ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் கே.பராசரன்: முழுப் பின்னணி

ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் உறுப்பினராக கே.பராசரன் நியமிக்கப்பட்டுள்ளார்.யார் இந்த பராசரன் ?

K.Parasaran first trustee of the Ram Janmabhoomi Teerth Kshetra Trust

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அயோத்யாவில் ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வையிடுவதற்கான அறக்கட்டளை பற்றி அறிவிப்பை நேற்று நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

 

நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…

 

நரேந்திர மோடி தனது உரையில் ,“உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ‘ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளை அமைப்பதற்கான யோசனைக்கு எனது அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அயோத்தியாவில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து முடிவுகளையும் சுயேச்சையான இந்த அறக்கட்டளை மேற்கொள்ளும்” என்று பிரதமர் கூறினார்.

ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை குறித்த முறையான அறிவிப்பை இன்று  மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த கட்டளையின் முதல் உறுப்பினர் மற்றும் தலைவராக முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த பராசரன் ?  

1927 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கத்தில் பிறந்த பராசரன் இந்து மதம் பின்னணியில் இருந்து வந்தவர். வழக்கறிஞரான அவரது தந்தை கேசவ அய்யங்கர்,வேத அறிஞராகவும் திகழ்ந்தார்.

பராசரனின் மூன்று மகன்களான மோகன், சதீஷ், பாலாஜி ஆகியோரும் வழக்கறிஞர்கள். இன்னும் சுருங்க சொன்னால், மோகன் பராசரன் யுபிஏ -2 ஆட்சியில் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார். இந்த குடும்பத்தின் நான்காவது தலைமுறையும் வழக்கறிஞர் பட்டியலில் சேர்ந்திருக்கின்றனர்.

1958ல் உச்சநீதிமன்றத்தில் தனது பயிற்சியைத் தொடங்கிய பராசரன், எமர்ஜன்சி காலத்தின் போது தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றினார். 1980ல் இந்தியாவின்  சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இவர் ,1983-1989 காலங்களில் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

சபரிமலை வழக்கில் மாதவிடாய் பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைவதற்கு தடை விதிக்க நாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில் ஆஜரானார். இந்த வழக்கில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அவரது வாதங்களுக்கு எதிராக முடிவெடுத்து பெண்களை நுழைய அனுமதித்தது.

பராசரனின்  நீதிமன்ற அறை சொற்பொழிவுகள் பெரும்பாலும் இந்து வேதங்கள் குறித்த விரிவுரைகள் தான். உச்சநீதிமன்ற நீதிபதியும்,சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான சஞ்சய் கிஷன் கவுல இவரை ‘இந்திய சட்ட கவுன்சிலின் பீஷ்மர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் ரீதியாக, 1970களில் இருந்து ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசு நிர்வாகமும் இவரை நாடியுள்ளது. எவ்வாறாயினும், பல நேரங்களில் இவர் அரசியல் தலைமையுடன் உடன்படவில்லை. உதாரணமாக 1985 ஆம் ஆண்டில், இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டிடம் சட்ட விரோதமாக கட்டப்பட்டது என்று இந்திய அரசு அதை  இடிப்பதற்கான ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியது.  அப்போது, சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த பராசரன்,  இந்த நடவடிக்கை கைவிட வேண்டும் என்று  அரசாங்கத்தை அறிவுறுத்தினார்.

இருப்பினும், இந்திரா காந்தி அரசாங்கம் பராசரனின்  கருத்தை புறக்கணித்தது.  ​இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் அரசாங்கத்திற்கு சார்பாக வழக்காட மறுத்தார். நீதி மன்றங்களில் ஆஜராக வேண்டி அரசு தன்னைக்  கட்டுபடுத்துமாயின் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவும்  முன்வந்தார். இவ்வளவு வெளிப்படையாக தனது கருத்துக்களை பதி செய்திருந்தாலும், அரசாங்கம் அவரை பதவியில் அமர்த்தியது மட்டுமல்லாமல், இரண்டு மாதங்களில் இந்திய அட்டர்னி ஜெனரலாகவும் அவரை பணி அமர்த்தியது.

1999-2004 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்  போது,அரசியலமைப்பின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்யும் வரைவு மற்றும் தலையங்கக் குழுவின் உறுப்பினராக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பராசரனை நியமித்தார். முந்தைய அரசாங்கம் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கியது. அடுத்தடுத்து வந்த யுபிஏ -1 அரசாங்கம் அவருக்கு பத்ம விபூஷனை வழங்கியது. மேலும், அவரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பரிந்துரைத்தது.

2016 ஆம் ஆண்டு முதல், பராசரன் நீதிமன்றங்களில் அரிதாகவே ஆஜராகினர்.  கடைசியாக அவர் இரண்டு வழக்குகளை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளார் – சபரிமலை மற்றும் அயோத்தி வழக்கு .

இவருக்கு நடிகர் கமல்ஹாசனுக்கும் தொடர்பு உண்டு. பராசரனின் மனைவி சரோஜா, கமல் ஹாசனின் நெருங்கிய உறவினராவார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: K parasaran ram janmabhoomi trust

Next Story
5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு: இஸ்லாம் அமைப்புகள் கண்டனம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express