பாட்னாவில் ஜூன் 12-ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “திங்களன்று பெரும்பாலான கட்சிகளை அணுகி, கலந்துகொள்ள ஒப்புக்கொண்டவர்கள் அந்தந்த தலைவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.
கூட்டத் தேதி மாற்றம் என்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கட்டமைப்பில் உள்ள தவறுகளின் ஒரு அறிகுறியாகும்.
இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தலைவர் ஒருவர், “ஜூன் 12ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை” என்றார்.
தொடர்ந்து, “தேதியை முடிவு செய்வதற்கு முன்னர் ஒவ்வொரு கட்சியையும் கலந்தோலாசிக்க வேண்டும் என்றேன். ஆனால் ஆலோசனை குறித்தோ, ஒத்திவைப்பு குறித்தோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், "தேதி மற்றும் இடம் குறித்து அனைத்துக் கட்சிகளிடமும் ஆலோசனை பெற்றிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது" என்று மற்றொரு தலைவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இருவரும் ஜூன் 12 கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமையை வெளிப்படுத்தியதன் நேரடி விளைவுதான் ஒத்திவைப்பு ஆகும்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியுடன் கலந்தாலோசித்து தேதி நிர்ணயம் செய்யப்படவில்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மே 22 அன்று, நிதிஷ், ஜே.டி.(யு) தேசியத் தலைவர் லாலன் சிங்குடன், டெல்லியில் கார்கே மற்றும் ராகுலைச் சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்களுடனான தனது பேச்சுவார்த்தைகளை அவர்களுக்குத் தெரிவித்தார்.
தொடர்ந்து, கூட்டு எதிர்க்கட்சி கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
ஜூன் 18 அன்று அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து ராகுல் காந்தி நாடு திரும்புகிறார். தொடர்ந்து, ஜூன் 20 க்குப் பிறகு கூட்டம் நடக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.
ஆனால் மற்ற கட்சிகளும் இந்த தேதியில் மகிழ்ச்சியடையவில்லை. திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஜூன் 12-ம் தேதி தங்களுக்கு சிரமமாக இருந்ததாக ஜே.டி.(யு) விடம் தெரிவித்ததாகத் தெரிகிறது. இந்த நேரத்தை மாற்றியமைக்க நிதிஷிடம் திமுக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்துக்குத் தங்களின் பிரதிநிதியாக மூத்த தலைவரும், மக்களவை எம்.பி.யுமான கனிமொழியை அனுப்புவதாக திமுக தெரிவித்தது. கார்கே மற்றும் ராகுல் இருவரும் கலந்துகொள்ளாததால், ஜூன் 12ம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு கட்சியின் முதல்வர்களில் ஒருவரை அனுப்பலாம் என்று காங்கிரஸ் கூறியது.
திங்களன்று பேசிய நிதிஷ், கூட்டம் தள்ளப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கருதுவதாகத் தெரிகிறது.
“ஜூன் 12ஆம் தேதி கூட்டத்தை காங்கிரஸும் மற்றொரு கட்சியும் எனக்கு பொருத்தமற்றதாகக் கருதியதைத் தொடர்ந்து நாங்கள் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. எனவே கூட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன், மற்ற கட்சிகளுடன் கலந்தாலோசித்த பிறகு புதிய தேதியை பரிந்துரைக்குமாறு காங்கிரஸை கேட்டுக் கொண்டேன்” என்றார்.
மேலும், நிதிஷ் குமார், “காங்கிரஸ் அதன் தலைவரைத் தவிர வேறு ஒருவரை அனுப்பலாம் என்ற எண்ணம் இருந்தது. இது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்றார்.
கட்சித் தலைவர்கள் இல்லாதது மாநாட்டின் தீவிரத்தன்மையைப் பறித்துவிடும் என்றும், காங்கிரஸ் தலைவர்கள் சிலர் முழுவதுமாக விட்டுக்கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டாததால், இது ஒரு ஆயத்த கூட்டமாக பார்க்கப்படக் கூடாது என்றும் கூறினார்.
இப்போதைக்கு, காங்கிரஸ் முன்னிலை பெறுவதில் பல கட்சிகள் சங்கடமாக இருப்பதால், எதிர்க்கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான அடித்தளத்தை நிதிஷ் செய்ய காங்கிரஸ் அனுமதித்துள்ளது.
திமுக, என்சிபி, ஆர்ஜேடி, ஜேஎம்எம் மற்றும் சிபிஐ(எம்) போன்ற காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்க்கட்சி முகாமில் இருப்பதாக ஒரு தலைவர் சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணியில் இருந்து வெகு தொலைவில் உள்ளவர்கள், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற மாநிலங்களில் அதன் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர்.
“காங்கிரஸின் கூட்டணி கட்சிகள் அல்லாதவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் காங்கிரஸைப் போலவே இருக்க வேண்டிய அவசியமில்லை” எனவும் ஒரு தலைவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.