Advertisment

மிகக் குறைவான நேரம் பணியாற்றியதே தஹில் ரமானியின் இடமாற்றத்துக்கு காரணம் - கொலிஜியம்

தமிழக அரசியல் தலைவர்களின் நட்பு மற்றும் சென்னையில் புதிதாக வாங்கிய இரண்டு சொத்துகள் ஆகியவையும் காரணமாக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மிகக் குறைவான நேரம் பணியாற்றியதே தஹில் ரமானியின் இடமாற்றத்துக்கு காரணம் - கொலிஜியம்

Seema Chishti, Arun Janardhanan

Advertisment

Justice Tahilramani transfer : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார் தஹில் ரமானி. ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் தஹில் ரமானி தன்னுடைய ராஜினாமாவை அறிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து அவர் மேகாலயா நீதிமன்றத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு முறையாக காரணங்கள் வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

கொலீஜியம் தஹில் ரமானியை ஏன் இடம் மாற்றம் செய்தது என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மூன்று முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. ஒன்று, அவர் நீதிமன்றத்தில் செலவிட்ட மிகக் குறைவான நேரம், தமிழகத்தின் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் நட்பில் இருப்பது, மற்றும் சென்னையில் இரண்டு இடங்களில் சொத்துக்கள் வாங்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

To read this article in English

செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தஹில் ரமானி, தனக்கு கொடுத்த இடம் மாற்றத்தை நிராகரிக்கும் விதமாக தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். 21ம் தேதி அவருடைய ராஜினாமா கடிதம் குடியரசுத் தலைவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதிதாக வி. கோத்தாரி ஆக்டிங் சீஃபாக பொறுப்பேற்றுள்ளார். செப்டம்பர் மாதம் 12ம் தேதி, இவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரிதான் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதற்கான காரணங்கள் அளிக்கப்படவில்லை. இவரின் இடம் மாற்றம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பு வகிக்கும் மூன்று நீதிபதிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்பு, பல நாட்கள் மதியத்திற்கு மேல், நீதிமன்ற வளாகத்தில் தஹில் ரமானி இருப்பது இல்லை. அவருக்கு வரும் வழக்குகள், மற்ற நீதிபதிகளின் விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தான் நிலவுகிறது என்று தகவல்கள் அறிவிக்கின்றன.

ஜூன் மாதம் 4ம் தேதி நடைபெற்ற சிலை திருட்டு வழக்கினை விசாரித்த வண்ணமும், விவரிக்க முடியாத வகையிலும், திடீரென்றும் தீர்த்த வைக்கப்பட முறையும் கூட ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. சிலை திருட்டு வழக்கை விசாரிப்பதற்கான அமர்வை முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானெர்ஜீ மைத்து வைத்தார். இரண்டு நீதிபதிகளைக் கொண்ட இந்த அமர்வு தான், தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் உத்தரவை ரத்து செய்து பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பான பல்வேறு வேலைகள் நிலுவையில் இருக்கின்ற நிலையில், இந்த வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் 58 நீதிபதிகளில் 15 நீதிபதிகளின் சொத்துமதிப்பு இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த 15 நீதிபதிகளில் தஹில் ரமானி இடம் பெறவில்லை. இது தொடர்பாக நீதிபதியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் அவரிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய உதவியாளர் இது குறித்து குறிப்பிடுகையில், பிரச்சனைகள் அனைத்தும் முடிந்துவிட்டது. அதனால் அது குறித்து தஹில் ரமானி யாரிடமும் பேசவிரும்பவில்லை என்று அவர் குறிப்பிடார். தற்போது அவர் ஊரில் இல்லையென்றும், இது குறித்து எந்த கருத்தும் தர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆளுங்கட்சியின் நட்பு மற்றும் சென்னையில் இரண்டு சொத்துகள் வாங்கியது தொடர்பாக அவரை தொடர்பு கொள்ள முயன்றோம். அது தோல்வியில் முடிவடைந்தது.

இடமாற்றத்திற்கு சரியான காரணங்கள் ஏதும் வழங்கப்படாததால், தஹில் ரமானியின் இடம் மாற்றம் தொடர்பான உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என்று பொது நல வழக்கு ஒன்று பதியப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஆர். பிரபாகரன் பொதுநல வழக்கு பதிவு செய்தார். அந்த மனுவில் அவர், கொலிஜியத்தின் முடிவு தெளிவானதாகவும், வெளிப்படை தன்மையும் அற்றதாக இருக்கிறது என்று கூறியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து தலைமை நீதிபதி, மேகலயாவின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அறிவித்துள்ளனர், அதற்கான காரணங்களை பொதுவில் வைக்க வேண்டும். மேலும், ஒரு தலைமை நீதிபதியின் இடமாற்றம் குறித்த முடிவுகளை குடியரசுத் தலைவர் தான் மேற்கொள்ள வேண்டும். கொலீஜியம் அது தொடர்பான முடிவுகளை எடுக்க இயலாது என்று அவர் கூறினார். இப்படி இடம் மாற்றம் அளிக்கப்படும் போது, சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் அவர்களின் ஒத்திசைவை கேட்பதும் வழக்கம். ஆனால் தஹில் ரமானியிடம் ஒத்திசைவும் கேட்கவில்லை. இடமாற்றத்திற்கான காரணங்களையும் வழங்கவில்லை என்றும் அவர் அறிவித்தார்.

எங்களிடம் பெர்ஃபார்மன்ஸ் கமிசன் இல்லை. மேலும் கொலீஜியம் தஹில் ரமானி மீது வைத்த புகார்கள் ஆதாரமற்றவை. அவர்கள் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை முறையாக அரசுக்கு தெரிவித்து நடவடிக்கைகள் தான் எடுத்திருக்க வேண்டும். அவருடைய பங்களிப்பு நன்றாக இருக்கிறது என்று தான் அவரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அறிவித்தார்கள். ஆனால் தற்போது அவரை இவ்வாறு குறை சொல்வது சரியா என்றும் கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞர் பிரபாகரன்.

இந்தியாவில் தஹில் ரமானி மூத்த நீதிபதிகளில் ஒருவராவார். 2001ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர் நீதிபதியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி 2018ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பில்கிஸ் பானோ போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை அவர் விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment