/tamil-ie/media/media_files/uploads/2022/12/bilkis-bano.jpg)
2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஷ் பானோ
பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி பேலா எம் திரிவேதி செவ்வாய்கிழமை (டிச.13) விலகினார்.
2002 குஜராத் கலவரத்தின் போது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பானோ, இந்த வழக்கில் குற்றவாளிகளின் தண்டனையை மாநில அரசு ரத்து செய்ததை எதிர்த்து ஒரு மனு தாக்கல் செய்திருந்தார், அவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது "சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியது" என்று கூறினார்.
இந்த வழக்கை நீதிபதி திரிவேதி மற்றும் நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது, நீதிபதி ரஸ்தோகி தனது சகோதரி நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று கூறினார். இருப்பினும், நீதிபதி திரிவேதியின் பதவி விலகலுக்கான காரணம் எதையும் பெஞ்ச் குறிப்பிடவில்லை.
குற்றவாளிகள் 11 பேரும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர். இதற்கு எதிராக பானோ தாக்கல் செய்துள்ள வழக்கில், “உச்ச நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட சட்டத்தின் தேவையை முற்றிலும் புறக்கணித்து மாநில அரசு ஒரு இயந்திர உத்தரவை பிறப்பித்துள்ளது” என்றார்.
முன்னதாக ஜூலை 9, 1992 இன் கொள்கையின்படி குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான மனுவை இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கும் மனுவை பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசை கேட்டுக் கொண்டது.
2002 ஆம் ஆண்டு கலவரத்தில் இருந்து தப்பிச் செல்லும் போது பானோ கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது 21 வயது மற்றும் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது ஏழு குடும்ப உறுப்பினர்களும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.