International News in Tamil : கொரோனா வைரஸ் பரவலின் மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் துணைத் அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் உடனடியாக தேவையான மருத்துவ உயிர்காக்கும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை அனுப்புவது உட்பட அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் அமெரிக்க மருத்துவமனைகள் உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி சிரமப்பட்டதால், இந்தியா அமெரிக்காவிற்கு உதவிகளை செய்தது. அதுபோலவே, இந்தியாவுக்கு உதவிகள் தேவைப்படும் இந்த நேரத்தில் உதவ நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’, என ஜோ பைடன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
கொரோனா உச்சத்தில் இருக்கும் தற்போதைய சூழலில், இந்தியாவுக்கு தேவையான ஆதரவு மற்றும் மருத்துவப் பொருட்களை விரைவாக வழங்க, அமெரிக்கா இந்திய அரசாங்கத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும், உதவிகளை வழங்குவதோடு இந்திய மக்கள் மற்றும் நாட்டின் தைரியமான சுகாதாரப் பணியாளர்கள் உட்பட அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் ட்வீட்டுகள் சமீபத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று நோய் உச்சத்தை தொட்ட நிலையில் வெளியாகும் முதல் எதிர்வினைகள் ஆகும். அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு உதவிக்கு தாமதமாக பதிலளித்ததற்காக அதிபர்கள் இருவரையும் அமெரிக்காவின் இந்திய நண்பர்களும், அவர்களது சொந்த கட்சித் தலைவர்கள் சிலரும் கூட விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்துவுடன், இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்திய நாட்களில், நெருங்கிய தொடர்பில் இருப்பதாக வெளியுறவுத்துறை செயலாளர் வெண்டி ஷெர்மன் தெரிவித்தார். மேலும், இந்த கடினமான காலங்களில் அமெரிக்க மக்கள் இந்தியாவில் உள்ள தங்களது நண்பர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள். சிகிச்சைகளுக்கான வென்டிலேட்டர்கள், பிபிஇ, தடுப்பூசிகளுக்கான மூலப்பொருள் மற்றும் பலவற்றை நாங்கள் விரைவாக வழங்குகிறோம் எனவும் ஷெர்மன் கூறியுள்ளார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தனது இந்திய பிரதிநிதி அஜித் டோவலுடன் பேசினார். அப்போது இந்தியாவில் உயிர்களை காப்பாற்ற மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை அவசரமாக அனுப்புவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த அறிவிப்பை அடுத்து, இதுவரை பைடன் நிர்வாகத்தை விமர்சித்த இந்திய-அமெரிக்க சமூகம் இந்த நடவடிக்கையை வரவேற்றது. பைடெனின் ட்வீட்டிற்குப் பிறகு, இந்த முக்கியமான நேரத்தில் எங்கள் அமெரிக்க இந்திய கூட்டாண்மை வேலை செய்வதில் மகிழ்ச்சியாக இருப்பதாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நம்பமுடியாத கடினமான நேரத்தில், இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா எவ்விதமான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பது குறித்து விவாதிக்க, அமெரிக்காவின் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்துவுடனான அழைப்பின் பேரில் இந்தியா காகஸ் தலைமையில் சேர எதிர்பார்ப்பதாக கன்னா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது இந்திய மக்களுக்கு மிகவும் கடினமான நேரம் மற்றும் கொரோனா தொற்றின் தொடர்ச்சியான அச்சுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வைரஸின் இந்த புதிய உருமாற்றங்கள் மிகவும் ஆபத்தானவை, மேலும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும், வைரஸையும் அதன் புதிய வகைகளையும் கட்டுப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.