scorecardresearch

‘ராகுல் முயற்சியை மக்கள் முன் எடுப்பார்கள்’: பாரத் ஜோடோ யாத்திரையில் கனிமொழி

“நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடும் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என ட்விட்டரில் கனிமொழி கருணாநிதி பதிவிட்டுள்ளார்.

Kanimozhi joins Bharat Jodo Yatra
பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திமுக மக்களவை எம்பி கனிமொழி கருணாநிதி.

திமுக மக்களவை எம்பி கனிமொழி கருணாநிதி, ஹரியானாவில் கடைசி நாளான வெள்ளிக்கிழமை ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார்.
அப்போது இந்த யாத்திரை “பன்முகத்தன்மையை” கொண்டாடுகிறது எனத் தெரிவித்தார். இந்த யாத்திரையின் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கனிமொழி கருணாநிதி, “நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடும் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், “ராகுல் காந்தியின் இந்தியாவை ஒருங்கிணைக்கும் தொலைநோக்கு, இந்திய மக்களால் முன்னெடுக்கப்படும் யோசனையாகும்” என்றார்.
தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி, “காங்கிரஸின் இந்த யாத்திரை வெறுப்புக்கு எதிராக குரல் எழுப்புவதன் மூலம் நாட்டில் அன்பு, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பரப்புவதற்கான செய்தியை கொடுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் முயற்சியை மக்கள் முன்னெடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை கனிமொழி கருணாநிதியின் சகோதரரும், மாநிலத்தின் முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல் காந்தியிடம் மூவர்ணக் கொடியை கொடுத்து தொடங்கிவைத்தார்.

இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், திக்விஜய் சிங், பூபேஷ் பாகேல், அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கனிமொழி யாத்திரையில் பங்கேற்கவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Kanimozhi joins bharat jodo yatra