New Update
00:00
/ 00:00
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், கடந்த மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: KCR earns stern rap from Election Commission, barred from campaigning for 48 hours
இந்த தேர்தல் காலத்தில், சிர்சில்லா மாவட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக அவதூறான மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளைப் பேசியதாகக் கூறி, தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதி தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தெலங்கானா முன்னாள் முதல்வரும் பி.ஆர்.எஸ் கட்சியின் தலைவருமான கே.சி.ஆர்-க்கு எழுதிய கடிதத்தில், அவரது பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மே 1ம் தேதி இரவு 8 மணி முதல் 48 மணி நேரம் இந்த தடை அமலில் இருக்கும். காங்கிரசுக்கு எதிராக கே.சி.ஆர் தரக்குறைவான கருத்துகளை, கூறியதாக தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் மூத்த துணைத் தலைவர் ஜி நிரஞ்சனிடம் இருந்து ஏப்ரல் 5ம் தேதி புகார் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
சிர்சில்லா சட்டமன்றத் தொகுதியை கே.சி.ஆர் மகன் கே.டி.ராமராவ் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். நிரஞ்சனின் புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் தெலங்கானா தலைமை தேர்தல் அதிகாரியிடம் உண்மை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கூறியது. இதையடுத்து, அந்த அறிக்கை ஏப்ரல் 10-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு ஏப்ரல் 23-ம் தேதி கே.சி.ஆரிடமிருந்து பதிலைப் பெற்றது. மேலும், அவர், “தெலங்கானா மற்றும் சிர்சியால் தேர்தல் பொறுப்பாளர்கள் தெலுங்கு மக்கள் அல்ல, அவர்களுக்கு உள்ளூர் பேச்சுவழக்கு புரியவில்லை. செய்தியாளர் சந்திப்பில் இருந்து சில வாக்கியங்களை சூழலுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு சரியாக இல்லை மற்றும் திரிக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு மட்டும் தான் தனது விமர்சனத்தை வைத்துள்ளதாகவும், எந்தவொரு காங்கிரஸ் தலைவர்களின் தனிப்பட்ட அம்சங்களையும் தான் விமர்சிக்கவில்லை என்றும் கே.சி.ஆர் சமர்ப்பித்தார்.
இருப்பினும், வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் அரசியல் தலைவர்கள் பொய்யான அறிக்கைகள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் இல்லாமல் பொய்யான அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று கூறும் தேர்தல் நன்னடத்தை விதிகளை மேற்கோள் காட்டி, தேர்தல் ஆணையம், கே.சி.ஆரின் அறிக்கைகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகக் கூறியது.
பி.ஆர்.எஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “கே.சி.ஆர் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளுக்கு கட்டுப்படுவார்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.