பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான தேசிய பாதுகாப்புக் குழுவின் கீழ் தியேட்டர் கமாண்டர்களுக்கான முன்மொழிவுடன், ஒருங்கிணைந்த தியேட்டர் கட்டளைகளின் இறுதி வரையறைகளை ஆயுதப் படைகள் சுருக்கிவிட்டதாக உயர் அதிகாரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர்.
தியேட்டர் கட்டளைகளின் (theatre commands) கட்டமைப்புகள் அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் மேலும் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தியேட்டர்மயமாக்கல் (theaterisation) திட்டங்கள் ராணுவம், கடற்படை மற்றும் இந்திய விமானப்படை மற்றும் அவற்றின் வளங்களை குறிப்பிட்ட தியேட்டர் கமாண்ட்களில் ஒருங்கிணைக்க முயல்கின்றன.
தியேட்டர் கமாண்டர்களின் பணிகளை மேற்பார்வையிடும் பாதுகாப்புக் குழுவில், தலைமைப் பணியாளர்கள் குழுவின் (COSC) உறுப்பினர்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தலைமைப் பணியாளர்கள் குழு (COSC) ஆனது மூன்று சேவைத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவர் (CDS) ஆகியோரைக் கொண்டுள்ளது மற்றும் உயர் பாதுகாப்பு விஷயங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்கிறது.
தற்போதைய திட்டங்களின்படி, theaterisation திட்டங்களின் காரணமாக கட்டமைப்பு மாற்றங்கள் Vice CDS மற்றும் Deputy CDS நியமனம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம், என்று அதிகாரி கூறினார், அவர்கள் செயல்பாடுகள், உளவுத்துறை, திட்டமிடல், பயிற்சி, கொள்முதல் மற்றும் பிற பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை மேற்பார்வையிடுவார்கள்.
theaterisation திட்டங்கள், மூன்று சேவை தலைமையகங்களின் ஒட்டுமொத்த மாற்றத்தையும் சிறந்த ஒருங்கிணைப்பையும் உள்ளடக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி, மூன்று தியேட்டர் கமாண்ட்கள் முதலில் அமைக்கப்படும். ஒன்று பாகிஸ்தானையும், மற்றொன்று சீனாவையும் எதிர்கொள்ளும், மேலும் நாட்டின் கடலோர எல்லைகளுக்கு வெளியே கடல்சார் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க கடல்சார் தியேட்டர் கமாண்ட்.
இந்த தியேட்டர் கமாண்ட்கள் முறையே ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கார்வாரில் அமைய வாய்ப்புள்ளது.
தற்போதுள்ள ட்ரை-சர்வீஸ் ஏஜென்சிகளான சைபர், ஸ்பேஸ் மற்றும் ஸ்பெஷல் ஆபரேஷன்ஸ் பிரிவு - படிப்படியாக கமாண்ட்களுக்கு மேம்படுத்த - எதிர்காலத்தில் நான்காவது தியேட்டர் கமாண்டாக ஒருங்கிணைக்கப்படலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் இந்த திட்டம் இன்னும் விவாத கட்டத்தில் தான் உள்ளது.
தற்போது, ராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்கு தலா ஏழு கமாண்ட்களும், கடற்படைக்கு மூன்று கமாண்ட்களும் உள்ளன. தலைமையக ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் (HQIDS) தவிர- கூடுதலாக, இரண்டு முப்படை கட்டளைகள் உள்ளன -அந்தமான் நிக்கோபார் கட்டளை மற்றும் மூலோபாய படைகள் கட்டளை (SFC)
மூன்று சேவைகளில் ஒவ்வொன்றின் ஒரு வழக்கமான கமாண்ட்- தியேட்டர் கமாண்டாக மேம்படுத்தப்படும். அந்தமான் நிக்கோபார் கமாண்ட்டை- கடல்சார் தியேட்டர் கமாண்ட்டுக்குள் உட்படுத்துவது மற்றும் HQIDS ஐ CDS இன் கீழ் கொண்டு வருவது தற்போது விவாதத்தில் இருக்கிறது.
மூலோபாய படைகள் கட்டளை (SFC) தொடர்ந்து சுதந்திரமாக செயல்படும்.
மற்ற அனைத்து கமாண்ட்களும் அந்தந்த ஆபரேஷன் தியேட்டர்களை தொடர்ந்து கண்காணிக்கும் மற்றும் உளவுத்துறை, தளவாடங்கள், பயிற்சி, உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் மூன்று சேவைகளின் கூட்டுத்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.
இது ஒரு பெரிய இராணுவ சீர்திருத்தமாக கருதப்படுகிறது, தியேட்டர் கமாண்ட்களை உருவாக்குதல் மற்றும் அவற்றின் அமைப்பு மூன்று ஆண்டுகளாக விவாதத்தில் உள்ளது.
CDS ஜெனரல் அனில் சவுகான் theaterisation திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். வெவ்வேறு செயல்பாட்டு சூழ்நிலைகளில் theaterisation வேலைவாய்ப்பை ஆய்வு செய்ய மூன்று சேவைகளால் பல ஆலோசனைகள், ஆய்வுகள் மற்றும் டேபிள் டாப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எந்த தியேட்டர் கமாண்ட்டை, எந்த சேவை வழிநடத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
வான் பாதுகாப்புக் கமாண்ட்டை உருவாக்கும் முந்தைய theaterisation திட்டங்கள், இந்திய விமானப் படையின் ஆட்சேபனைகளைச் சந்தித்தன, இது தியேட்டர் கட்டளைகளை உருவாக்குவது அதன் சொத்துக்களை (fighting assets) பிரிக்கும் என்று கூறியது.
Read in English: Contours of joint theatre commands ready, await Govt nod before tweaks
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“