Advertisment

அவதூறுகள் வந்தாலும் சரி, நில ஆர்ஜித சட்ட சாசன அமர்வில் இருந்து விலக முடியாது - அருண் மிஸ்ரா

என் மனசாட்சிப்படி நடந்து கொள்கிறேன். கடவுள் முன்பு நான் நேர்மையாக இருக்கிறேன் என விளக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilndu live updates ; justice mishra comments about about Delhi pollution

Tamilndu live updates ; justice mishra comments about about Delhi pollution

Ananthakrishnan G
Advertisment

Justice Arun Mishra refuses to recuse : அரசியல் சாசன அமர்வில் இருந்து விலக வேண்டும் என சமூக வலைதளங்களில் நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு எதிராக பலரும் தங்களின் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் நீதிபதி அருண் மிஸ்ராவோ ”என்னுடைய மனசாட்சி தெளிவாக இருக்கிறது. நான் கடவுளுக்கு முன்பு நேர்மையாக இருக்கின்றேன். எனவே அரசியல் சாசன அமர்வில் இருந்து விலக மாட்டேன் என்று பதில் அளித்துள்ளார். மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் மற்றும் சில உரிமையாளர்கள் “நில ஆர்ஜித சட்ட வழக்கினை விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் அரசியல் சாசன அமர்வில் அருண் மிஸ்ரா இருக்க கூடாது” என்று கூறிய பிறகு தன்னுடைய கருத்துகளை மேற்கூறியவாறு பதிவு செய்துள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி.

நில ஆர்ஜித சட்டம் தொடர்பான இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகள் இரண்டு விதமான தீர்ப்பினை வழங்கின. நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டத்தின் (Section 24 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 ) கீழ் வழங்கப்பட்ட இந்த தீர்ப்புகள் குறித்து விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் ஐவர் அடங்கிய அரசியல் சாசன அமர்வை உருவாக்கியது. அருண் மிஸ்ரா தலைமையில் இந்த அமர்வில் இந்திரா பானர்ஜீ, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, மற்றும் எஸ். ரவீந்திரபாட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

முதல் வழக்கினை விசாரித்த நீதிமன்ற அமர்வில் ஏ.கே. கோயல், மோகன்.எம். சந்தானகௌடவு, மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மற்றோரு வழக்கினை விசாரித்த அமர்வில் ஆர்.எம். லோத்தா,ச் மதன் பி. லோகூர், மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த இரண்டு அமர்விலும் இடம் பெறாதவர்கள் தான் அரசியல் சாசன அமர்வில் அமர்ந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என சமூக வலைதளங்களில் மூத்த வழக்கறிஞர்கள் உட்பட அனைவரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து மிஸ்ரா கூறுகையில் “இது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்று இல்லையா. என்னிடம் கூறியிருந்தால் நான் முடிவு செய்திருப்பேன். அதை விடுத்து ஏன் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி ஏன் அவதூறு பரப்ப வேண்டும். நீதிமன்றத்திலும் இது போன்ற சூழல் நிலவ முடியுமா? இதற்கு முன்பு இந்த விவகாரம் என்னிடம் வரவில்லை. தற்போது இந்த வழக்கு குறித்த முடிவுகளை எடுக்க என்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது என் நேர்மையின் காரணமாக தான்.

என்னுடைய தீர்ப்புகளுக்காக நான் விமர்சிக்கப்படலாம். ஆனால் என் மனசாட்சிக்கு உண்மையாகவும், கடவுள் முன் நான் நேர்மையாகவும் நடந்து கொள்கிறேன். என்னால் இந்த வழக்கில் ஏதேனும் மாற்றங்கள் நிகழக்கூடும் என்று நான் யோசித்தால், நானே இந்த அமர்வில் இருந்து வெளியேறிவிடுவேன் என்றும் அவர் கூறினார். இந்த அமர்வில் இருந்து ஏன் அருண் மிஸ்ரா வெளியேற்றப்பட வேண்டும் என ஷியாம் திவான் நினைக்கிறார் என்பதை விளக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அருண் மிஸ்ரா விலக வேண்டும் என்று ஷியாம் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். “இந்த விவாதம் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் அரசியல் சாசன அமர்வில் இருக்கும் மற்ற நீதிபதிகளையும் இது பாதிக்கும் ஏன் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித பார்வை இந்த தீர்ப்பின் மேல் இருக்கும்”  என்று கூறினார்.

அதற்கு திவான் “வெளியேற வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அதைப் பற்றி யோசனை செய்யுங்கள். முடிவை உங்கள் கையில் விட்டுவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

நீதிபதி ஷா ”சமூக வலைதளத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்பே ஏன் இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் நீதிபதிகளின் பார்வைக்கு கொண்டு வரப்படவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதி பாட் “ஒருவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் போது ஒரு வழக்கின் போக்கினை அவர் வேறுவிதமாக பார்ப்பார். அதன்படியே தீர்ப்பும் வழங்கியிருப்பார். ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் இருக்கும் போது வழக்கின் போக்கின் மீதான அவருடைய பார்வை வேறாக இருக்கலாம். அதற்காக அவரை அந்த அமர்வில் இருந்து நீக்கிவிட இயலுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment