/indian-express-tamil/media/media_files/5oWtbhZv3jom2DSih5EP.jpg)
“மக்கள் ‘டபுல் என்ஜின்’ அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களுடன் தொடர விரும்புகிறார்கள் ... சிவ்ராஜ் சவுகான் கடந்த 15 ஆண்டுகளில் ஏராளமான பணிகளைச் செய்துள்ளார்” என்று ஜோதிராதித்யா சிந்தியா கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Even when in Congress, I had wonderful ties with many in the BJP. The BJP was always home’: Jyotiraditya Scindia
மத்திய பிரதேசத்தில் குவாலியர்-சம்பல் பிராந்தியத்திற்கான போட்டி, இந்த பிராந்தியத்தின்34 சட்டமன்ற இடங்களுடன், மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிண்டியாவுக்கு அரசியல் மற்றும் தனிப்பட்ட முறையில் நெருக்கமானதாகும். முந்தைய குவாலியர் அரச குடும்பத்தின் வாரிசாகவும், நீண்டகாலம் காங்கிரஸ் முகமாக இருந்து பா.ஜ.க தலைவராக மாற்றப்பட்ட ஜோதிராதித்யா சிந்தியா தான் சேர்ந்துள்ள புதிய கட்சிக்கு தனது செல்வாக்கை நிரூபிக்க இங்கு போதுமான இடங்களை வெற்றிகொள்ள வேண்டும். வியாழக்கிழமை, ஷிவ்புரியின் பிச்சூரில் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் இடையே கிட்டத்தட்ட 90 நிமிடம் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினர்.
பின்னர், ஜோதிராதித்யா சிந்தியா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசினார்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஆட்சியில் இருந்துள்ள பா.ஜ.க. ஆட்சிக்கு எதிரான போக்கை சமாளிக்க முடியுமா?
உங்கள் கேள்வியில் ஒரு தடுமாற்றம் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை. 2003-ல் இருந்த தனிநபர் வருமானம் ரூ.11,410-ல் இருந்து ரூ.1,40,062 ஆக உயர்ந்தாலும், 18 ஆண்டுகளாக தனது தகுதியை நிரூபித்த அரசு, பிமாரு (BIMARU) என்ற கருப்பு புள்ளியை நீக்கி நிகரில்லாத மாநிலமாக மாற்றியுள்ளது. சாலையின் நீளத்தை 44,000 கிமீ முதல் 5,00,000 வரை விரிவாக்கம் செய்துள்ளது... அல்லது மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. மக்களுக்கு இன்னும் ஏதாவது வேண்டுமானால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரின் டபுள் என்ஜின் அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டத்தை மக்கள் தொடர விரும்புகிறார்கள்.
சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக ஆழ்ந்த கோபம் இல்லாவிட்டாலும், அந்தப் பிராந்தியத்தில் நாங்கள் தொடர்ந்து கேட்ட வார்த்தை பத்லாவ் (மாற்றம்) வேண்டும் என்பதுதான்.
கடந்த 15 ஆண்டுகளில் சிவராஜ் சிங்ஜி ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளார் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்... நான் முன்பே கண்டறிந்த பல காரணங்களுக்காக... அவர் ஆட்சியைத் தொடர்வார்.
தற்போதைய தேர்தலில் பா.ஜ.க-வில் உங்கள் பங்கை எப்படி பார்க்கிறீர்கள்? அது குவாலியர்-சம்பலில் மட்டும்தான் இருக்கிறதா?
2018ல் (அவர் காங்கிரசில் இருந்தபோது) போலவே கட்சி கேட்கும் எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறேன். மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வேன்.
ஆனால், பா.ஜ.க-வின் உள்ளூர் பிரிவில் இருந்து உங்களுக்கு எதிராக நிறைய எதிர்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறதே....
அந்தப் பகுதி எங்களுக்குப் பின்னால் இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் பா.ஜ.க-வின் சாதாரண தொண்டன். எனது கட்சியின் பலம் எனது ஆம் காரியகர்த்தா (சாதாரண தொண்டன்) என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
மற்ற மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை கட்சி சட்டமன்றத் தேர்தலில் நிறுத்தியது போல் உங்களை சட்டமன்ற தேர்தலில் நிறுத்த வேண்டும் என்றால், நீங்கள் எந்த தொகுதியில் நிற்க விரும்புவீர்கள்?
நான் கற்பனையான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை.
சிவராஜ் சிங் சவுகான் தொடர்புடைய சோர்வு காரணியைக் கருத்தில் கொண்டு, நீங்களே முன்வந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?
நான் கற்பனையான கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க மாட்டேன். நான் ஒரு சாதாரண தொண்டன், கட்சி என்ன கேட்டாலும் செய்வேன்.
சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கோரிக்கை உட்பட காங்கிரஸ் பெரிய அளவில் எழுப்பும் ஓ.பி.சி விவகாரத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கமல்நாத் தனது குறுகிய ஆட்சிக் காலத்தில், அரசு வேலைகளில் 27% ஓ.பி.சி ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார் இல்லையா?
அது கமல்நாத் கொண்டு வரவில்லை, சவுகான் கொண்டுவந்தது... ஓ.பி.சி கமிஷனை எதிர்த்தது காங்கிரஸ்தான். மண்டல் கமிஷனை எதிர்த்தது காங்கிரஸ்தான்... பெண் வேட்பாளர்கள், இளைஞர்கள், புதிய முகங்கள் மற்றும் ஓ.பி.சி-களின் எண்ணிக்கை காங்கிரஸைவிட பா.ஜ.க பக்கம் அதிகம்.
சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கத்தின் ‘லட்லி பெஹ்னா திட்டத்தை, பெண்களுக்குப் பணம் வழங்குவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இதற்கும் ‘ரெவ்டிஸ்’க்கும் (இலவசங்களுக்கும்) என்ன வித்தியாசம், இலவசங்களுக்காக பா.ஜ.க எதிர்க்கட்சிகளைத் தாக்கிக்கொண்டே இருக்கிறதே?
இலவசங்களுக்கும்அதிகாரமளித்தலுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. இந்த நாட்டில் கோடிக்கணக்கான பெண்களுக்கு வருமானம் இல்லை. நாம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டாமா? இப்போது, ஒரு பெண்ணின் வங்கி கணக்குக்கு ஊழல் இல்லாமல் அல்லது திருட்டு இல்லாமல் ரூ.1,250 செல்கிறது... ஒரு ஏழை விவசாயிக்கு மாதம் ரூ.1,000 கிடைக்கும், பொருளாதாரத்தில் ஏழ்மையான குடும்பத்திற்கு போதுமான வருமானம் கிடைக்கும். அதுதான் பிரதமரின் பார்வை... ஒவ்வொரு இந்தியனும்... தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்க வேண்டும்
சிவராஜ் சிங் சவுகான் வாக்குறுதியளித்தபடி, சலுகைகள் மாதத்திற்கு ரூ.3,000-ஆக உயர்த்தப்பட்டால், ஆண்டுச் செலவு ரூ.45,000 கோடியாக இருக்கும், இது மாநில நிதியைப் பாதிக்கிறது என்ற விமர்சனம் உள்ளதே?
நம்மிடம் 1.31 கோடி ‘லட்லி பெஹ்னாஸ்’ பயனாளிகள் உள்ளனர். ஒரு மாதத்திற்கு ரூ.1,250 என்பது சுமார் ரூ.18,000-19,000 கோடியாகிறது. நம்மிடம் இதை அளிக்கும் திறன் உள்ளது... பா.ஜ.க ஆட்சியின் கீழ், 15 ஆண்டுகளில் மத்தியப் பிரதேசம் ஜி.டி.பி கிட்டத்தட்ட 10 மடங்கு வளர்ந்துள்ளது.
2022-ல் குவாலியரில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதற்கு பா.ஜ.க-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரனமா? நீங்களும், சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கொடுக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ள மாட்டீர்கள் என்று கூறப்படுகிறதே?
அது முழு முட்டாள்தனம்... வெற்றி பெற்ற தேர்தல்களும்,தோல்வியடைந்த தேர்தல்களும் உள்ளன. 2020-க்குப் பிறகு (22 எம்.எல்.ஏ-க்களுடன் சிந்தியா காங்கிரஸை விட்டு வெளியேறியபோது), 28 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர், காங்கிரஸால் நடத்தப்பட்டது. கமல்நாத் அரசாங்கத்தை வீழ்த்தியது மிகவும் மோசமானது என்றால், இந்த 28 இடங்களில், ஒன்பது இடங்களை மட்டும் காங்கிரஸ் ஏன் மீண்டும் வென்றது?
உங்கள் புதிய கட்சியில் நீங்கள் சௌகரியமாக இருக்கிறீர்களா?
பா.ஜ.க எனது குடும்பம். நான் என்னைச் சுற்றி பா.ஜ.க-வுடன் வளர்ந்தேன். என் பாட்டி (விஜயராஜே சிந்தியா) பா.ஜ.க-வின் நிறுவனர்களில் ஒருவர். எனது தந்தை (மாதவராவ் சிந்தியா) தனது அரசியல் வாழ்க்கையை பா.ஜ.க-வில் தொடங்கினார்... காங்கிரஸில் இருந்தபோதும், பா.ஜ.க-வில் பலருடன் எனக்கு அருமையான உறவு இருந்தது. பா.ஜ.க எப்போதும் என் வீடாக இருந்தது.
காங்கிரஸ் உங்களை ‘துரோகி’ என்று அழைக்கிறதே...
துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸார் என்னைப் பற்றி நினைத்து பல இரவுகளை தூக்கம் இல்லாமல் கழிக்கிறார்கள். ஆனால், அது அவர்களின் பிரச்னை... அவர்கள் வாக்குறுதியளித்ததை மட்டும் மக்களுக்கு வழங்கியிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது... இது ஒரு பக்கம் இருந்தால், பிரதமர் நரேந்திர மோடிஜி போன்ற முன்னோக்கிச் சிந்திக்கும் தலைவர் உங்களுக்கு இருந்தால், என்னைப் போன்ற ஒருவரின் தேர்வு அதுவாகத்தான் இருக்கும் என்பது மிகவும் தெளிவாக உள்ளது. அவர்தான் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறார்... நாட்டை முன்னேற்றி உலக வல்லரசாக ஆக்குகிறார்...
காங்கிரஸ் மத்தியப் பிரதேசம் அமைப்பானது ஊழல் மற்றும் அதிகாரம் சார்ந்தது... அதனால்தான் அந்த (கமல்நாத்) அரசாங்கத்தில் நான் அங்கம் வகிக்க விரும்பவில்லை என்று ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.