Advertisment

ஜே.என்.யு மாணவர் ஷர்ஜீல் இமாம் தேசத் துரோக வழக்கில் கைது! டெல்லி போலீஸ் அதிரடி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
JNU student Sharjeel Imam arrested

JNU student Sharjeel Imam arrested

JNU Sharjeel Imam Arrested:  டெல்லி அலிகார் பல்கலைக்கழகத்தில் சி.ஏ.ஏவுக்கு எதிராக பேசிய ஜே.என்.யு மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது ஐந்து மாநிலங்களில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜே.என்.யு-வில் பி.எச்.டி படித்து வருகிறார் ஷர்ஜீல் இமாம். 16ம் தேதி அலிகார் பல்கலைக்கழகத்தில் அரசுக்கு எதிராகவும், சி.ஏ.ஏவுக்கு எதிராகவும் பேசிய அவர் மீது ஏற்கனவே அசாம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில், ஜே.என்.யூ மாணவர் ஷர்ஜீல் இமாம் பீகாரின் ஜஹானாபாத்தில் டெல்லி போலீசாரால் இன்று (ஜன.28) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டது குறித்து பதிலளித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், "நாட்டின் சிதைவு குறித்து யாரும் பேச முடியாது" என்றார்.

“தவறு செய்தால் போலீஸ் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும். ஆர்ப்பாட்டங்கள் ஒரு பகுதி தான், ஆனால் நாட்டின் சிதைவு பற்றி யாரும் பேச முடியாது," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு நிதி உதவி வழங்கியதா கேரளாவின் பி.எஃப்.ஐ அமைப்பு?

ஷர்ஜீல் பேசியது என்ன?

ஷர்ஜீலின் வீடியோவில் “கன்ஹையா குமாரின் பேச்சினை கேட்க 5 லட்சம் நபர்கள் கூடினார்கள். இந்த 5 லட்சம் நபர்கள் இருந்தால் இந்தியாவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களை தனியாக துண்டித்துவிடலாம். நிரந்தரமாக இல்லையென்றாலும் குறைந்தது ஓரிரண்டு மாதங்களுக்காக அதை செய்யலாம். சாலைகளையும் தண்டவாளங்களையும் உடைத்து நொறுக்குவோம். அப்போது தான் நம்முடைய பேச்சை இவர்கள் கேட்பார்கள்” என்று பேசியது தெரியவந்துள்ளது. தற்போது இது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

மேலும் டெல்லியில் பல்வேறு சாலைகளையும் நாம் முடக்க வேண்டும். அரசுக்கு நாம் அழுத்தம் தரவேண்டும் என்றும் அவர் கூறியது தொடர்பாக அவரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டது. அப்போது அவர் அமைதியான முறையில் சாலைகளை முடக்க வேண்டும் என்றும் அசாமிற்கு செல்லும் சாலைகளை முடக்க வேண்டும் என்றும் நான் கூறினேன். சக்கா ஜாம் போன்ற அது ஒரு அடிப்படையான போராட்டம் தான் என்றும் அவர் கூறினார்.

அவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள்

இவரின் கீழ் சிறப்பு விசாரணை குழு அரசுக்கு எதிராக பேசியதற்காக ஐ.பி.சி 124, மதவெறியை தூண்டும் வகையில் பேசியதற்காக 153ஏ, மற்றும் மக்கள் மத்தியில் தூண்டுதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக 505 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் முதல்வர் பெமா காண்டு இது குறித்து ட்விட்டரில் வெளியிட்ட கருத்தில் “இந்த வகையான பேச்சுகள் அஸ்ஸாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்க தூண்டுகிறது, வகுப்புவாதத்தை உருவாக்குகிறது.  இந்தியாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் குலைக்கும் வகையில் பேசப்படும் எதனையும் ஏற்றுக் கொள்ள இயலாது.  இட்டாநகர் குற்றப்பிரிவு  காவல்துறையினர் ஐபிசி U/S124(A)/153(A)153(B) I பிரிவுகளின் பதிவு செய்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

மணிப்பூர் முதல்வர் எம் என் பிரேன் சிங் “ஷாஹீன் பாக் போராட்டங்களின் இணை அமைப்பாளர் ஷர்ஜீல் இமாமின் ஆட்சேபனைக்குரிய வீடியோவில் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்கும்படி பேசியுள்ளார். மணிப்பூர் காவல்துறை 121/121-A/124-A/ 120-B /153 ஐ.பி.சி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.  நவீன இந்திய வரலாற்றில் பிஎச்டி படித்து வரும் இமாம், கணினி அறிவியலில் ஐ.ஐ.டி-மும்பையில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'சிஏஏ வாபாஸ் லோ': அமித் ஷா பேரணியில் எதிர் கோஷமிட்ட இளைஞர்

Jnu University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment