Advertisment

'நீதிமன்ற வரலாற்றில் ​இது பொற்காலமாக இருக்காது': சுப்ரீம் கோர்ட்டில் கபில் சிபல் வாதம்

தெலுங்கானா மேலவை உறுப்பினர் கவிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இந்த நீதிமன்றத்தின் வரலாறு எழுதப்படும்போது, ​​​​இது ஒரு பொற்காலமாக இருக்காது" என்று தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
 Kabil Sibal to 3 judge SC bench on BRS K Kavitha ED in Delhi excise policy case Tamil News

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கவிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Supreme Court | Kabil Sibil: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்,தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா மேலவை உறுப்பினருமான கே. கவிதா கடந்த 15 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை இன்று சனிக்கிழமை (மார்ச் 23 ஆம் தேதி) வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Advertisment

இதனிடையே, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கவிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ், பேலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கவிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: When history of court is written, this will not be golden period: Sibal to 3-judge SC bench

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாமீன் பெற விசாரணை கோர்ட்டை நாடுமாறு அறிவுறுத்தினர். அதுதான் வழக்கமான நடைமுறை என்றும் அதை உச்சநீதிமன்றம் மீற முடியாது என்றும் தெரிவித்தனர். அதேநேரத்தில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த மனு விசாரணையின் போது கவிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இந்த நீதிமன்றத்தின் வரலாறு எழுதப்படும்போது, ​​​​இது ஒரு பொற்காலமாக இருக்காது" என்று தெரிவித்தார். 

மேலும் அவர், "ஒப்புதல் அளித்தவர்களின் அறிக்கைகளைத் தவிர வேறு எந்த ஆதாரமும் அமலாக்கத்துறையிடம் இல்லை. ஒரே ஒரு வேண்டுகோள், தயவு செய்து என்னை மீண்டும் உயர் நீதிமன்றத்திற்குச் செல்லச் சொல்லாதீர்கள். எனக்கு எதிராக முடிவு செய்யுங்கள், நான் கவலைப்படவில்லை. ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். இதுபோன்ற பணமோசடி தடுப்புச் சட்டம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஒவ்வொரு அறிக்கையிலும் ஒரு சிறிய ஆதாரம் கூட இல்லை. இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. 

சட்டவிரோத சுரங்க ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கையும் பாருங்கள். அவர்  வழக்கில் என்ன நடந்தது? விசாரணை நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது? இப்படி நடக்கவே கூடாது." என்றும் வாதிட்டார். 

விஜய் மதன்லால் சவுத்ரி மற்றும் யூனியன் ஆப் இந்தியா மீதான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்களை விசாரணைக்கு எடுக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) விதிகள் மற்றும்  2002 சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையின் அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த மனுக்களுடன் பி.எம்.எல்.ஏ-வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Supreme Court Kabil Sibil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment