Advertisment

ராகுல் காந்தியை சந்தித்த கன்னையா குமார்: காங்கிரசில் இணைகிறார்

Kanhaiya Kumar meets Rahul Gandhi likely to join Congress Jignesh Mevani Tamil News கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜோதிராதித்ய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா மற்றும் பிரியங்கா சதுர்வேதி போன்ற முக்கிய இளம் தலைவர்கள் கட்சியைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
Kanhaiya Kumar meets Rahul Gandhi likely to join Congress Jignesh Mevani Tamil News

Kanhaiya Kumar meets Rahul Gandhi likely to join Congress Jignesh Mevani Tamil News

Kanhaiya Kumar meets Rahul Gandhi likely to join Congress Jignesh Mevani Tamil News : குமார் ,மேவானியின் வருகை கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் நம்புகின்றன. மேவானிக்கு ஆதரவாக அவர் போட்டியிட்ட தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

முன்னாள் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவருமான கன்னையா குமார், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல இளம் தலைவர்கள் வெளியேறிய காங்கிரஸ் மைதானத்தில் தனது அடுத்த ஆட்டத்தைத் தொடங்குவதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை சந்தித்துள்ளார்.

அதே போல, குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் வட்டாரத்துடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மேவானி களமிறங்கிய வட்கம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் உதவியது.

குமாரின் நெருங்கிய வட்டாரங்கள் கூற்றுப்படி, அவர் சிபிஐ கட்சியில் ஒடுக்கப்பட்டுள்ளதாக நினைப்பதாகவும்,  அதன் காரணமாகவே கடந்த செவ்வாய்க்கிழமை ராகுல் காந்தியை சந்தித்து, காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

குமாரின் விலகல் தகவல் குறித்து சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜாவிடம் கேள்வி எழுப்பிய போது, " இதுதொடர்பான ஊகங்களை மட்டுமே இதுவரை கேட்டுள்ளேன். இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற  கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அவர் இருந்தார் என்பது மட்டுமே என்னால் கூற முடியும். அப்போது தனது கருத்துகளைக் கூட்டத்தில் பதிவு செய்தார்" என்றார்.

குமார் பிகார் அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஆர்வமாக இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், கடந்த மூன்று தசாப்தங்களாக பீகாரில் காங்கிரஸ் ராஜ்ஜியம் தான் இருந்தது. ஆனால், கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தனது சக கட்சிகளின் வெற்றியுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் மோசமாக செயல்பட்டது என்பது தான் உண்மை. காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால், ஆர்ஜேடி போட்டியிட்ட 144 இடங்களில் பாதிக்கும் மேல் வெற்றி பெற்றனர். அதே போல, சிபிஐ போட்டியிட்ட 19 இடங்களில் 12 இடங்களில் வெற்றி பெற்றது.

எனவே, குமார் மற்றும் மேவானியின் வருகை கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் நம்புகின்றன.ஏனென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜோதிராதித்ய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா மற்றும் பிரியங்கா சதுர்வேதி போன்ற முக்கிய இளம் தலைவர்கள் கட்சியைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதுவொரு புறம் இருக்க, சில தலைவர்கள், குமாரின் கடந்தகால பயணத்தைச் சுட்டிக்காட்டி அவரின் வருகை காங்கிரஸ் கட்சிக்குத் துயரமாக மாறலாம் என கருதுகின்றனர். கடந்தாண்டு டிசம்பரில் கட்சியின் பாட்னா அலுவலகத்தில் ஏற்பட்ட சலசலப்புக்காக, இந்தாண்டு தொடக்கத்தில் அவர் மீது சிறிய ஒழுங்கு நடவடிக்கையை சிபிஐ தலைமையகம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பேசுவதில் வல்லவரான குமார், காங்கிரஸில் இணையும் பட்சத்தில், அவரை உத்தரப் பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் நடைபெறவுள்ள பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி,பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, காங்கிரஸ் தனியாகவே தேர்தல் போர்க்களத்தில் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi Jignesh Mevani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment