனை களைக்கும் பொருட்டு காவல்துறையினர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் கூறும் கருத்து வேறொன்றாக இருக்கிறது ஆனால் மாணவர்களின் முகம், கிழிந்து போன ஆடை ஆகியவை வேறொரு கதை சொல்கிறது.
சமூக அறிவியல் பிரிவில் படிக்கும் ஜே.என்.யூ மாணவர்களுக்கான யூனியன் கவுன்சிலர் சஷி பூஷான் கூறுகையில் “நான் பார்வை குறைபாடு கொண்டிருப்பன். நான் என்னுடைய கண்ணாடியை தேடிக் கொண்டிருந்ததை காவலர்கள் பார்த்த போதும் அடிப்பதை நிறுத்தவில்லை. அவர்கள் என்னை தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருந்தனர்” என்று தெரிவிக்கிறார். லத்தி சார்ஜில் கீழே விழுந்த மாணவரை நெஞ்சில் மிதித்திருக்கின்றனர் காவல் துறையினர். அவர் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஆண்டு ஜெ.என்.யூவில் பி.எச்.டி பட்டம் பெற்ற மாணவர் சந்தீப் கே. லூயிஸ் கூறுகையில், “தடுப்பு பாதுகாப்புகள் அனைத்தும் தகர்க்கப்பட்ட பிறகு மாணவர்களை காவல்துறையினர் கூண்டோடு கைது செய்தனர். தரதரவென இழுத்துச் சென்றனர். என்னை அனைத்து பக்கங்களிலும் இழுத்துச் செல்ல நான் என்னுடைய பேலன்ஸை இழுந்து பேவ்மெண்டில் விழுந்தேன். என்னுடைய தலையில் பலத்த அடி. தற்போது தலையில் மட்டும் 5 தையல் போட்டிருக்கின்றேன்” என்றார்.
பி.ஏ. இரண்டாம் ஆண்டு ஸ்பேனிஷ் படிக்கும் மாணாவர் சுதான்ஷூ ராஜை சாலையில் போட்டு தரதரவென இழுத்துச் சென்றதில் அவருடைய மேல் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருக்கிறது. மாணவர்களை பார்க்க சென்ற ஆசிரியர்களையும் விட்டுவைக்கவில்லை. என்னை உதைத்து லத்தியால் தாக்கினார்கள். மற்ற ஆசிரியர்களையும் தள்ளிவிட்டனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் யார் என்று நன்றாகவே தெரியும். வேண்டுமென்றே எங்களையும் தாக்கியுள்ளனர். எந்த மாதிரியான ஆசிரியர்கள் நீங்கள் என்று எங்களையே கேள்வி கேட்கின்றனர் என்றார் சுரஜித் மாஸூம்தார். இவர் ஜே.என்.யூ ஆசிரியர்கள் அசோசியேசனின் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
மாணவர்கள் மீது இருக்கும் காயம் குறித்து டெல்லி காவல்துறையின் செய்தி தொடர்பாளர் மந்தீப் சிங் ரந்தவாவிடம் கேட்ட போது “அவர்கள் பேரிகேடில் ஏற முற்பட்ட போது அவர்கள் மீது அடிபட்டிருக்கும். அவர்களாகவே காயம் அடைந்தார்கள்” என்று கூறினார். நேற்று எங்கும் தடியடி கூட நடத்தபப்டவில்லை. யாரையும் தாக்காமல் சுமூகமான முறையிலேயே போராட்டம் தடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது 15க்கும் மேற்பட்ட உயர் காவல்துறையினர் அங்கு இருந்தனர். 2 சிறப்பு காவல்துறை ஆணையர்கள், 2 இணை காவல்துறை ஆணையர்கள், மூன்று துணை காவல் ஆணையர்கள், மற்றும் கூடுதல் காவல் ஆணையர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்தனர். காவல்துறையினரை தாக்க வந்த 100 மாணவர்களை மட்டுமே நாங்கள் கைது செய்தோம். அவர்கள் பின்பு விடுவிக்கப்பட்டனர்.
தண்ணீர் அடிக்கப்படவில்லை, கண்ணீர் புகை குண்டு வீசப்படவில்லை, தடிஅடியும் நடத்தப்படவில்லை. 800 காவல்துறையினர், 10க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதமேந்திய காவல்துறையினர், மற்றும் பெண் காவல்துறையினர் இங்கு நியமிக்கப்பட்டிருந்தனர். நியூஸ் க்ளிக் பத்திரிக்கையாளர் வி. அருண் குமார் நேற்று நடத்த சம்பவத்தின் போது தாக்கப்பட்டார். “நான் பேரிகேட்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடியடி நடத்தினார்கள். என் மீதும் தடியடி நடத்தப்பட்டது. நான் அவர்களிடம் என்னுடைய ஐ.டி. கார்டினை காட்டினேன். இருந்தும் அவர்கள் என் பேச்சை கேக்கவில்லை. என்னுடைய தலையில் அடித்துவிட்டனர் என்று அவர் கூறுகிறார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளின் போது மாணவர்கள் கூட்டமாக பாராளுமன்ற கட்டிடம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். காவல்துறையினருக்கு தடியடி நடத்தவும் அனுமதி தரப்படவில்லை. மாணவர்கள் தான் முதலில் பேரிகேட்களை உடைத்து உள்ளே நுழைந்தனர். உயர்மட்ட குழு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அமைக்கப்பட்டிருப்பதால் போராட வேண்டாம் என்று மூத்த காவல்துறையினர் கேட்டுக் கொண்டதாகவும் காவல்துறை தரப்பு அறிவிக்கிறது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க