Journalist Barkha Dutt harassment Issue : பிரபல ஊடகவியலாளரான பர்கா தத்திற்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பிய இளைஞர்களை கைது செய்தது காவல் துறை. கடந்த பிப்ரவரி 19ம் தேதி, பர்கா தத்தின் தொலைபேசி எண் சமூக வலைதளங்களில், ”எஸ்கார்ட் சேவைகள் தேவைப்பட்டால் அழைக்க” என்ற போலி விளம்பரத்துடன் ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பர்கா தத் ஸ்மார்ட்போனிற்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள், ஆபாச குறுஞ்செய்திகள், மற்றும் ஆபாச புகைப்படங்களை மர்ம நபர்கள் அனுப்பி வைத்துள்ளனர். 1000க்கும் மேற்பட்ட இப்படி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்ததைத் தொடர்ந்து, சைபர் செல்லில் பிப்ரவரி 21ம் தேதி புகார் அளித்தார் பர்கா.
தீவிரமாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார் மூன்று நபர்களை டெல்லியிலும் ஒருவரை குஜராத் சூரத்திலும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது ஐபிசி 354-டி(stalking), 506 (threatening), 507 (criminal intimidation), 120-பி (criminal conspiracy), 67, 67-ஏ (publishing or transmitting of material containing sexually explicit act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய மூவரை பெயிலில் வெளியிட்டது காவல்துறை. புகைப்படங்களை அனுப்பியவரை 15 நாள் காவல்துறை விசாரணைக்காக ரிமாண்ட் செய்துள்ளனர்.
ராஜீவ் ஷர்மா (23) தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
ஹேம்ராஜ் குமார் (31) தனியார் உணவு விடுதியில் சமையற்கலைஞராக பணியாற்றி வருகிறார்.
ஆதித்யா குமார் சேல்ஸ் எக்ஸ்க்யூட்டிவாக பணியாற்றி வருகிறார்.
பின்ஜெரி என்பவர் கறிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இதில் ராஜீவ் ஷர்மா, ஹேம்ராஜ் குமார், ஆதித்யா குமார் ஆகியோரை பெயிலில் அனுப்பியுள்ளது டெல்லி காவல் துறை.
தேசிய பெண்கள் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, டெல்லி காவலர்களை துரிதப்படுத்தியால் மிக விரைவில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Journalist barkha dutt harassment issue delhi police arrested four
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை