டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14-ஆம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உள் விசாரணை நடைபெறுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Justice Yashwant Varma stays away from court, police & fire service silent on incident
இது தொடர்பான விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்ய வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ஒருவர் முன்வைத்தார். இதற்கு வாய்மொழியாக பதிலளித்த தலைமை நீதிபதி உபாத்யாயா, அது குறித்து கவனிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தலைமை நீதிபதி பெஞ்ச் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் அருண் பரத்வாஜ், "இந்த சம்பவம் நம்மில் பலரை வேதனைப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், நீதித்துறையின் உண்மைத் தன்மை காக்கப்படவும் நிர்வாகத் தரப்பில் சில நடவடிக்கைகளை எடுக்கவும்" என வலியுறுத்தினார்.
இதற்கு, "அனைவரும் அப்படித்தான்... நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்" என்று தலைமை நீதிபதி உபாத்யாயா பதிலளித்தார்.
இது குறித்த மேலும் பல தகவல்களை பெற நீதிபதி வர்மாவின் அலுவலகம் மற்றும் ஊழியர்களிடம் தி இந்திய எக்ஸ்பிரஸ் முயற்சி செய்த போது எந்த பதிலும் கிடைக்கவில்லை.
நீதிபதி வர்மாவின் வீட்டில் மார்ச் 14 அன்று நிகழ்ந்த தீ விபத்து குறித்து, டெல்லி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருந்தனர்.
இந்த சம்பவம் குறித்த டெல்லி தீயணைப்பு துறை அறிக்கையில், வீட்டு பொருட்கள் மற்றும் கல்வி உபகரணங்களில் தீப்பற்றியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் தீயை அணைத்ததாக டெல்லி தீயணைப்புத் துறைத் தலைவர் அதுல் கர்க் தெரிவித்தார். எனினும், வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, "இது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
மார்ச் 14 அன்று இரவு 11.30 மணியளவில் நீதிபதியின் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை மற்றும் உள்ளூர் போலீஸாருக்குத் தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும், துக்ளக் சாலை காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் குழுவும், டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தினசரி நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முறைகேடு குறித்து எந்த புகாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
அக்டோபர் 11, 2021 அன்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக வர்மா நியமிக்கப்பட்டார். முன்னதாக, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக அவர் பதவி வகித்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில், நிர்வாகத் தரப்பில், நீதிபதி வர்மா குறைந்தது 11 குழுக்களில் இடம்பெற்றுள்ளார். இதில் நிர்வாகம் மற்றும் பொது மேற்பார்வைக் குழு, நிதி மற்றும் வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட குழுக்களும் அடங்கும். அவர் டெல்லி சர்வதேச நடுவர் மையத்தின் நடுவர் குழுவின் தலைவராகவும், டெல்லி உயர்நீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
வர்மா, அக்டோபர் 2014 இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், பிப்ரவரி 2016 இல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார்.
2018-ஆம் ஆண்டில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மருத்துவர் கஃபீல் கானுக்கு நீதிபதி வர்மா ஜாமின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Sohini Ghosh , Alok Singh, Ajoy Sinha Karpuram