scorecardresearch

பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கமலா ஹாரிஸ் குடும்பம்: தாய்மாமா பேட்டி

அடுத்த ஆண்டு ஜனவரியில் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவரும் இந்தியாவில் உள்ள கமலா ஹாரிஸின் குடும்பத்தினரும் அமெரிக்காவுக்கு செல்லவிருப்பதாக பாலச்சந்திரன் கூறினார்.

kamala harris, joe biden, usa vice harris vice president, kamala harris us election, kamala harris, கமலா, கமலா ஹாரிஸ், கமலா ஹாரிஸ் தாய்மாமா, கமலா ஹாரிஸ் மாமா, Kamala Harris' uncle balachandran, அமெரிக்க துணை அதிபர், kamala harris india connection, tamil indian express news

“கமலாவைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விரைவில் அவரை அழைத்து வாழ்த்துவேன்… வெற்றிச் செய்தி வெளிவந்ததிலிருந்து என்னுடைய போனில் அழைப்புகள் ஒலிப்பது நிற்கவில்லை” என்று கமலா ஹாரிஸின் தாய்மாமா 80 வயதான கோபாலன் பாலச்சந்திரன் கூறினார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பாலச்சந்திரனும் இந்தியாவில் உள்ள கமலா ஹாரிஸின் மற்ற குடும்பத்தினர்களும் அமெரிக்காவுக்குச் செல்வார்கள் என்று பாலச்சந்திரன் கூறினார்.

“என் மகள் ஏற்கெனவே அங்கே இருக்கிறார். அவர் கமலாவின் பிரசாரத்துக்கு உதவுகிறார். நாங்கள் அனைவரும் அங்கே செல்ல இருகிறோம்… நான் எதையும் தவறவிட மாட்டேன்.” என்று பாலச்சந்திரன் இந்தியன் எக்ஸ்பிஸ்ரஸிடம் கூறினார்.

இதற்கு முன்பு, பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனத்தில் பணி புரிந்த கோபாலன் பாலச்சந்திரன், டெல்லியின் மால்வியா நகரில் வசிப்பவர். ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலனின் சகோதரர் ஆவார். நேற்று இரவு 10 மணியளவில், ஹாரிஸின் சகோதரி, “கடவுளே அது நடக்கிறது… அமெரிக்காவின் அடுத்த துணைத் தலைவர்… எங்கள் முதல் மேடம் துணைத் தலைவர்… என் சகோதரி கமலாஹரிஸ்!” என்று ட்வீட் செய்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக, பாலச்சந்திரன் தனது வீட்டில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைத் தீர்மானிக்க தனது சொந்த கணக்கீடுகளைச் செய்து வருகிறார். “டிவி-யில் காட்டப்படும் நம்பிக்கையான கணிப்புகள் குறித்து நான் சொந்தமாக ஆராய்ச்சி செய்ய விரும்புகிறேன். அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று நான் நம்பவில்லை. நான் சில காலமாக தேர்தல்களை ஆய்வு செய்து வருகிறேன். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது எனக்கு தெரியும்” என்று பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறினார்.

அவர் தொலைக்காட்சி செய்திகளில் இருந்து விலகி ஓய்வாக இருந்தபோது, வெள்ளிக்கிழமை ​​அவர் தனது வீட்டிற்கு வெளியே தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை சந்தித்தார். “கமலாவின் தாயார் இன்று இங்கு இருந்திருந்தால் மிகவும் பெருமிதம் அடைந்திருப்பார்…” தனது 19 வயதில் கல்விக்காக அமெரிக்காவுக்குச் சென்ற ஷியாமளா கோபாலன் 2009இல் புற்றுநோயால் காலமானார்.

கமலாவின் சிறுவயது நாட்களை நினைவு கூர்ந்த பாலச்சந்திரன், “அப்போது சிவில் உரிமை போராட்டங்களில் கலந்து கொள்ளும் அவரது தாயார் ஷியாமளாவால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் (கமலா) அனைவருக்கும் சம உரிமைகளில் உறுதியான விசுவாசியாக வளர்ந்தார். எனவே நீண்ட காலமாக அவர் தனது நாட்டில் இந்த உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க நடவடிக்கை எடுப்பார் என்று எனக்குத் தெரியும்.” என்று கூறினார்.

கடைசியாக 2019-இல் வாஷிங்டனில் தனது மருமகளை (கமலா ஹாரிஸ்) சந்தித்த பாலச்சந்திரன், தனது மகள் சாரதாவும் கமலாவும் மிகவும் நெருக்கமானவர்கள் என்றும், அவரிடமிருந்து உடனுக்குடன் தகவல்களப் பெறுகிறார் என்றும் கூறினார். மேலும், அவர் கூறுகையில், “நான் அரசியலைப் ஆய்வு செய்ததியிலிருந்து நாங்கள் அதைப் பற்றி அரட்டையடிப்போம்.” என்று கூறினார்.

பாலச்சந்திரனின் தந்தை, பி.வி.கோபாலன், ஒரு அரசு ஊழியர். கமலாவின் குழந்தைப் பருவத்தின் நினைவுகளில் முக்கியமாக இடம்பெற்றுள்ளார். கமலா மிகவும் ஆர்வமாக இருந்தார். மேலும் அவர் அவளுடைய எல்லா ஏன் எப்படி என்ற கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர்கள் இந்தியாவில் தங்கியிருந்தபோது அவர்கள் இருவரும் நீண்ட தூரம் நடந்து சென்றனர் என்று அவர் கூறினார். ஹாரிஸ் தனது தாத்தாவைப் பற்றி அடிக்கடி பேசியுள்ளார். அவரை ஒரு உத்வேகமான மனிதர் என்று குறிப்பிடுகிறார்.

கமலாவின் வெற்றி பல முதல் இடங்களைக் குறிக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர். முதல் இந்திய வம்சாவளி அமெரிக்க துணை அதிபர் மற்றும் அமெரிக்காவின் முதல் ஆபிரிக்க – அமெரிக்க துணை அதிபர் என்று அவரது மாமா கூறினார், “அவர் அனைவருக்குமான சமத்துவத்தை நம்புகிறார். அவள் தன் அடையாளத்தை வெளிப்படுத்துவாள் என்று எனக்குத் தெரியும்.” என்று கூறினார்.

அவர் ட்விட்டரில் பதிவிட்ட எட்டு விநாடி வீடியோவில், கமலா ஹாரிஸ், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுடன் தொலைபேசியில், “நாம் சாதித்துவிட்டோம்… நாம் சாதித்துவிட்டோம்.. ஜோ. நீங்கள் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக இருக்கப் போகிறீர்கள். ” என்று அவரிடம் கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Kamala harris uncle in delhi plans to go to america attend swearing in ceremony