“பாஜக மாநில தலைவர் கைது ஜனநாயகமற்ற செயல்” - ஜே.பி. நட்டா
கொரோனா விதிமுறைகளை மீறிய காரணத்தால் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது ஜனநாயகமற்ற செயல் என்று குற்றம்சாட்டியுள்ளார் ஜே.பி.நட்டா.
JP Nadda on Telangana BJP chiefs arrest : ஞாயிறு இரவு அன்று கரிம்நகர் நாடாளுமன்ற உறுப்பினரும், தெலுங்கானா பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான பந்தி சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செகந்தராபாத்தில் விளக்கேற்றி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.
Advertisment
புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாவட்டங்களுக்கு அரசு அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டது மற்றும் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டது தொடர்பான போராட்டத்தில் குமார் மற்றும் இதர நிர்வாகிகள் பங்கேற்றதின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ள நிலையில் போராட்டக்காரர்கள் கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை மீறியதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஆரம்பத்தில் ஜே.பி.நட்டாவின் போராட்டத்திற்கு ஐதராபாத் மாநகர காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர். பிறகு ஜே.பி. நட்டா மற்றும் இதர தலைவர்கள், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவோம் என்று கூறியதன் அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பேரணி போராட்டத்திற்கு பதிலாக பாஜகவினர் காந்தி சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்.
அதில் பேசிய ஜே.பி. நட்டா, குமாரின் கைதானது ஜனநாயகமற்ற செயல் என்று கூறிய அவர் மாநில அரசு அடக்குமுறையை கையாளுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil