அகில் பாரத் இந்து மகாசபாவின் முன்னாள் செயல் தலைவரான கமலேஷ் திவாரி கடந்த வெள்ளிக்கிழமை தனது லக்னோ வீட்டில் கொல்லப்பட்டார். அங்கிருந்த சி.சி.டி.வி கேமிரா மூலம் இரண்டு இளைஞர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது.
அஷ்பக் ஷேக் , மொய்னுதீன் என்கிற ஃபரித் பதான் என்ற இருவரையும் கமலேஷ் திவாரியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கிறது காவல்துறை . இதில் முக்கிய நபராக கருதப்படும் அஷ்பக் ஷேக் (33), தன்னோடு பணிபுரியும் நபரான ரோஹித் குமார் சோலங்கி பெயரில் டூப்பிளிகேட் ஆதார் அட்டையை உருவாக்கி திவாரி இந்து சபா கட்சிக்குள் சேர்ந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருந்து நிறுவனத்தில் டீம் லீடர்-கம்-மேலாளராக இருக்கும் இந்த அஷ்பக் ஷேக், அதே நிறுவனத்தில் மருத்துவ ரெப் (பிரதிநிதியாக) பணிபுரியும் ரோஹித் குமார் சோலங்கியின் டூப்பிளிகேட் ஆதார் அடையாள அட்டையை உருவாக்கியுள்ளார்.
ரோஹித் குமார் சோலங்கியின் ஆதார் விவரங்களுடன், அஷ்பக் ஷேக்கின் புகைப்படம் கொண்டு இந்த ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த மருந்து நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் இருந்தாலும், அஷ்பக் ஷேக், குஜாரத் மாநிலத்தின் சூரத்தில் மறுத்து விற்பனை செய்ய வேண்டிய பொறுப்பைக் கவனித்து வந்தார் . மேலும், பேஸ்புக்கில் சோலாங்கி என்ற பெயரில் தனது புகைப்படத்தோடு கணக்கைத் துவங்கி, இந்து சமாஜ் கட்சியின் குஜராத் மாநிலத் தலைவரான ஜெய்மின் டேவ் என்பவரின் இணக்கத்தையும் பெற்றுள்ளார். கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி, அஷ்பக் ஷேக்கை கட்சியின் உருப்பினறாக சேர்த்ததோடு மட்டுமல்லாமல், வராச்சா வார்டின் , ஐ.டி செல்லின் முழு நேர பணியாளராகவும் நியமிக்கபப்ட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/kamlesh-tiwari-1-300x200.jpg)
ஜெய்மின் டேவ், இது குறித்து மேலும் தெரிவிக்கையில், "எங்கள் கட்சியில் சேர விரும்புவோரின் ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை சேகரிப்பது இயல்பான வழக்கம்தான். அஷ்பக் ஷேக்கின் கொடுத்த ஆதார் அடிப்படையிலும், பேஸ்புக்கில் அவரின் நண்பர்கள் லிஸ்ட்ல் இந்து மகாசபாவை சேர்ந்தவர்களாக இருந்ததாலும், தேசியத் தலைவர் கமலேஷ் திவாரி அவரைக் கட்சியில் இணைக்கப்படுவதற்கான ஒப்புதலை அளித்தார்" என்று தெரிவித்தார்.
மேலும், அஷ்பக் ஷேக் ( சோலங்கி என்ற பெயரில் ) இந்தியாவில் இருக்கும் அனைத்து இந்து மகா சபை உருப்பினர்களிடம் போனில் பேசி நெருக்கமாய் இருந்துள்ளார் .
ஷேக்கின் மனைவி மெஹ்சாபின் இது குறித்து தெரிவிக்கையில், சில நாட்களுக்கு முன்பு, புது நிறுவனத்தில் வேலை நேர்காணலுக்காக சண்டிகர் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறினார், உதவியாக இருக்க நானும் வருகிறேன் என்று சொன்னதையும் அவர் மறுத்துவிட்டார்.
கடந்த, புதன்கிழமை காலையில், தனது நண்பர் ஃபரித்துடன் சண்டிகருக்கு சென்றார். வியாழன் முழுவதும் அவரது போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது . வெள்ளிகிழமை இரவு அன்று நீண்ட நேரம் போனில் பேசினார். அதன் பிறகு, இன்று வரை அவரது போன் எடுக்கவில்லை" என்றார்.
அகில் பாரத் இந்து மகாசபாவின் செயல் தலைவராக இருந்த திவாரி, அயோத்தி வழக்கில் தனது அமைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவர். சர்ச்சைக்குரிய தலைவரான திவாரி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமாஜ் கட்சியை நிறுவினார். ஆர்ப்பாட்டங்களையும் வன்முறையையும் தூண்டிய நபிகள் நாயகம் பற்றி அவர் கூறிய கருத்துக்காக 2015 ல் சிறையில் அடைக்கப்பட்டார். லக்னோ காவல்துறையினர் அவருக்கு எதிராக என்எஸ்ஏ மூலம் வழக்கு செய்தது, ஆனால் அது ஒரு வருடம் கழித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சால் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .