தங்கள் தந்தை மற்றும் சகோதரர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட, செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தெலுங்கானாவில் தங்கள் அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறார்கள். தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்-வின் மகளும், அமைச்சர் கே.டி.ராமராவ்-வின் சகோதரியுமான கே.கவிதா சிபிஐ விசாரணையை எதிர்கொள்கிறார் என்றால், தற்போதைய ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா, தெலுங்கானாவில் கால் ஊன்ற முயற்சி செய்து வருகிறார். அம்மாநிலக் கட்சிப் பிரிவு மீது தனது சகோதரரின் முழுக் கட்டுப்பாட்டின் மூலம் ஆந்திராவுக்கு வெளியே பெரிய கூட்டத்தின் மூலம் தெலுங்கானாவில் கால் ஊன்ற முயற்சி செய்கிறார்.
44 வயதான கவிதா, 2014-ல் நிஜாமாபாத்தில் இருந்து எம்.பி.யாக வெற்றி பெற்றார். ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் டி. அரவிந்திடம் தோல்வியடைந்தார். புதிதாகப் பெயர் மாற்றப்பட்ட பாரத ராஷ்டிர சமிதி கட்சியில், சகோதரர் கே.டி.ஆர் மிகவும் செல்வாக்கு மிக்கவராகத் தனது இடத்தை அடைய முயற்சி செய்கிறார். தெலுங்கானா முதல் அமைச்சர் கே.சி.ஆரின் இயல்பான வாரிசாக பார்க்கப்படுகிறார். இருப்பினும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கவிதா தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடுவதோடு டெல்லி கலால் வரிக் கொள்கையின் மீது சிபிஐ விசாரணையையும் எதிர்கொள்கிறார்.
கவிதா 2006 இல் தெலுங்கானா ஜாக்ருதி என்ற கலாச்சார அமைப்பைத் தொடங்கினார். இது அவரது ஆதரவு தளம். சிபிஐ விசாரணை இப்போது பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ விசாரித்து முடித்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு 44 வயதான கவிதா கே.சி.ஆரை ஞாயிற்றுக்கிழமை அழைத்தார். இருப்பினும், முக்கியமாக, அதைத் தொடர்ந்து அறிக்கை வரவில்லை, அதே நேரத்தில், கே.சி.ஆர் மற்றும் கே.டி.ஆர் இருவரும் விசாரணை குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ போன்ற மத்திய ஏஜென்சிகள் பி.ஆர்.எஸ் தலைவர்களை குறி வைப்பது பற்றி அவர்கள் முன்பு பேசினார்கள், ஆனால், இப்போது அவர்களுடைய மௌனம் நிறைய விஷயங்களைக் கூறுகிறது.
டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் கவிதாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், தெலுங்கானாவில் காலூன்றுவதற்கான பா.ஜ.க-வின் உறுதியான முயற்சியுடன் ஒத்துப்போகிறது.
2014 ஆம் ஆண்டு தேர்தலில் அறிமுகமான கவிதா, நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மது கவுட் யாஸ்கியை எதிர்த்து 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும், கோபமடைந்த மஞ்சள் விவசாயிகளின் விலை நெறிமுறைக்காக மஞ்சள் வாரியம் வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிவர்த்தி செய்யத் தவறியதால் அந்த ஆதரவு படிப்படியாக காணாமல் போனது. அவரது 2019-ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு, கவிதா சில மாதங்கள் பொதுப் பார்வையில் இருந்து விலகி இருந்தார். ஆனால், 2020 அக்டோபரில் நிஜாமாபாத்தில் இருந்து மாநில சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பொது வாழ்க்கைக்குத் திரும்பினார். அவர் டிசம்பர் 2021-ல் மேலவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆந்திராவில் அரசியல் செய்யாமல், தெலுங்கானாவில் அரசியல் செய்ய முயற்சி செய்வதால் ஷர்மிளாவின் ஏற்றம் மிகவும் கடினமாகத் தெரிகிறது. தந்தை ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் மரணத்தைத் தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை நிறுவி, 2019 மே மாதம் ஆட்சியைப் பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்எஸ்ஆர்சிபியை முழுமையாகப் பிடித்துக்கொண்டு, ஷர்மிளாவை மட்டுமல்லாமல் அவர்களின் அம்மாவையும் கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் வைத்திருக்கிறார்.
ஷர்மிளா, ஜூலை 8, 2021-ல் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியைத் தொடங்கினார். ஜெகன் ஆதரவுத் தளத்தில் இருந்து ஒரு கூட்டத்துடன் தனக்கான ஆதரவைத் திரட்டுவதற்காக ஒரு சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இருப்பினும், அவர் ஒவ்வொரு அடியிலும் சமபலம் கொண்ட பி.ஆர்.எஸ்-ஐ எதிர்கொண்டார்.
கே.சி.ஆர் மற்றும் கே.டி.ஆரைப் போலவே, ஜெகனும், நவம்பர் 28ம் தேதி வாரங்கலில் காவல்துறையினரால் தடுக்கப்பட்டது உட்பட, அவரது சகோதரிக்கு ஏற்பட்ட தடைகளின் போது அமைதியாக இருந்தார். பி.ஆர்.எஸ் ஆதரவாளர்கள் ஷர்மிளா கான்வாய் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்தனர்.
வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நர்சம்பேட்டையைச் சேர்ந்த பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ பி சுதர்சன் ரெட்டி மீது அவர் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன்பிறகு, தெலுங்கானா முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள அவருடைய ‘பிரஜா பிரஸ்தானம் யாத்திரை’க்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்து, பாதுகாப்பை தொடர இயலாமையை வெளிப்படுத்தினர். அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஷர்மிளா பிரகதி பவனுக்கு காரில் செல்ல முயன்றபோது, அவர் காரில் இருந்தபோது கிரேன் மூலம் இழுத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.
பின்னர் ஷர்மிளா கைது செய்யப்பட்டார். அவருக்கு நவம்பர் 29-ம் தேதி இரவு தாமதமாக நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. டிசம்பர் 9-ம் தேதி ஷர்மிளா ஒய்.எஸ்.ஆரின் இல்லமான தாமரைக் குளத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீசாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது நடைபயணத்தை முறியடிப்பது என்பது கிட்டத்தட்ட அவருடைய அரசியல் ஆசைகளை தரைமட்டமாக்கும்.
இதற்கிடையில், ஜெகனிடமிருந்து இது பற்றி இன்னும் எந்த வார்த்தையும் வரவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“