Advertisment

ஒருவேளை நான் கொல்லப்பட்டால் அவர்கள் மீது யாரும் கோபப்படாதீர்கள்... அமெரிக்கப் பயணியின் இறுதி கடிதம்

நான் சாக விரும்பவில்லை... எனக்கு பயமாக இருக்கிறது என 13 பக்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் ஆலன் காவ்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
John Chau’s last letter

John Chau’s last letter

நீங்கள் என்னை முட்டாள் என நினைக்கலாம்... ஆனால் இம்மக்களுக்கு கிருத்துவ மதத்தை பரப்புவது அதி முக்கியமானது என்று நான் நினைக்கின்றேன். - John Chau’s last letter

Advertisment

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இருக்கும் சில கூட்டங்களில் இன்றளவும் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தொந்தரவு செய்யும் நோக்கில் யாரும் தீவுகளுக்கு செல்லக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. அந்த தீவு கூட்டங்களில் வடக்கு செண்டினல் தீவும் அடங்கும்.

27 வயதான அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் காவ் கிருத்துவ மதத்தை பரப்ப செண்டினல் தீவிற்கு செல்ல பெரும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அவரை செண்டினல் தீவு வரை அழைத்துச் செல்ல யாருக்கும் துணிவு வரவில்லை. இறுதியாக 7 மீனவர்களின் துணையுடன் வடக்கு செண்டினல் தீவிற்கு சென்றிருக்கிறார் ஆலன்.

முதல் நாள், வெளி உலகை சார்ந்த மனிதனை பார்த்த செண்டினல்கள் அவர் மீது கூறிய ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். கடலுக்குள் குதித்து நீச்சல் அடித்து, தன்னை அழைத்து வந்தவர்களின் படகுகளில் ஏறி தப்பித்துக் கொண்டார்.

13 பக்கங்கள் கொண்ட அந்த கடிதம் தன்னுடைய பயணங்கள் குறித்தும், அதில் சந்தித்த அனுபவம் குறித்தும் எழுதியிருக்கிறார். மிக முக்கியமாக அதில் இந்த பயணத்தில் என்னுடைய உயிரே போனாலும் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றும், நான் மிகவும் பயந்திருக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

எங்கே அமைந்திருக்கிறது இந்த வடக்கு செண்டினல் தீவு ?

இந்தியாவின் எல்லையில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைந்திருக்கிறது இந்த தீவு. வெளியுலக மனிதர்களுக்கு வரவேற்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பது தான் உண்மை. இப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு கிருத்துவ மதத்தை பரப்புவதற்காக பல முறை முயற்சித்து வந்திருக்கிறார் ஆலன்.

ஜான் ஆலன் காவ்  கடிதம் (John Chau’s last letter)

அமெரிக்காவில் இருக்கும் வாசிங்கடனைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஆலன். சாகச பயணங்களை அதிகம் விரும்பும் ஒருவர். ஓரல் ரோபர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். வடக்கு செண்டினல் தீவில் கிருத்துவ மதத்தை பரப்பும் நோக்கில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக அவரின் நண்பர்களிடம் கூறியிருக்கிறார். அந்த தீவிற்கு செல்லும் போது வாட்டர் ப்ரூஃப் பைபிள் வைத்திருந்தார்.

2006ம் ஆண்டு வழி தவறி அந்த தீவிற்குள் சென்ற இரண்டு மீனவர்கள் உயிருடன் திரும்பவில்லை. இந்நிலையில் மீனவர்கள் யாரும் ஆலனை செண்டினல் தீவிற்கு அழைத்து செல்ல விரும்பவில்லை. சிலருக்கு பணம் கொடுத்து குறிப்பிட்ட தூரம் வரை ஆலன் அழைத்து செல்லப்பட்டார்.

19ம் நூற்றாண்டில் இங்கிலாந்து கடற்படை வீரர் ஒருவர் அந்தமான் தீவுகளுக்குள் நுழைந்து சிலரை கடத்தி வந்திருக்கிறார். அவர் எழுதிய கடிதம் ஒன்றில் என்னுடைய முயற்சி தோல்வியை தழுவியது என்று குறிப்பிட்டிருக்கிறார். வெள்ளை மண் கொண்ட கடற்கரைகள், அடர்ந்த காடு, வெளிஉலகத்தை அறவே வெறுத்து அந்த தீவுக்குள்ளே இன்னும் வாழ்ந்து வருகிறார்கள் செண்டினல்கள். ஆமைகள், பன்றிகளை வேட்டையாடி உணவாக உட்கொண்டு வருகிறார்கள் இம்மக்கள்.

யாராலும் நிகழ்த்தப்பட இயலாத காரியத்தை நடத்திக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டார் ஆலன் என்று தான் கூற வேண்டும். மானுடவியலாளர்கள், படம் தயாரிப்பவர்கள், அரசு அலுவலர்கள் என பலர் அங்கு செல்ல முற்பட்டும் அவர்களுக்கு வில்லும் அம்பும் தான் பதிலாக கிடைத்திருக்கிறது.

மேலும் படிக்க : அந்தமான் நிக்கோபர் தீவுகள் உங்களின் கேளிக்கை பிரதேசம் அல்ல

John Chau’s last letter - ல் இடம்பெற்ற முக்கிய தகவல்கள்

குறிப்பிட்ட தூரம் வரை படகில் ஆலன் பயணம் செய்து, பின்னர் தன்னுடைய கயாக் மூலமாக செண்டினல் தீவிற்கு அருகில் சென்றிருக்கிறார். அப்போது அவரின் வருகையை கவனித்த செண்டினல்கள் அவரை முறைத்துக் கொண்டே முன்னேறி வந்திருக்கிறார்கள்.

அப்போது “என் பெயர் ஆலன். நான் உங்களை நேசிக்கின்றேன். இறைவன் உங்களை நேசிப்பாராக” என்று கூறிக்கொண்டு முன்னேறினேன்.

அவர்களுக்கு சில மீன்களை உணவாக கொடுக்க முயறிச் செய்தேன். ஆனால் அவர்கள் முன்னேறி வரவும் என்னுடைய கயாக்கினை மிக விரைவாக துடுப்பு போட்ட அந்த இடத்தில் இருந்து வெளியேறினேன். என் வாழ்நாளில் அப்படி வேகமாக கயாக் செய்ததில்லை என்று தன்னுடைய கடிதத்தில்

“அவர்களின் செயல்கள் எனக்கு மிகுந்த பயத்தை உருவாக்கியது. ஆனால் நான் மிகவும் ஏமாற்றத்துடன் தான் திரும்பினேன். அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது எனக்கு மிகவும் கவலை அளித்தது”

இப்படியான ஒரு பிரதேசத்திற்கு செல்ல முற்பட்டிருக்கிறார் ஆலன். அவர்களுக்கு தருவதற்காக கால்பந்து, கத்திரிக்கோல், ஊக்குகள், மீன்பிடிக்கும் உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் அவருடைய வருகையை செண்டினல்கள் நகைத்துக் கொண்டு வரவேற்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த ஆதி மனிதர்களின் தலைவர் ஒருவர் ஒரு பாறையில் நின்று கொண்டு ஆலனை பார்த்து கத்தினார். ஆலன் பதிலிற்கு ஆப்பிரிக்க பழங்குடி மொழிகளில் தெரிந்த நான்கு வார்த்தைகளை பாடலாக பாடிக் கொண்டு அருகில் சென்றிருக்கிறார்.

அவர்களுக்கு மீன்களையும், அன்பளிப்புகளையும் நான் தர முயற்சி செய்த போது, ஒரு பையன் தன்னுடைய பைபிளில் வில்லை எய்தினான் என்று தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஆலன்.

அதனை எடுத்து பார்த்த போது, கூர்மை மிக்க, மெட்டலால் செய்யப்பட்டது தெரிய வந்தது. அடுத்த இரண்டு நாட்களும் என்ன செய்வது என்று தெரியாமல் படகில் சுற்றிக் கொண்டு கடிதம் ஒன்றை எழுதி படகில் தன்னை அழைத்து வந்தவரிடம் கொடுத்து, நான் திரும்பி வரவில்லை என்றால் என் நண்பரிடம் இதை ஒப்படைத்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதில் “எனக்கு பயமாக இருக்கிறது... நான் சாக விரும்பவில்லை... அவர்களின் மண்ணில் கால் வைப்பது நடைமுறைக்கு சாத்தியமான விசயமா? என்று தெரியவில்லை” 

விசித்திரமாக இருக்கிறது.. ஆனால் இது தான் இயற்கை.. 

என்றெல்லாம் எழுதியிருக்கிறார் ஆலன்.

தீவில் தனியாக இருக்க முயன்ற ஆலன்

பின்னர் நவம்பர் 16ம் தேதி, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் இந்த தீவிலேயே தங்கிக் கொள்கின்றேன். நீங்கள் செல்லுங்கள் என்று தன்னை அழைத்து வந்தவர்களிடம் கூறிவிட்டு தனியாக அன்றைய இரவினை அந்த தீவின் ஓரம் கழித்திருக்கிறார் ஆலன்.

அடுத்த நாள் மீனவர்கள் வந்து பார்க்கும் போது, பழங்குடிகள் ஆலனின் உடலை கயிறு கொண்டு கட்டி இழுத்துச் சென்றிருக்கிறார்கள். யாருக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. காவல்துறையினர், ஆலனின் உடல் நிச்சயம் அங்கு தான் இருக்கும். ஆனால் எடுத்து வர யாராவது முற்பட்டால் அவர்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும் என அஞ்சுகிறார்கள்.

தன்னுடைய நோட்டின் இறுதியில் தன்னுடைய குடும்பத்திற்கு கடிதம் எழுதியபடி முடித்திருக்கிறார் ஆலன்.

ஒருவேளை நான் கொல்லப்பட்டால் அவர்கள் மீது யாரும் கோபப்படாதீர்கள்...

ஐ லவ் யூ ஆல்

ஜான் காவ்

என்று தன்னுடைய கடிதத்தை முடித்திருக்கிறார் ஜான் ஆலன் காவ்.

Andaman Nicobar Island
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment