ஒரு வருடத்தில் 30 முறை துபாய் பயணம்... கிலோவுக்கு லட்சத்தில் கமிஷன்: தங்கம் கடத்திய நடிகை ரன்யா பற்றிய பகீர் தகவல்கள்

சமீப மாதங்களில் ரன்யா ராவ் அடிக்கடி துபாய் மற்றும் மலேசியாவிற்கு பயணம் செய்தது வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகரிகளுக்கு சந்தேகத்தைத் தூண்டியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ranya rao

வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடந்த வந்த பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, தனது தொடைகளில் 14 தங்க கட்டிகளை டேப் மற்றும் பேண்டேஜ்களால் ஒட்டி எடுத்து வந்துள்ளார். அவரை சோதனை செய்த அதிகாரிகள் தங்க கட்டிகளை கைப்பற்றி, அவரையும் கைது செய்துள்ளனர்.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Arrest of Kannada actress Ranya Rao reveals she strapped 14 gold bars on thighs to avoid detection at airport

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடித்த வாஹா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரன்யா ராவ், கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடித்த மாணிக்யா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு படகி என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார். கர்நாடகாவில் மூத்த டிஜிபி அந்தஸ்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் வளர்ப்பு மகளான ரன்யா ராவ் (33), வெளிநாடு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் 3-ந் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அப்போது அவரிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ரூ12.86 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை அவர் கடந்த வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக, நடிகை ரன்யா ராவ், தனது தொடைகளில் 14 தங்கக் கட்டிகளை டேப் மற்றும் பேண்டேஜ்களால் கட்டி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் ரன்யா ராவை கைது செய்தனர்.

Advertisment
Advertisements

ரன்யா ராவ் அணிந்திருந்த ஜாக்கெட்டில் தங்கக் கடத்தல் நடந்ததாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், உடல் சோதனையின் போது நடிகையிடம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக டிஆர்ஐ குறிப்பிட்டுள்ளது. இது குறித்து டிஆர்ஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் "துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் வந்த ரன்யா ராவிடம் நடத்தப்பட்ட சோதனையில், 14.2 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை அவர் புத்திசாலித்தனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன கண்டுபிடிக்கப்பட்டன

மேலும் இந்த தங்கக் கட்டிகளை மறைப்பதற்காக ரன்யா ராவ் தனது தொடைகளில் டேப் மற்றும் க்ரீப் பேண்டேஜ்களால் 1 கிலோ எடையுள்ள 14 தங்கக் கட்டிகளைக் கட்டிக்கொண்டு அதன் மேல் பேன்ட் அணிந்திருந்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. தங்கத்தைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட முறை, ரன்யா ராவ் இதற்கு முன்பும் இதேபோன்ற முறையில் சரக்குகளை எடுத்துச் சென்றதாகவும், விமான நிலைய நெறிமுறைகளை நன்கு அறிந்திருந்ததால், இவ்வளவு பெரிய கடத்தலை அவரால் செய்ய முடிந்தது. இந்த கடத்தல் டிஆர்ஐ அதிகாரிகளால் சமீப காலங்களில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தங்கங்களில் ஒன்று" என்று கூறப்படுகிறது.

சமீபத்திய மாதங்களில், ஐந்து முதல் 10 நாட்கள் வரையிலான குறுகிய இடைவெளியில் ரன்யா ராவ் அடிக்கடி துபாய் மற்றும் மலேசியாவிற்கு பயணம் செய்தது, டிஆர்ஐ அதிகாரிகளின் சந்தேகத்தைத் தூண்டியது, இறுதியில் மார்ச் 3 அன்று ஒரு பெரிய தங்கம் வருவது குறித்து உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது, அதன்படி அன்று பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த ரன்யா ராவ், விஐபி சேனல்களைப் பயன்படுத்தி வெளியேறியதாகக் கூறப்படுகிறது, சாதாரண பயணிகளிடம் விரிவான சோதனைகள் செய்யப்படாமல் அவரை வரவேற்கவும், விஐபி சேனல்கள் வழியாக சுமூகமாக செல்வதை உறுதி செய்யவும் ஒரு அதிகாரி அவருடன் இருந்துள்ளார்.

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ராவ், 4 மாதங்களுக்கு முன்பு அவர் திருமணம் செய்து கொண்ட அவரது கணவருடன் இருந்தார். ஆனால் இந்த தங்கக் கடத்தல் மோசடியில் அவரது பங்கு என்ன என்பது குறித்து டிஆர்ஐ தெரிவிக்கவில்லை. இந்த தங்கம் கடத்தலில் ரன்யா ராவ் ஒரு கூரியராக இருந்தாரா அல்லது கடத்தல் கும்பலில் முக்கிய பங்கு வகித்தாரா என்பதையும் விசாரணை இன்னும் சுட்டிக்காட்டவில்லை. அதேபோல் ஒரு வருடத்தில் 30 முறை துபாய் பயணம் சென்றதாகவும், கிலோ தங்கத்திற்கு லட்சத்தில் கம்மிஷன் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ரன்யா ராவின் மாற்றாந்தாய், ஒரு தெளிவற்ற வரலாற்றைக் கொண்ட ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி, அவரது திருமணத்திற்குப் பிறகு 4 மாதங்களுக்கும் மேலாக அவர் தொடர்பில் இல்லை என்று கூறி, அவரிடமிருந்து விலகி இருக்கிறார்.

ராவ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் டிஆர்ஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ2.06 கோடி மதிப்புள்ள நகைகளும் ரூ2.67 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மொத்தம் ரூ.17.29 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டிஆர்ஐ தெரிவித்துள்ளது. 1962 சுங்கச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது  நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று டிஆர்ஐ தெரிவித்துள்ளது. பொருளாதார குற்றங்களுக்காக சிறப்பு நீதிமன்றத்தால் மார்ச் 18 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஜாமீன்கோரி மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராவின் வளர்ப்புத் தந்தை சர்ச்சைக்குரிய தொழில் செய்து வந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பு மைசூரில் கேரள நகை வியாபாரி ஒருவர் கர்நாடகாவிலிருந்து கேரளாவிற்கு பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சந்தேகத்திற்கிடமான பணம் மற்றும் தங்கக் கொள்ளையுடன் தொடர்புடையவர். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நடந்த இந்த கொள்ளை வழக்கில் பல கீழ்நிலை காவல்துறை அதிகாரிகள் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மூத்த அதிகாரி அவரது பணியிலிருந்து மாற்றப்பட்டார்.

அதே சமயம் இந்த தங்கக் கொள்ளை வழக்கில் அந்த அதிகாரி மீது எந்த அதிகாரப்பூர்வ அல்லது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மைசூரில் 2014 ஆம் ஆண்டு நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 2017 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு, காவல்துறை அதிகாரியின் வளர்ப்பு மகன், சர்வதேச ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணா ரமேஷ் என்கிற ஸ்ரீகியுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கர்நாடக காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவால் விசாரிக்கப்பட்டார்.

ஹேக்கரின் பண பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவும், கடந்த 2018 ஜனவரியில் ஹேக்கரின் கூட்டாளிகள் ரூ.57 லட்சம் செலுத்தி போர்ஷே மெக்கன் காரை வாங்கியது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கார் கூட்டாளிகளால் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக ஷோரூமுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. டிஜிபியின் வளர்ப்பு மகன், பிரபல முன்னாள் கன்னட திரைப்பட நடிகையும் அரசியல்வாதியுமான ஒருவரின் மகளை கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார். கர்நாடகாவில் உள்ள மூத்த அரசியல்வாதிகளுடனும் ரன்யா ராவ் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.

Cinema Actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: