Advertisment

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி... நீதிபதி சஞ்சீவ் கண்ணா யார்?

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Sanjeev kannaa

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 

Advertisment

நவம்பர் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான டி.ஒய். சந்திரசூட், நவம்பர் 10-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Justice Sanjiv Khanna appointed next Chief Justice of India, will enter office Nov 11

இது குறித்து அரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசியலமைப்பின் சாசனம் 124-ஆம் பிரிவின் கீழ், சஞ்சீவ் கண்ணாவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெறவுள்ளதால், அவர் ஆறு மாத காலத்திற்கு மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கவுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞராக பட்டம்பெற்ற சஞ்சீவ் கண்ணா, 1983-ஆம் ஆண்டு, தன்னை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு டெல்லி உயர்நீதிமன்ற வழக்குகளில் பணியாற்றி வந்தார். கடந்த 2005-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, வருமான வரித்துறையின் முதன்மை ஆலோசகராகவும், டெல்லி அரசின் குடிமையியல் ஆலோசகராகவும் சஞ்சீவ் கண்ணா பணியாற்றினார்.

நீதித்துறையில் சஞ்சீவ் கண்ணாவின் குடும்பத்தினர் கோலோச்சியிருந்தனர். குறிப்பாக, அவரது தந்தையான தேவ்ராஜ் கண்ணா டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். மேலும், அவரது மாமா ஹன்ஸ் ராஜ் கண்ணாவும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியவர். சஞ்சீவ் கண்ணா பணியாற்றிய அதே நீதிமன்ற அறையில் ஹன்ஸ் ராஜ் கண்ணாவின் உருவப்படம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றவர்களுடன் அதிகம் பேசாமல், தனிப்பட்ட நபராக கருதப்படும் சஞ்சீவ் கண்ணா, சுமார் 20 ஆண்டு காலம்  டெல்லி நீதித்துறையில் பணியாற்றினார். அவரது பணிகாலத்தில், தற்போது வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ற பொறுப்பே, அவர் வகிக்க இருக்கும் அதிகபட்ச பதிவியாக கருதப்படுகிறது. சஞ்சீவ் கன்னா தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்ற சஞ்சீவ் கண்ணா, தற்போது வரை உச்சநீதிமன்றத்தில் பணியாற்றுகிறார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிக்காத போதிலும், மற்ற மூத்த நீதிபதிகளைக் கடந்து அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. நீதிபதிகள் ராஜேந்திர மேனன் மற்றும் பிரதீப் நந்திரஜோக் ஆகியோரையே உச்சநீதிமன்ற கொலிஜீயம்  நியமனத்திற்காக தேர்வு செய்திருந்தது. ஆனால், அவர்களின் பெயர்கள் அரசுக்கு அனுப்பப்படாததால், சஞ்சீவ் கண்ணா தேர்வு செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நீதிபதியாக பணியாற்றிய சஞ்சீவ் கண்ணா, பல்வேறு முக்கிய தீர்ப்புகள் வழங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்தார். அதன்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு, 370 சிறப்பு பிரிவு நீக்கம் உள்ளிட்ட தீர்ப்புகள் வழங்கிய அமர்வில் அவர் இடம்பெற்றிருந்தார். மேலும், அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் நேரடியாக விவகாரத்து வழங்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என கடந்த 2023-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய அமர்வில், சஞ்சீவ் கண்ணா முக்கிய பங்கு வகித்தார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Supreme Court Of India Justice D Y Chandrachud
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment