நான்கு முறை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்யா சிந்தியா இன்று கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். காங்கிரசுடனான தனது உறவை நேற்று துண்டித்த சிந்தியாவின் பெயரை, மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக பரிந்துரைத்துள்ளது.
ஜோதிராதித்யா சிந்தியா செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்பு இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை.....உண்மையை புரிந்து கொள்ளும் இடத்தில் காங்கிரஸ் கட்சி இல்லை என்று குற்றம் சாட்டினார்.
#WATCH Live from Delhi: Jyotiraditya Scindia joins Bharatiya Janata Party (BJP), in presence of BJP President JP Nadda https://t.co/xBIMuF4CKZ
— ANI (@ANI) March 11, 2020
"ஜே.பி.நட்டா ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், கட்சி என்ற இந்த குடும்பத்திற்குள் இடமளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பாஜகவில் சேர்ந்ததிற்குப பின் சிந்தியா கூறினார்.
பிரதமர் மோடியின் கைகளில், இந்தியாவின் எதிர்காலம் முற்றிலும் பாதுகாப்பானது..... என்றும் தெரிவித்தார்.
கமல்நாத் தலைமையிலான மத்திய பிரேதேச காங்கிரஸ் அரசாங்கத்தை தாக்கிய சிந்தியா,"மத்திய பிரதேசத்திற்காக நாங்கள் கண்ட கனவு 18 மாதங்களில் சிதைந்துவிட்டது" என்றார்.
செவ்வாயன்று, 22 மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் சிந்தியா காங்கிரஸிலிருந்து வெளியேறினார். விளிம்பில் நிலையில் இருந்த மத்திய பிரேதேச அரசு முற்றிலும் சரிந்தது. பிரதமர் மோடியை சந்தித்த பின்னர், அவர் தனது ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.
சிந்தியா காங்கிரஸிலிருந்து வெளியேறுவதில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முக்கிய பங்கு இருப்பதாக பாஜகவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டின் தொடக்கத்தில், கட்சி பொறுப்பை ஜே.பி நட்டாவிடம் ஒப்படைத்த அமித் ஷா, சிந்தியாவிடம் தொடர்ச்சியாக கலந்துரையாடி வந்தார் என்றும் கூறப்படுகிறது. கமல்நாத் அரசாங்கத்தை கவிழ்க்க எண்களைத் திரட்டுவதற்கான பொறுப்பை நரேந்திர சிங் தோமர் ஏற்றுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
குவாண்டியர்-சம்பல் பிராந்தியத்தில் பாஜக தனது ஆதரவு தளத்தை பலப்படுத்த, சிந்தியாவின் குடும்ப மரபு உதவக்கூடும் என்று பாஜக நம்புகிறது.
சுவாரஸ்யமாக, அவரது தந்தை மாதவ்ராவ் சிந்தியா 1996-இல் தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, மத்திய பிரதேச விகாஸ் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். 1996-ல் இந்தியாவை ஆட்சி செய்த ஐக்கிய முன்னணி கூட்டணியில் மாதவ்ராவ் சிந்தியாவும் இடம்பெற்றார். பின்னர்,தேசிய காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார்.
எவ்வாறாயினும், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான விஜய்சிங், கமல்நாத் தலைமையிலான அரசாங்கம் தப்பிக்கும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அந்த அதிசயத்தை உணர்வீர்கள்"என்றும் தெரிவித்தார்.
230 எண்ணிக்கை கொண்ட மத்திய பிரேதேச சட்டப் பேரவையில், காங்கிரஸ் 114 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தது. இதை தாண்டி, இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள், ஒரு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ, நான்கு சுயேச்சைகளின் ஆதரவும் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. பாஜகவில் 107 உறுப்பினர்கள் உள்ளனர்.
செவ்வாயன்று, 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததன் மூலம், கட்சியின் பலம் 92 ஆக குறைந்தது. அரசாங்கத்திற்கான ஆதரவும் 99 ஆக குறைத்தது. எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்த காரணத்தால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய எண்ணிக்கை தற்போது,104-க குறைந்துள்ளது.107 உறுப்பினர்களை கொண்ட பாஜக எளிதாக இந்த பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, பாஜகவும் காங்கிரசும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை மத்திய பிரதேசத்திலிருந்து வெளியேற்றியுள்ளன. காங்கிரஸ் தனது 92 எம்.எல்.ஏ.க்களை ஜெய்ப்பூருக்கு அனுப்பியுள்ளது. அதே வேளையில்,பாஜக தனது எம்எல்ஏ-க்களை குர்கோவன் நகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.