Advertisment

ஜே.என்.யு தாக்குதல் : 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை

JNU violence JNUSU attack ABVP : அடையாளம் காணப்படாத மர்ம நபர்கள் மீது, கலவரத்தை உண்டாக்குதல், பொதுசொத்திற்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜே.என்.யு தாக்குதல் : 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை

Aranya Shankar

Advertisment

JNU violence JNUSU attack ABVP : டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.  அதில் 31 மாணவர்கள், 2 பேராசிரியர்கள் மற்றும் இரண்டு பாதுகாப்பு காவலர்கள் காயமடைந்துள்ளனர்.  இந்த சம்பவம் நடைபெற்று 24 மணி நேரம் ஆன பிறகும் கூட டெல்லி காவல்துறை ஒருவரையும் கைது செய்யவில்லை.  ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்திற்கு சென்று மாணவர்களை தாக்கிய காவல்துறை ஜே.என்.யு வளாகத்தில் மூன்று மணி நேரம் நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டும் காணாமல் அமைதியாக இருந்து விட்டது.

ஜே.என்.யு பல்கலைக்கழக வளாகத்திற்குள் தாக்குதல் ஆரம்பம் ஆனவுடனே காவல்துறைக்கு 4.57 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  அப்பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷே கோஸ் இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டிருக்கிறது. அவர் இந்த வன்முறை வெறியாட்டங்கள் திட்டமிட்டு ஆர்எஸ்எஸ்-பேராசிரியர்களின் உதவியால் நடைபெற்றது என்று குற்றம்சாட்டியுள்ளார். மாணவர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் சகேத் மூன் கூறுகையில் மாணவர்கள் அமைப்பு இரண்டு மணி நேரமாக காவல்துறையை உதவிக்கு அழைத்து ஆனால் அவர்களிடமிருந்து எந்த விதமான உதவியும் கிடைக்கப் பெறவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜே.என்.யு நிர்வாகம், காவல்துறை மற்றும் வலதுசாரி அமைப்புகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என மாணவர் சங்கத் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். கடந்த 4 நாட்களாக ஆர்எஸ்எஸ்- பேராசிரியர்கள் எங்களின் இயக்கத்தின் நடுவே வன்முறையை தூண்டும் விதமாக  நடந்து கொண்டனர்.  நாங்கள் டெல்லி காவல் துறையிடமிருந்து ஜே.என்.யுவை காப்பாற்ற வேண்டும் என கேட்பது தவறா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கட்டுரையை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க

திங்கள் கிழமையும் போராட்டத்தில் இறங்கிய வலது சாரி அமைப்புகள்

திங்கள் கிழமை மாலை 4 மணி அளவில் ஏ.பி.வி.பி. அமைப்பினர், வலதுசாரி அமைப்புகள் மற்றும் உள்ளூர் ஆதரவாளர்கள் ஜே.என்.யு பல்கலைகழகத்தின் வடக்கு நுழைவாயில் வரை செல்ல  முயற்சி செய்தனர். கேட்டுக்கு சிறிது தூரத்திற்கு முன்பே காவல்துறையினர்  அவர்களை தடுத்து நிறுத்தினர்.  ஐந்து மணி அளவில் நூற்றுக்கணக்கான மக்கள் தடைகளை மீறி நார்த் கேட் சென்று  “Vaam panth ki ek dawai, joota chappal aur pitai’, ‘Gaddaron ki kabar khudegi, Savarkar ki dharti pe’, ‘Dilli police lath bajao, hum tumhaare saath hain’ and ‘Desh ke gaddaron ko, goli maaro saalon ko” என காவல்துறையினர் முன்பே கோஷங்களை எழுப்பினார்கள்.

மூத்த காவல்துறை அதிகாரிக்கு ஆய்ஷே கோஷ் 3 மணி அளவில் இந்த தாக்குதல் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக கூறினார். ஆனால் தென்மேற்கு டெல்லியின் டி.சி.பி. தேவேந்தர் ஆர்யா கூறும்போது, மாலை 4.57 மணிக்கு பெரியார் விடுதியில் இருந்து தாக்குதல் குறித்து அழைப்பு வந்தது என்று கூறினார்.

இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் கல்லெறி தாக்குதல் நடத்துவதாக அப்போது புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்த அழைப்பு மாலை 7.12 மணிக்கு வந்ததாக டிஜிபி கூறினார். 7.40 மணி அளவில் பல்கலைகழகத்திற்குள் நுழைய முறையாக அனுமதி பெறப்பட்டு காவல்துறை 7.40 மணிக்கு வளாகத்திற்குள் சென்றது. காலை முதல் பல்வேறு இடங்களில் சிறுசிறு பிரச்சினைகள் நடைபெற்று மாலையில் அது பெரிய கலவரமாக மாறிவிட்டது என்று காவல்துறை தரப்பு கூறுகிறது. முதல் தகவல் அறிக்கை அடையாளம் காணப்படாத மர்ம நபர்கள் மீது, கலவரத்தை உண்டாக்குதல், பொதுசொத்திற்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வன்முறைத் தாக்குதலில் காயமடைந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்து அறிந்துகொள்ள இதுவரை பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சி செய்யவில்லை. ஒரு போன் கால் அல்லது குறுஞ்செய்தி கூட் துணைவேந்தர் மற்றும் எந்த ஒரு நிர்வாக அதிகாரிகளிடம் இருந்தும் பெறப்படவில்லை என்று இந்த தாக்குதலில் காயமடைந்த பேராசிரியர் சுக்லா சாவந்த் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணி என்ன என்பதை விசாரிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார்.  மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாத மாணவர்கள் மத்தியில் வன்முறையை தூண்டுதல் மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுப்பத்தல் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த சூழல் தான் வளாகத்திற்குள் நிலவிவருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இடதுசாரிகள் மற்றும் மாணவர்கள் அமைப்பு போராட்டங்களை நடத்தி வந்தனர்.  அவர்கள் மீது தான் குற்றம் சாட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவருக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை.

சபர்மதி விடுதியில் அதிக அளவு சேதாரங்கள் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த விடுதியின் வார்டன்கள் இருவர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத காரணத்தால் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருந்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதா என்பது இதுவரை தெரியவில்லை. நேற்று (06/01/2020) ஜெ.என்.யு  ஆசிரியர்கள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் துணைவேந்தர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இங்கு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முறையான நீதி விசாரணை வேண்டும் என்றும் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

துணை வேந்தராக பதவி வகிக்க தகுதியற்றவர் ஜெகதீஷ் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்றும், இங்கு நடைபெறும் வன்முறைவெறியாட்டஙகள் பல்வேறு மட்டங்களில் நிகழ்ந்து வருகிறது என்றூம் அவர் ஆசிரியர்கள் அமைப்பின் செயலாளர் சுரஜித் மாஸூம்தார் கூறியுள்ளார்.

Jnu University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment