கொரோனா தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கி, நாடு முழுவதுமான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது, தற்போது வரை பல லட்சம் பேர் நாடு முழுவதும் வேலையிழப்புக்கு உள்ளாகி, வாழ்வாதாரத்திற்காக திண்டாடி வருகின்றனர். ஒடிசாவை சேர்ந்த 40 வயதான ரஞ்சன் சாஹூவும் வேலையிழப்புக்கு உள்ளானவர்களில் ஒருவர். வேலையிழப்பினால் பல்வேறு சிரமங்களுக்கு உள்பட்ட நிலையில், தற்போது, சுமார் 70 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் தொழில்முனைவோராக உருவெடுத்திருக்கிறார். உத்வேகமும், ஊக்கமும் தரும் அவருடைய கதை உங்களுக்காக!
நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருந்த போது, வேலையிழப்புக்கு உள்ளான ரஞ்சன் சாஹூ, காகேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள தனது கிராமமான குந்தியில் தனது ஆடை உற்பத்தி நிறுவனத்தை தொடங்கினார். அங்கு, தொற்று நோயினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில், வேலையிழந்த 70 இளைஞர்களுக்கு தனது நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்,ஊரடங்கு விதிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, கடுமையான நிதிக் தட்டுப்பாடுகளை எதிர்கொண்ட அவர்,
கொல்கத்தாவில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரஞ்சன், கடந்த ஆண்டு ஊரடங்கு விதிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, கடுமையான நிதிக் தட்டுப்பாடுகளை எதிர்கொண்டார்.
கொல்கத்தாவில் வேலையிழப்புக்கு பின், நான் வீட்டிற்குத் திரும்பினேன். வீட்டில் வேலை ஏதும் இல்லாமல் இருந்தேன். ஊரடங்கு என்பதால் எங்கும் செல்ல முடியாது. எங்கும் செல்லமுடியாது. புதிய வேலை வாய்ப்புகள் இல்லாததால் என்னையும் எனது குடும்பத்தையும் நிலைநிறுத்துவதற்கு தேவையான எனது சேமிப்பு என்னிடம் இருந்தது. ஆனால், நிறைய பேருக்கு போதுமான சேமிப்பு இல்லை என்பதையும், தொடர்ந்து வேலை தேடுவதையும் நான் உணர்ந்தேன். எனது கிராமத்தில் ஜவுளி மற்றும் ஆடைத் தொழில்களில் பணியாற்றிய கேரளா மற்றும் சூரத்திலிருந்து நிறைய பேர் ஊர் திரும்பி இருந்தனர். அப்போது தான் நான் சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்க முடிவு செய்து, இந்த முயற்சியில் இறங்கினேன் என்று சாஹு இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
புவனேஸ்வரில் இருந்து சுமார் 110 கி.மீ தூரத்தில், கேந்திரபாரா மாவட்டத்தின் பட்டமுண்டாய் தொகுதியில் உள்ள குந்தி கிராமத்தில், சாஹு தனது முதல் ஆடை உற்பத்தி நிறுவனமான ராயல் கிரீன் கார்மென்ட் நிறுவனத்தை நிறுவியுள்ளார். 3,000 சதுர அடி பரப்பளவில், 45 தையல் இயந்திரங்களுடன், இந்த நிறுவனம் ஜனவரி முதல் செயல்பட்டு வருகிறது. வேலை இல்லாததால் சொந்த கிராமங்களுக்கு திரும்பிய 70 புலம்பெயர்ந்தோரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அவர்கள், இப்போது சாதாரண சட்டை, டீசர்ட் மற்றும் கால்சட்டை தயாரித்து வருகிறார்கள்.
சாஹு, 18 வயதில் பள்ளி படிப்பை கைவிட்டார். மேலும் தனது கிராமத்தைச் சேர்ந்த பலரைப் போலவே, ஒடிசாவிலிருந்து வேலைக்காக டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, சூரத் மற்றும் நேபாளம் போன்ற நகரங்களில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக ஆடைத் தொழிலில் பணிபுரியும் திறன்களைப் பெற்றுள்ளார்.
நம்மிடம் பேசிய அவர், ‘நான் நகரங்களில் பல்வேறு திறன்களில் பணியாற்றியுள்ளேன், பெரும்பாலும் உற்பத்தி மேலாளராக இருந்துள்ளேன். நான் சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்குவேன் என்று நினைத்ததில்லை. கொரோனா தொற்றுநோய் நிறைய விஷயங்களை மாற்றியுள்ளது. தேவை அதிகரிக்கும் போது மேலும் பலரை எனது நிறுவனத்தில் பணியமர்த்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்’ என்று கூறினார்.
குந்தி மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்களுக்கு, அவர் நெருக்கடி காலத்தில் ஒரு மீட்பராக இருந்து வருகிறார். 22 வயதான சாகரிகா பாண்டா, கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஆடை உற்பத்தி பிரிவில் பணிபுரிந்தார். மூத்த மகளான அவர், தனது குடும்பத்தை கவனித்து கொள்வதற்காக பணிக்கு சென்றார். அவரது தந்தை, ஒரு விவசாயி. கடலோர கிராமத்தில் ஃபானி சூறாவளி காரணமாக பெரும் இழப்பை சந்தித்தவர். இந்த சூழலில், வேலையில் சேர்ந்த சில மாதங்களிலேயே, கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்துள்ளார்.
முதல் ஊரடங்குக்கு பிறகு, என் பெற்றோர் கூட என்னை வேறொரு மாநிலத்திற்கு வேலைக்கு அனுப்ப தயங்கினர். கேரளாவில் இருந்து வீடு திரும்பிய பிறகு, எனக்கு வாழ்வாதார வாய்ப்பு எதுவும் இல்லை. பொருளாதார ரீதியாக நாங்கள் அன்றாடம் சிரமப்பட்டோம். தற்போது, இந்த அடை தயாரிக்கும் நிறுவனத்தில் ஒரு மாதத்திற்கு ரூ .6,000 சம்பாதிக்கிறேன் என பாண்டா கூறினார்.
இவரைப் போல சுமார் 70 பேர் சாஹூவின் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கால் வேலையிழந்த நிலையில், தற்போது தனது அயராத முயற்சியால் 70 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ள சாஹூ நம்மில் பலருக்கும் ரோல் மாடல் தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil