Indian Air Force, IAF Agneepath Recruitment 2022 notification has been released online on June 20, 2022: அக்னிபாத் திட்டத்தின்கீழ் விமானப்படையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பாணையை விமானப்படை வெளியிட்டுள்ளது. ஜீன் 24ம் தேதி முதல் ஜீலை 5ம் தேதி வரை விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.
4 ஆண்டுகால ஒப்பந்த அடைப்பையில் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. வட மாநிலங்களான பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில்களை எரித்தனர். மேலும் போராட்டத்தை தடுத்து நிறுத்த துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்கார்கள் கொல்லபட்டனர்.

ஓய்வூதியம், பணி நிரந்திரம் என்று எந்த உத்தரவாதமும் இல்லாமல் இருக்கும் இந்த திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அரசியல் வல்லுநர்கள் மற்றும் எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முப்படைகளின் தளபதி பேசியபோது, போராட்டக்கார்களுக்கு ராணுவத்தில் வேலையில்லை என்றும் இத்திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேர ஜூன் 24ம் தேதி முதல் ஜீலை 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விமானப்படை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. careerindianairforce.cdac.in என்ற அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஜூலை 24ம் தேதி முதற்கட்ட ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.