Advertisment

நீதிபதிகளின் மீதான புகார்களுக்கு இடம் மாற்றம் தீர்வாகாது - உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்

செவ்வாய் கிழமை நடைபெற்ற புத்தக அறிமுக விழாவில் சந்திரசூட் இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Justice DY Chandrachud talks about transfer of judges

Justice DY Chandrachud talks about transfer of judges

Justice DY Chandrachud talks about transfer of judges :  உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் செவ்வாய் கிழமையன்று “How to Save a Constitutional Democracy” என்ற புத்தக அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசினார். சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் டாம் கின்ஸ்பெர்க் என்பவர் எழுதிய புத்தகம் இதுவாகும்.  இதன் அறிமுக விழாவில் பேசிய சந்திரசூட், நீதிபதிகள் மீது வைக்கப்படும் புகார்களுக்கு அவர்களை பணியிடம் மாற்றுவது தீர்வாகாது என்று கூறியுள்ளார்.

Advertisment

கொலிஜியத்தின் பரிந்துரையால் மேகலாயாவிற்கு இடம் மாற்றம் பெற்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தஹில் ரமானி. இது தொடர்பான முறையான விளக்கங்கள் அவருக்கு அளிக்கப்படாததால் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த சனிக்கிழமை அன்று ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் நீதித்துறை குறித்தும் நீதிபதிகளின் பணியிட மாற்றங்கள் குறித்தும் சந்திரசுட் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க 

நீதி அமைப்புகளுக்கான சுதந்திரம் என்பது விதிமுறைகளாலும் நடவடிக்கைகளாலும் பின்பற்றப்படுவதில்லை மாறாக தேவையற்ற மறைமுக தாக்குதல்களில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார். நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து அவர் பேசுகையில் “நீங்கள் உங்கள் நீதிபதிகளை நம்ப வேண்டும்” என்றும் அவர் கூறினார். சமமாக இயங்கும் வகையில் தான் நீதித்துறை செயல்பட்டு வருகிறது. இதே விழாவில் பங்கேற்று பேசினார் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தர். இந்த நாட்டின் நீதி அமைப்புகள் தான் இந்த நாட்டின் ஜனநாயகத்தை காத்து வருகிறது என்று அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் உச்ச நீதிமன்றம், இங்கிலாந்து பிரதமர் அந்நாட்டு பாராளுமன்றத்தை சஸ்பெண்ட் செய்தது சட்டத்திற்கு புறம்பானது என்று நீதி வழங்கியதை மேற்கோள்காட்டி பேசினார். இந்திய ஜனநாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அம்சங்கள் குறித்து பேசினார் சந்திரசூட். ஜனநாயகம் ஒரே மூச்சில் அழிக்கப்பட்டு விடுவதில்லை. ஆனால் ஆங்காங்கே நிகழும் சிறு சிறு நிகழ்வுகள் இந்திய ஜனநாயத்திற்கும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. இதனை சரி செய்யும் பொருட்டு நீதிபதிகள் இந்த விசயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க : மிகக் குறைவான நேரம் பணியாற்றியதே தஹில் ரமானியின் இடமாற்றத்துக்கு காரணம் – கொலிஜியம்

நீதிமன்றங்களில் இருக்கும் நீதிபதிகள் பற்றாக்குறை குறித்து பேசிய அவர், நீதிமன்றங்களுக்கு தேவையான நீதிபதிகளை பணியில் அமர்த்துவதில் அதிக தொய்வு ஏற்படுகிறது. இடைக்கால நீதிபதிகளை உயர் நீதிமன்றங்களில் அமர்த்துவது ஏன் இன்று இன்னும் புரியவில்லை. உச்ச நீதிமன்றத்திலும் கூட கேசவானந்த பாரதியின் வழக்கை விசாரிக்க 13 நீதிபதிகள் தேவைப்பட்டனர். தினம் தோறும் நடத்தப்படும் வழக்கில் மூன்று இடைக்கால நீதிபதிகள் பணியில் அமர்த்தப்பட்டனர்.  உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுகளை அறிவிப்பதற்கான வயது குறித்தும் அவர் பேசினார். 62 வயது என்பது மிகவும் குறைந்த வயது தான். அதனால் 65 வயது வரை அவர்கள் வேலை பார்க்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

Supreme Court Justice D Y Chandrachud
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment