காலா இயக்குநரை சந்தித்த காங்கிரஸ் தலைவர்... இருவரும் பேசிக்கொண்டது இது தான்

காலா பட இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை நேரில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi meet ranjith - ராகுல் காந்தி - பா. இரஞ்சித் நேரில் சந்திப்பு

ராகுல் காந்தி – பா. இரஞ்சித் நேரில் சந்திப்பு

இயக்குநர் பா. இரஞ்சித்தை நேரில் சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அதனைத் தொடர்ந்து, டெல்லியில் ராகுல் காந்தியை இயக்குநர் பா. இரஞ்சித் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் நடிகர் கலையரசனும் உடன் இருந்தார்.

Rahul Gandhi meet kalaiarasan- ராகுல் காந்தி - நடிகர் கலையரசன் நேரில் சந்திப்பு

ராகுல் காந்தி – நடிகர் கலையரசன் நேரில் சந்திப்பு

இந்தச் சந்திப்பின்போது பேசிய ராகுல்காந்தி சமீபத்தில் காலா திரைப்படத்தை பார்த்ததாகவும் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் சாதி, மதம் போன்ற பிரிவினைகளை ஒழிக்க காலா, கபாலி போன்ற திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை தரும் எனவும் ராகுல் காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், “மெட்ராஸ், கபாலி, காலா போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களின் இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை டெல்லியில் சந்தித்தேன். ரஞ்சித்துடன் அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினேன். அவரோடு பேசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உரையாடல் தொடரும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close