'இந்தியாவின் வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த உன்னத மனிதர் காமராஜர்' : பிரதமர் மோடி புகழஞ்சலி

கர்ம வீரர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை

கர்ம வீரர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை

author-image
WebDesk
New Update
PM Modi

PM Modi

தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாள் இன்று (ஜூலை 15) கொண்டாடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் காமராஜரின் புகைப்படம், திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், பிரதமர் மோடி காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்தியாவின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த உன்னத மனிதர் காமராஜருக்கு அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன். சமூக அதிகாரமளிப்புக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாக உள்ளது.

வறுமை ஒழிப்பு மற்றும் பொது நலன் குறித்த அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: