காங்கிரசில் இருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா விலகல் - பா.ஜ. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார்?...
Maharashtra crisis : காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா விலகியுள்ள நிலையில், அவரைத்தொடர்ந்து 6 மாநில அமைச்சர்கள் உட்பட 19 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளனர்.
Maharashtra crisis : காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா விலகியுள்ள நிலையில், அவரைத்தொடர்ந்து 6 மாநில அமைச்சர்கள் உட்பட 19 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா விலகியுள்ள நிலையில், அவரைத்தொடர்ந்து 6 மாநில அமைச்சர்கள் உட்பட 19 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளனர்.
Advertisment
மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, சிந்தியா உள்ளிட்டோரின் ராஜினாமாவால் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடனிருந்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக, தனது ராஜினாமா கடிதத்தை, கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார்.
Advertisment
Advertisements
ராஜினாமா கடிதம்
சிந்தியா, தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, 18 ஆண்டுகாலம் இருந்த காங்., கட்சியில் இருந்து வெளியேறும் நேரம் வந்து விட்டது. மக்களின் சேவையாற்ற விரும்பினேன் .ஆனால் இது காங்., கட்சியில் செய்ய முடியவில்லை. மக்கள், தொண்டர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக எனது புதிய பயணத்தை துவக்க உள்ளேன். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நீக்கம் : சிந்தியா, தனது ராஜினாமா கடித்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட சிறிதுநேரத்தில், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
ராஜினாமா ஏற்பு : சிந்தியாவின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. கட்சி ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதால்,, அவர் உடனடியாக காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் கே சி வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் தந்தை மாதவராவ் சிந்தியாவின் 75 வது பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த நேரத்தில், சிந்தியா இந்த முடிவு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரசின் இரட்டை முகம் - சிவராஜ் சிங் சவுகான் கருத்து : சிந்தியா காங்கிரசில் இருந்தபோது அவரை மகாராஜா என்று அழைத்து வந்த காங்கிரஸ் கட்சியினர், தற்போது அக்கட்சியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவரை மாபியா என்று குற்றம் சாட்டுகின்றனர். இதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளதாக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
பா.ஜ.,வில் சிந்தியா? : சிந்தியாவின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், 19 எம்எல்ஏக்களின் ராஜினாமாவையும் சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில், காங்கிரஸ் கட்சியின் பலம் 95 ஆக குறையும். சிந்தியா, பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பா.ஜ, மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஜோதிர் ஆதித்ய சிந்தியா பெயர் அறிவிக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
230 உறுப்பினர்கள் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில், காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்எல்ஏக்கள் உள்ளனர். 4 சுயேட்சைகள், ஒரு சமாஜ்வாடி மற்றும் 2 பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கமல்நாத்திற்கு இருந்தது.
பா.ஜ. கட்சிக்கு 109 எம்எல்ஏக்கள் உள்ளனர். இரண்டு இடங்கள் காலி இடங்களாக உள்ளன.
6 அமைச்சர்கள் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள், கமல்நாத்திற்கு எதிராக அதிருப்தியில் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
அதிருப்தி அமைச்சர்கள் : தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மகேந்திர சிசோடியா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் இமார்தி தேவி, போக்குவரத்து துறை அமைச்சர் கோவிந்த் ராஜ்புட், சுகாதாரத்துறை அமைச்சர் துளசி சிலாவத், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரி, உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் பிரதியும்னா தோமர் உள்ளிட்டோர் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்துள்ளனர்.
பாதிப்பு : சிந்தியாவின் விலகல், காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் பாதிப்பை ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு சிந்தியா நெருக்கமாக இருந்த நிலையிலும், கமல்நாத் அண்ட் கோவினர், சிந்தியாவிற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காததே, சிந்தியாவின் இந்த முடிவுக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
முதல்வர் கமல்நாத் பெரும்பான்மை இழந்துள்ள நிலையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங், கவர்னரை சந்தித்து முறையிட உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேச அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள இந்த விவகாரத்திற்கு தீர்வு கிடைக்க இன்னும் சில தினங்களில் பரபரப்பான அரசியல் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.