அயோத்தியா வழக்கில் மேல்முறையீடு செய்தவரும் முன்னாள் அகில் பாரதிய இந்து மகாசபா (ஏபிஹெச்எம்) தலைவர் கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக சூரத்தைச் சேர்ந்த மூன்று பேரை உத்தரபிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.
Advertisment
உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி, நேற்று(அக்,18) கழுத்து அறுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் ஸ்வீட் கவர்களுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்துள்ளது. அவர்கள் தீபாவளிக்கு இனிப்புகள் வழங்க செல்வதாக கூறி வீட்டிற்குள் சென்றிருக்க வேண்டும் என்றும் ஸ்வீட் பைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்து எடுத்து சென்றிருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.
திவாரி கொலை குறித்து விசாரித்த உ.பி. போலீசார், சூரத்தின் நவ்சரி பஜார் பகுதியில் அமைந்துள்ள தார்தி ஃபார்சன் கடையில் இருந்து இனிப்புகள் வாங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
குற்றிப்பிரிவு அதிகாரிகளும், அந்த இனிப்பு கடையின் சிசிடிவி காட்சிகளை உரிமையாளரிடமிருந்து சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான சில இளைஞர்களிடமும் சூரத் குற்றப்பிரிவு விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.