Advertisment

கமல் நாத் அரசைக் கவிழ்க்க திட்டமா? மத்தியப் பிரதேசத்தில் தடுமாறும் காங்கிரஸ்...

சிந்தியாவை தொடர்ந்து புறக்கணித்ததால் ஏமாற்றத்தில் அவர் இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal Nath government battles threat from Scindia camp

Kamal Nath government battles threat from Scindia camp

 Milind Ghatwai , Manoj C G

Advertisment

Kamal Nath government battles threat from Scindia camp :  திங்கள் கிழமை மாலை துவங்கி இரவுக்குள் மத்தியப் பிரதேசத்தின் அரசு ஆட்டம் காண துவங்கியுள்ளது. துணை முதல்வர் ஜோதிராதித்ய சிந்தியாவின் அணியில் இருக்கும் 11 எம்.எல்.ஏக்கள் மற்றும் 6 அமைச்சர்கள் மற்றவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர். இதே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முதல்வர் கமல் நாத்திற்கு ஆதரவாக தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு கிடைத்த தகவலின் படி லேபர் அமைச்சர் மகேந்திர சிசோடியா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் இமர்தி தேவி, போக்குவரத்து துறை அமைச்சர் கோவிந்த் ராஜ்புட், சுகாதாரத்துறை அமைச்சர் துள்சி சில்வாத், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பிரபுராம் சௌத்ரி, உணவுத்துறை அமைச்சர் ப்ரதியும்னா தோமர் ஆகியோர் மாநில காங்கிரஸ் தலைமைக்கு எதிராக தங்களின் இணைப்பின் முறித்துக் கொண்டனர்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

அம்மாநில பாஜக கூறுகையில் “தற்போது நாங்கள் விளையாட தயாராக உள்ளோம். தேசிய பாஜக தலைவர்கள் தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்” என்று கூறினார்கள். ஆனால் மூத்த பாஜக தலைவரோ அரசு கவிழுமா என்பதை அவ்வளவு விரைவில் கூறிவிட இயலாது என்று அறிவித்தார்.

கமல்நாத் சோனியா காந்தியுடன் டெல்லியில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவோடு இரவாக போபால் விரைந்தார். மதியம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் “ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்பதை அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. போபாலில் அமைந்திருக்கும் கமல் நாத் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 20 அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர். இது அமைச்சரவையை மீள்கட்டமைப்பு செய்ய வசதியாக இருக்கும் என்று அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவித்தார். கமல் நாத் மாநில காங்கிரஸின் மூத்த தலைவரான திக்விஜய சிங்கை நேரில் பார்த்து பேசினார். ஜோதிராதித்ய சிந்தியாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. 6 அமைச்சர்கள் உள்ளிட்ட 17 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பெங்களூருவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கையின் போது, பாஜக தவறான வழியால் ஆட்சியை தடுமாற வைக்க முயற்சி செய்கிறது. நடைபெற்று முடிந்த சில மாநில தேர்தல்களில் தோல்வி அடைந்த அதிருப்தியில் இருக்கிறது பாஜக. மேலும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய 5 வருட ஆட்சியை முடிப்பதற்கு முன்பே ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது என்று கூறினார்.

ஆனால் காங்கிரஸ் தரப்பில் வெளியான செய்தி என்னவென்றால், வருகின்ற ராஜ்யசபா தேர்தலில் 2 ராஜ்யசபா சீட்டுகளுக்கு தான் இந்த பிரச்சனை விஸ்வரூபம் அடைந்துள்ளது என்று அறிவித்துள்ளனர்.

அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருக்கும் இந்த இரண்டு இடங்களையும் நிரப்ப ஜோதிராதித்ய சிந்தியா முயற்சி செய்து வருகிறார். மூன்றாவதாக காலியாக இருக்கும் இடம் பாஜகவிற்கு சென்று சேரும். சிந்தியாவை முதலாவது உறுப்பினராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பதினை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிந்தியாவின் போராட்டம் நியாயத்திற்கான போராட்டம். ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் அவருக்கு இல்லை. மாநில அரசு முழுக்க முழுக்க நாத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிந்தியாவை தொடர்ந்து புறக்கணித்ததால் ஏமாற்றத்தில் அவர் இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய மார்ச் 13ம் தேதி இறுதி நாளாகும்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உட்பட 25 பேர் கொண்ட குழு திங்கள் கிழமை பகல் பெங்களூரு வந்தடைந்ததாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள், சிந்தியாவுக்கு நல்ல ஆதரவு இருக்கும் குவாலியர் - சம்பால் பகுதிகளை சேர்ந்தவர்கள். தற்போது கிழக்கு பெங்களூருவில் இவர்கள் தங்களியுள்ளனர்.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த பிரச்சனையை கையாண்டு வருகிறார். உள்துறை அமைச்சர், ஜே.பி. நட்டா, தர்மேந்திர பிரதான் மற்றும் முன்னாள் சி.எம். ஷிவ்ராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில் நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டார்.

ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உட்பட சுமார் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கூர்கான் மற்றும் பெங்களூருக்கு சென்று திரும்பிய பின்னர்ஒரு வார காலமாக இந்த பிரச்சனை நடைபெற்று வருகிறது. ஒரு சுயேட்சை உறுப்பினர், ஒரு எஸ்.பி. எம்.எல்.ஏ மற்றும் இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் அதில் எட்டு எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வந்துள்ளனர். 2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் தகவல் தொடர்புக்கு அப்பால் தான் உள்ளனர்.

2018ம் ஆண்டு நடைபெற்று முடிந்த தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. 230 தொகுதிகளைக் கொண்ட அம்மாநில சட்டமன்றத்தில் 4 சுயேட்சை உறுப்பினர்கள், ஒரு சமாஜ்வாடி உறுப்பினர். 2 பகுஜன் சமாஜ் உறுப்பினர்களுடன் 109 என்ற எண்ணிக்கையை பெற்றுள்ளது பாஜக.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

Madhya Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment