Advertisment

இந்தியாவின் 47வது தலைமை நீதிபதியாகும் எஸ் ஏ பாப்டே - நவ.18ம் தேதி பதவியேற்பு

இந்தியாவின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நவம்பர் 18-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி வரை அவர் அப்பதவியில் நீடிப்பார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Justice S A Bobde to take oath as next Chief Justice of India on November 18 - இந்திய தலைமை நீதிபதியாக நவ.18ம் தேதி பதவியேற்கும் எஸ் ஏ பாப்டே - ஜனாதிபதி ஒப்புதல்

Justice S A Bobde to take oath as next Chief Justice of India on November 18 - இந்திய தலைமை நீதிபதியாக நவ.18ம் தேதி பதவியேற்கும் எஸ் ஏ பாப்டே - ஜனாதிபதி ஒப்புதல்

இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம் வரும் நவம்பர் 17-ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து, இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டே நியமனம் செய்ய, நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்து இருந்தார்.

Advertisment

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பரிந்துரையை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நவம்பர் 18-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி வரை அவர் அப்பதவியில் நீடிப்பார்.

யார் இந்த நீதிபதி எஸ் ஏ பாப்டே?

இரண்டாவது மிக மூத்த நீதிபதியான எஸ் ஏ போப்டே மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும், பல முக்கிய பெஞ்சுகளில் அங்கம் வகித்தும் வருகிறார். மும்பை மகாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலைக்கழகம், நாக்பூரின் மகாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றி வரும் பாப்டே, 2021 ஏப்ரல் 23 அன்று ஓய்வு பெற உள்ளார்.

வழக்கறிஞர்கள் குடும்பத்தில் இருந்து வந்த பாப்டே, 1978 இல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். செப்டம்பர் 13, 1978ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் பயிற்சி பெற்று, பின்னர் 1998ல் மூத்த வழக்கறிஞரானார். மார்ச் 29, 2000 அன்று பாம்பே உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக போப்டே நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 12, 2013 அன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார்.

ஆதார் வழக்கு, தற்போதைய அயோத்தி வழக்கு போன்ற குறிப்பிடத்தக்க வழக்குகளின் பெஞ்ச்களில் பாப்டேவும் அங்கம் வகிக்கிறார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment