Advertisment

ஜே.என்.யு வன்முறை விவகாரம் : தொலைக்காட்சி நிகழ்ச்சியால் விவாத பொருளாகும் டெல்லி காவல்துறை!

டி.சி.பி. ஜாய் திர்கேய் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது வன்முறையில் ஈடுபட்ட 9 மாணவர்களில்7 மாணவர்கள் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர் என்று கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
JNU violence TV sting raises questions

JNU violence TV sting raises questions

 Mahender Singh Manral

Advertisment

JNU violence TV sting raises questions : இந்தியா டுடே டிவியால் நடத்தப்பட்ட ஸ்டிங் ஆப்பரேசனில் இரண்டு ஜே.என்.யு மாணவர்கள் தாங்களாக முன் வந்து ஜனவரி 5ம் தேதி நடைபெற்ற தாக்குதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறையில் அவர்களின் பங்குகள் என்ன என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளனர். காவல்துறையினர் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த பெயர்களை வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் இந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

அதில் இரண்டு ஜே.என்.யு மாணவர்கள் ஃபிரெஞ்ச் துறையை சேர்ந்த ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற வன்முறையில் பங்கேற்றது குறித்து பெருமையாக பேசி வருகிறனர். மற்றொரு மாணவர், இடது சாரி அமைப்பான ஆ.ஐ.எஸ்.ஏவை சேர்ந்தவர், பி.எச்.டி படித்து வரும் நபர். இவர் செர்வர் அறைக்குள் சென்று சேவைகளை தடை செய்தது குறித்து கூறியுள்ளார்.

To read this article in English

இந்த வீடியோவில் பேசிய மாணவர் “தான் தான் அந்த வன்முறையை தூண்டிவிடும் வகையில் மாணவர்களை ஒன்றிணைத்தேன்” என்று கூறியுள்ளார். மேலும் பெரியார் விடுதியில் இருந்து பெரிய பெரிய தடிகளை எடுத்துக் கொண்டு மாணவர்களோடு ஒன்றிணைந்து சபர்மதி விடுதியில் இருப்பவர்களை தாக்க சென்றோம். அப்போது மிக நீண்ட தாடியுடன் வந்த மாணவன் பார்ப்பதற்கு காஷ்மீரி போலே இருந்தான். நான் அவனை அடித்து துவைத்தேன். பிறகு சபர்மதி ஹாஸ்டல் நுழைவாயில் கேட்டினை பலமாக உதைத்து திறந்தேன்” என்று கூறினார். மேலும் அங்கே காவல்துறையினர் இருந்ததை உறுதி செய்த அவர் “நான் பெரியார் விடுதியில் ஒரு மாணவர் பலத்த அடிபெற்றதால் நானே காவல்துறையின் உதவியை நாடினேன்” என்றும் கூறியுள்ளார்.

கண்ணாடி கதவுகளை உடைக்கும் போது பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று அனைவரையும் ஹெல்மெட் அணிய சொன்னேன் என்று மற்றொரு மாணவர் கூறியுள்ளார். மொத்தம் 20 ஏ.பி.வி.பி மாணவர்கள் இந்த வன்முறை வெறியாட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த புகார்கள் குறித்து ஏ.பி.வி.பி. செயலாளர் நிதி திரிபாதியிடம் கேள்வி எழுப்பிய போது இவர்கள் இருவரையும் எனக்கு தெரியாது. இவர்கள் ஏ.பி.வி.பி உறுப்பினர்கள் இல்லை. மேலும் அவர்களுக்கு ஏ.பி.வி.பி. மூலம் எந்தவிதமான பொறுப்புகளும் பதவிகளும் வழங்கப்படவில்லை. வெறுமனே ஒருவர் எங்கள் அமைப்பின் பெயரை சொல்லிவிட்டால் அவர்கள் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று ஆகிவிடாது என்றும் கூறினார். மேலும் இந்த இரண்டு மாணவர்களிடம் பேச எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

எ.ஐ.எஸ்.ஏ அமைப்பை சேர்ந்த பி.எச்.டி மாணவர் பல்கலைக்கழக சர்வர்களை ஷட் டவுன் செய்ய வேண்டும் என்று கூறியதும் இதில் பதிவாகியுள்ளது. இது குறித்து பல்கலைகழக மாணவர்களிடம் கேட்ட போது, இது போன்று செய்தால் தான் நிர்வாகம் எங்களின் குறையை வந்து எங்களிடம் கேட்கும். அதற்கும் ஏ.பி.வி.பி தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம் என்று மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏ.பி.வி.பி மாணவர்களால் பரப்பப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மட்டுமே ஆதாரமாக கொண்டு காவல்துறையினர் 7 மாணவர்களை அடையாளம் கண்டுள்ளது. மேலும் இந்த வீடியோக்களை நாங்கள் காவல்துறையிடம் அளித்தோம் என்பதையும் ஏ.பி.வி.பி மாணவர்கள் ஒத்துக் கொண்டனர். டி.சி.பி. ஜாய் திர்கேய் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது 9 மாணவர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டதாகவும் அதில் 7 மாணவர்கள் இடதுசாரி அமைப்புகளான SFI, AISF, AISA and DSF -ளை சேர்ந்தவர்கள் என்று அறிவித்தார். இந்த மாணவர்களின் மாணவர் அமைப்பின் தலைவர் ஆய்ஷே கோஷும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆதாரங்கள் அனைத்தையும் காவல்துறையினர் ஏ.பி.வி.பி ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில் இருந்து பெறப்பட்டது என்பது பகிரங்கமாக தெரியவந்துள்ளது.

Delhi Jnu University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment