Advertisment

வேலை வாய்ப்பு, யூடியூப் சேனல், பொய்யான வாக்குறுதிகள்: ரஷ்யா-உக்ரைன் போர் முனையில் இந்திய இளைஞர்கள் சிக்கியது எப்படி?

ரஷ்ய அரசாங்க அலுவலகங்களில் உதவியாளர்களாக வேலைக்கு விண்ணப்பிப்பதாக நம்பி அவர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்? அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ரஷ்யா-உக்ரைன் போர் முனையில் இருக்க வேண்டிய கட்டாயம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் அவர்களின் குடும்பத்தினரிடம் விரிவாகப் பேசியது.

author-image
WebDesk
New Update
Russia war

Job hunt, YouTube channel, false promises – how Indian youths landed on Russia-Ukraine war frontlines

காஷ்மீர் முதல் கர்நாடகம் வரை, குஜராத்தில் இருந்து தெலுங்கானா வரை, உக்ரைனுடன் ரஷ்யாவின் போரில் சிக்கித் தவிக்கும் இந்திய இளைஞர்களை இணைக்கும் நூல் - வேலைக்கான விரக்தி, நம்பிக்கையை அளித்த யூடியூப் சேனல், மாஸ்கோவில் தரையிறங்கிய பிறகு தெளிவாகத் தெரிந்த ஒரு பொய்.

Advertisment

ரஷ்ய அரசாங்க அலுவலகங்களில் உதவியாளர்களாக வேலைக்கு விண்ணப்பிப்பதாக நம்பி அவர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்? அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ரஷ்யா-உக்ரைன் போர் முனையில் இருக்க வேண்டிய கட்டாயம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் அவர்களின் குடும்பத்தினரிடம் விரிவாகப் பேசியது.

தெலுங்கானாவில் இருந்து ஐதராபாத்தை சேர்ந்த முகமது அப்சன் (30), நாராயண்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முகமது சுபியான் (23) ஆகியோர் முறையே நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் மாஸ்கோ சென்றனர்.

’’அவர்கள் ஏமாற்றுக்காரர்கள். அவர்களை பணியமர்த்திய ஏஜெண்ட் அவர்கள் மாஸ்கோவில் மட்டுமே வேலை செய்வார்கள் என்று கூறினார்; அதற்கு பதிலாக, அவர்களுக்கு 15 நாள் பயிற்சி அளிக்கப்பட்டு உக்ரைனில் விடப்பட்டனர், அங்கு அவர்கள் போரை எதிர்த்துப் போராடும் ரஷ்ய துருப்புக்களுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" என்று அப்சனின் சகோதரர் முகமது இம்ரான் கூறினார்.

’’அஃப்சன் மாஸ்கோவில் வேலை வாய்ப்பு கிடைத்தபோது, ​​ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார். மற்ற இளைஞர்களைப் போலவே அவருக்கும் முதல் மூன்று மாதங்களுக்கு மாதம் ரூ. 45,000 சம்பளம் வழங்கப்படும், அது படிப்படியாக ரூ. 1.5 லட்சமாக அதிகரிக்கும். ஒரு வருடம் பணிபுரிந்த பிறகு, அவர் ரஷ்ய பாஸ்போர்ட் மற்றும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இது ஒரு லாபகரமான சலுகை என்று கூறியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அதில் விழுந்தனர். நவம்பர் 9 ஆம் தேதி அஃப்சன் மாஸ்கோவிற்கு புறப்பட்டார்என்று இம்ரான் கூறினார்.

ரஷ்யா-உக்ரைன் எல்லையில் இருந்து அஃப்சன் கடைசியாக டிசம்பர் 31 அன்று வீடியோ கால் பேசினார். அதன் பிறகு, அவருடன் எந்த தொடர்பும் இல்லை; அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதை சமீபத்தில் கண்டுபிடித்தோம். மத்திய அரசு இதில் தலையிட்டு அவர்களை வெளியேற்ற ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார் இம்ரான்.

Russia war

சோர்வில் உள்ள ஆண்கள்: தெலுங்கானாவின் நாராயண்பேட்டையைச் சேர்ந்த முகமது சுபியான் (இடது) மற்றும் குல்பர்காவைச் சேர்ந்த முகமது சமீர் அகமது (வலது).

சுஃபியான் துபாயில் உள்ள பேக்கிங் நிறுவனத்தில் மாதம் ரூ.30,000 சம்பாதித்து வந்தார். "அவர் யூடியூப் சேனலை நடத்தும் பைசல் கான் என்ற முகவருடன் தொடர்பு கொண்டார், மேலும் மாஸ்கோவில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க மூளைச்சலவை செய்யப்பட்டார்" என்று சுபியானின் சகோதரர் சையத் சல்மான் கூறினார்.

ரஷ்ய அரசாங்க அலுவலகத்தில் உதவியாளராக வேலை என்று அவருக்குச் சொல்லப்பட்டது. அவருக்கு மாதம் ரூ. 1 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படும்  என்றும், ஓராண்டுக்குப் பிறகு குடியுரிமை வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. ஏஜெண்டிடம் கமிஷனாக ரூ.1.5 லட்சம் கொடுத்துவிட்டு இந்தியா வந்தார். ஏஜெண்ட் விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தார், சுஃபியான் டிசம்பர் 17 அன்று புறப்பட்டார், ”என்று சல்மான் கூறினார்.

பைசல் கான் மற்றும் அவரது யூடியூப் சேனல் பாபா வ்லாக்ஸ் (Baba Vlogs) மற்ற குடும்பங்களின் சாட்சியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன் சகோதரரிடம் வீடியோ அழைப்புகளில் பேசிய சுபியான், இந்தியாவில் இருந்து மற்ற இளைஞர்களுடன் தானும் ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மூன்று நாட்களுக்குப் பிறகு, பயிற்சிக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

முகாமில், ராணுவத்தில் இருந்து திரும்பிய மற்ற இந்தியர்களைப் பார்த்தார்கள். அவர்களுக்கு எலும்பு, கைகால்கள் உடைந்து இருந்தன.  மேலும் அவரும் அடிப்படைப் பயிற்சி பெறும் மற்றவர்களும் ராணுவ படைகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை சுபியான் அறிந்தார்.

பிப்ரவரி 27 அன்று, ட்ரோன் தாக்குதலில் சுஃபியான் கிட்டத்தட்ட கொல்லப்பட்டார். குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் (ஹெமில் மங்குகியா) பல ரஷ்ய வீரர்களுடன் கொல்லப்பட்டார். சுஃபியான் ஜனவரி 29 அன்று எங்களை அழைத்தார். அவர் மரணத்தை அருகில் இருந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார், மேலும் இந்தியாவுக்குத் திரும்ப ஆசைப்பட்டார். அதுவே அவரது கடைசி அழைப்பு, அன்றிலிருந்து அவரது ஃபோனை அணுக முடியவில்லை, எனவே அவர் மீண்டும் ராணுவத்தில் இருக்கிறார் என்று நாங்கள் கருதுகிறோம், ”என்று ஆட்டோரிக்ஷா டிரைவர் சல்மான் கூறினார்.

அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதா என்பது இரு குடும்பத்தினருக்கும் தெரியாது.

கர்நாடகாவின் குல்பர்காவைச் சேர்ந்த மூவரும் முகமது சமீர் அகமது, 23, சையத் இலியாஸ் ஹுசைனி, 22, மற்றும் அப்துல் நயீம், 23 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் துபாய் நிறுவனத்தில் சுஃபியானுடன் இணைந்து பணியாற்றி வந்தனர்.

சமீர் அகமதுவின் மூத்த சகோதரர் முஸ்தபா கூறுகையில், மாஸ்கோவில் வேலை இருப்பதாக ஏஜெண்ட் வெளிப்படையாக உறுதியளித்தார். "அவர்கள் போருக்கு அனுப்பப்படலாம் என்ற கவலையைக் கூட அவர் குறைத்தார், ஆனால் அங்கு சென்ற பிறகு, அவர்கள் ரஷ்ய துருப்புக்களுக்கு களத்தில் உதவுவார்கள் என்பதைக் கண்டறிந்தனர். சமீர் நான்கைந்து நாட்களுக்கு முன்பு போன் செய்து மிகவும் பயந்தான். அவரை பாதுகாப்பாக வெளியேற்ற இங்குள்ள அதிகாரிகளை அணுகுமாறு அவர் என்னிடம் கெஞ்சினார், ”என்று முஸ்தபா கூறினார்.

குஜராத்தைச் சேர்ந்த ஹெமில் என்ற இளைஞர், ட்ரோன் தாக்குதலில் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை அழைத்ததால் நான் இன்னும் அதிர்ச்சியடைந்துள்ளேன். இந்தியாவைச் சேர்ந்த மற்றவர்கள், அவரது உடலை ஒரு டிரக்கின் பின்புறத்தில் ஏற்றிச் சென்றனர்... அவர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். எங்களுக்கு பணம் வேண்டாம், அவர்களை திரும்ப கொண்டு வாருங்கள்,'' என்றார்.

 Russia war

முகமது இம்ரான் தனது சகோதரர் அஃப்சானின் புகைப்படத்துடன். (Express Photo)

சூரத்தைச் சேர்ந்த ஹெமில் மங்குகியா (23) பிப்ரவரி 21 அன்று இறந்தார். மற்ற இளைஞர்களைப் போலவே, பாபா வ்லாக்ஸ் சேனலில் யூடியூப் வீடியோ மூலம் போர் மண்டலத்திற்கான அவரது பயணம் தொடங்கியது.

அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவர் "டிசம்பர் 24 முதல் பணியில் அமர்த்தப்பட்டார்". "ஒரு நாளில் இரண்டு மணி நேரம் சேற்றைத் தோண்டி பதுங்கு குழிகளை உருவாக்குவதும், பின்னர் போர்முனையில் உள்ள ரஷ்ய வீரர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதும் அவர்களது வேலையாக இருந்தது. இயந்திர துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரு முகாமில் ஹெமிலுக்கு ஒரு மாத பயிற்சி அளிக்கப்பட்டது.

தெற்கு காஷ்மீரின் அவந்திபோராவில், ஆசாத் யூசுப் குமார், 32, தனது குடும்பப் பணியான போர்வெல் தோண்டுவதில் - போதிய வருமானம் கிடைக்காததால், வெளியே செல்ல ஆர்வமாக இருந்தார். அதிக லாபம் ஈட்டக்கூடிய ஒன்றைத் தேடி, மாநிலத்திற்கு வெளியே வேலை வாய்ப்புக்காக குமார் அடிக்கடி தனது போனை ஸ்கேன் செய்வார்.

அப்படி ஒரு தேடலின் போது தான் துபாயில் வேலை வாய்ப்பு இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்று அவருக்குக் கிடைத்தது. ஆழ்துளை கிணறு தோண்டுவதில் எப்போதும் வருமானம் இல்லை. அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார், மேலும் ஒரு சிறந்த வேலையை விரும்பினார், ”என்று குமாரின் சகோதரர் சஜாத் அகமது கூறினார்.

யூடியூப் சேனலை துபாயைச் சேர்ந்த பைசல் கான் நடத்துவதாக அஹ்மத் கூறினார். துபாயில் அறைகளை சுத்தம் செய்ய வேண்டும், சமையலறையில் வேலை செய்ய வேண்டும், நன்றாக சம்பாதிப்பார் என்று என் சகோதரரிடம் கூறப்பட்டது.

யூடியூப் சேனல் அடிக்கடி வளைகுடாவில் வேலைகளை விளம்பரப்படுத்துகிறது. ஒரு வீடியோவில், தான் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாகவும், மாதம் ரூ.80,000 சம்பாதிப்பதாகவும் பைசல் கான் கூறுகிறார்.

குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, குமார் தனது ஏஜெண்ட்அறிவுறுத்தலின் பேரில் மும்பைக்கு புறப்பட்டார். மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் சென்னையை விட்டு வெளியேறியதும் அவருடனான தொடர்பை இழந்தோம்என்று அவரது சகோதரர் கூறினார்.

ஜனவரியில் அகமதுவுக்கு தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. பேசியபோது அது தன் சகோதரன் என்பது தெரிந்தது.

"அவர்கள் துபாய் சென்றடைந்தபோது, ​​ரஷ்யாவில் வேலைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி அவர்களிடம் கேட்கப்பட்டது. மாஸ்கோவில் துப்புரவு வேலை என்று தான் நினைத்ததாக ஆசாத் என்னிடம் கூறினார். ஆனால் அவர்கள் ரஷ்யாவை அடைந்ததும், அவர்கள் நேரடியாக பயிற்சி மையத்திற்கு அனுப்பப்பட்டனர்,” என்று அஹ்மத் கூறினார்.

பயிற்சி மையத்தில் காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருடன் 11 பேர் ராணுவத்துக்கு அனுப்பப்பட்டனர்.

அன்றிலிருந்து குமார் தனக்கு அவ்வப்போது செய்திகளை அனுப்பியதாக அகமது கூறினார். "அவர் இப்போது உக்ரைன் எல்லையில் இருப்பதாக என்னிடம் கூறினார். அவர்கள் தலா இரண்டு பேர் கொண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் ஒரு யூனிட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தனது சகோதரர் ஒரு "பெரும் கும்பலுக்கு இரையாகிவிட்டார், அது துபாயில் வேலை தேடுபவர்களை கவர்ந்து பின்னர் உக்ரைனுக்கு எதிராக போராட ரஷ்யாவிற்கு அனுப்புகிறது", என்று அஹ்மது கூறினார்.

பஞ்சாபின் ஹோஷியார்பூரைச் சேர்ந்த குர்பிரீத் சிங், 23, போரிலிருந்து தப்பிக்க உதவி கேட்கும் மற்றொரு இளைஞர். அவர் அங்கு இறங்கிய விதம் வித்தியாசமாக இருந்தாலும், அவரும் ஒரு பொய்க்கு இரையாகிவிட்டார்.

குறைந்த பட்ஜெட்டில் பேக் பேக்கிங் பயணங்களில் பல வெளிநாடுகளுக்குச் சென்ற ஆர்வமுள்ள பயணி, புத்தாண்டு விழாவில் கலந்துகொள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்ல முடிவு செய்தார். அவரது உறவினர் சந்துவின் கூற்றுப்படி, அவர் டிசம்பர் 27 அன்று புறப்பட்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்குச் செல்வதற்கு முன்பு மாஸ்கோவில் சில நாட்கள் தங்கியிருந்தார். திருவிழாவில் கலந்து கொண்ட பிறகு, ரஷ்ய விசா அங்கு செல்லுபடியாகும் என்று நினைத்து வாடகை வண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பெலாரஸ் சென்றார்.

அவர் தடுத்து வைக்கப்பட்டு பெலாரஸ் ராணுவம் அவரை எல்லையில் ரஷ்ய ராணுவ வீரர்களிடம் ஒப்படைத்தது.

சட்டவிரோதமாக பெலாரஸுக்குள் நுழைந்ததன் மூலம் நாட்டின் சட்டங்களை மீறியதாக குர்ப்ரீத்திடம் ரஷ்ய பணியாளர்கள் கூறினார், மேலும் அவரை 10 ஆண்டுகள் சிறையில் அடைப்பதாக அச்சுறுத்தினர். அவரது செல்போன் மற்றும் பிற பொருட்களை கைப்பற்றி சிறையில் அடைத்தனர். அவர் பல மணிநேரம் கெஞ்சிய பிறகு, ரஷ்ய துருப்புக்கள் அவரை ஒரு மொழிபெயர்ப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர், அவர் சிறையில் அழுகுவதற்குப் பதிலாக, ரஷ்ய ராணுவத்தில் உதவியாளராக சேர வேண்டும் என்று அவருக்கு விளக்கினார்.

அவருக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என்றும், அவர் மாஸ்கோவில் தங்கி வேலை செய்வதாகவும் கூறப்பட்டது, ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார், இப்போது அவர் ராணுவத்தில் இருக்கிறார். எல்லா இடங்களிலும் குண்டுகள் விழுந்ததால், அவரும் மற்றவர்களும் தங்கள் உயிருக்கு பயப்படுகிறார்கள், ”என்று சந்து கூறினார்

கடந்த வாரம், வெளியுறவு அமைச்சகம், ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக பணிபுரியும் சுமார் 20 இந்திய பிரஜைகளை "முன்கூட்டியே வெளியேற்ற" இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகக் கூறியது.

"ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக பணிபுரிய 20-க்கும் மேற்பட்டோர் (இந்தியர்கள்) அங்கு சென்றுள்ளனர். அவர்களின் ஆரம்பகால வெளியேற்றத்திற்காக நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்" என்று வெளியுற அமைச்சக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

Read in English: Job hunt, YouTube channel, false promises – how Indian youths landed on Russia-Ukraine war frontlines

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment