Kaunain Sheriff M
Kannan Gopinathan IAS Officer special interview : ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி.
காஷ்மீர் சிறப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதன் காரணமாகத்தான் நீங்கள் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தீர்கள் அது குறித்து?
நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவினை எடுக்கவில்லை. மிகவும் ஆராய்ந்து தான் இம்முடிவை எடுத்தேன். நான் பார்க்கின்ற வேலையும், செய்கின்ற சேவையும் என்னுடைய எண்ணங்களை வெளிப்படையாக பேசவிடுவதில்லை. நான் சுதந்திரமாக என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த விரும்பினேன். அதனால் தான் எனக்கு என்னுடைய சுதந்திரம் தேவை என்று விரும்பினேன். அதற்காக நான் வேலையை ராஜினாமா செய்வதும் சரிதான் என்று முடிவெடுத்தேன். காஷ்மீரில் பேசும் சுதந்திரம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டதை நாம் கண்டும் காணாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.
காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரம் ரத்து என்ற முடிவு, என்னுடைய ராஜினாமாவால் மாறிவிடப்போவதில்லை என்பதை நான் உறுதியாக உங்களிடம் கூற விரும்புகிறேன். இது போன்ற முடிவுகளை எடுக்க முழுமையான அங்கீகாரம் ஒரு அரசுக்கு உள்ளது. ஆனால் சட்டப்பூர்வமாக, ஜனநாயகத்தோடு, அரசியல் சாசன முடிவாக அது அமைய வேண்டும். ஒரு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நாம் ஒரு ஊசி போடுகின்றோம். வலியில் ஒரு குழந்தை அழவும் கூடாது என்றால் அது எப்படி? நாம் அவர்களின் குரலை, அவர்களின் எண்ணங்களை கேட்கவேண்டும். அவர்களின் கோபங்களை சரிசெய்ய பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஆனாலும் நாம் அவர்களின் எண்ணங்களை கேட்க வேண்டும்.
இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது ஜம்மு-காஷ்மீர் விவகாரத்திக்கு மட்டும் குரல் கொடுத்தது ஏன்?
இந்த நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது தான். ஏன் இது இல்லாமல் அது என்ற கேள்விகள் எப்போதும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. பல்வேறு பிரச்சனைகளுக்காக எப்போதும் ஒரே விதமான தாக்குதல்களால் உந்தப்பட்டு மக்கள் குரல் கொடுப்பதில்லை. ஆனால் நம் எண்ணங்களையும் கருத்துகளையும் சுதந்திரமாக அறிவிப்பதற்கான சூழலில் பிரச்சனை என்பது என்னை உறுத்திக் கொண்டே இருந்ததால் தான் இம்முடிவு. காஷ்மீர் விவகாரத்தில் மட்டும் அல்ல. எங்கெல்லாம் குரல்கள் ஒடுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் குரல் கொடுக்கும் கட்டாயம் நமக்கு இருக்கின்றது.
நீங்கள் தற்போது உங்களின் வேலையை ராஜினாமா செய்துவிட்டீர்கள். தற்போது உங்களின் கருத்து சுதந்திரத்தை எப்படி இந்த பிரச்சனையை இணைத்து போராடப்போகின்றீர்கள்?
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வெளியிட்ட அஃபிடிவிட் படித்தேன். நம் அரசாங்கம் எதையாவது செய்து கொண்டே இருக்கும். ஆனால் நம் நாட்டின் இதர தனி அங்கங்களும், அரசின் முடிவுகளுக்கு சாதகாமாக எப்படி இயங்குகிறது என்று தான் தெரியவில்லை. நம்முடைய சில துறைகள் அரசின் கீழ் இயங்குவதில்லை. நாம் அனைவரும் அரசின் கீழ் எப்போதும் இருப்பதில்லை . நான் அரசின் ஒரு அங்கமாக இருந்த போது, நான் ஏன் இதை செய்தேன் என்ற கேள்வி மிகவும் முக்கியமானதாகவும், அதற்கு நான் பதில் அளிக்க கடமைப்பட்டவனாகவும் இருக்க வேண்டும். ஆனால் தற்போது அந்நிலை இல்லை. எதிர்ப்புகளையும் மாற்றுக் கருத்துகளையும் எப்படி அணுக வேண்டும் என்பதை உணர்ந்த ஒரு முதிர்ச்சியான ஜனநாயகமாக இந்தியா செயல்பட வேண்டும்.
உங்களுடைய முடிவுகள் குறித்து உங்களின் பேட்ச் மேட்கள் கூறியது என்ன?
ஐ.ஏ.எஸ் வட்டாரத்தின் உள்ளும் வெளியும் இருக்கும் நண்பர்களும் சரி, இதர நண்பர்களும் சரி, இதை எப்படி எடுத்துக் கொண்டாலும் ஒருவருடைய தனிப்பட்ட முடிவை மதிக்க கற்றுக் கொண்டுள்ளோம். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு என்பதால் என்னுடைய நண்பர்கள் எனக்கு ஆதரவாகவே இருக்கின்றார்கள்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் நீங்கள் பணி புரி்ந்துள்ளீர்கள். ஒரு மாவட்ட ஆட்சியராக நீங்கள் நிறைய போராட்டங்களையும் தடையையும் பார்த்திருப்பீர்கள் தானே?
ஒரு மாவட்ட ஆட்சியராக, ஒரு போராட்டம் வந்தால் அதனை கட்டுப்படுத்துவது மிக முக்கியமான கடமையாகும். போராட்டங்கள் தடை செய்யப்படுமே தவிர, கருத்து சுதந்திரத்திற்கு எங்கும் தடையில்லை. இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர வேண்டியது ஒரு கலெக்டரின் முக்கிய பங்கு. கலவரங்கள் ஒடுக்கப்பட வேண்டும். ஆனால் அமைதி வழியிலான போராட்டங்களை மேற்கொள்ள மக்களுக்கு என்றும் உரிமையுண்டு. அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற நம் நாட்டில் இந்த போராட்டங்களையும் ஒடுக்க நினைப்பது எப்படி சரியாகும்?
அரசியலுக்கு வரும் என்ன உள்ளதா?
இப்போதைக்கு இந்த ராஜினாமா தான் மிகவும் முக்கியம். உண்மையை சொன்னால், நான் அடுத்து என்ன செய்யப் போகின்றேன் என்றும் கூட யோசிக்கவில்லை. ஆனால் எனக்கு கொஞ்சம் நேரம் தேவையில்லை. நான் மக்களுடன் இணைந்து செயல்படவே விரும்புகின்றேன். நான் அரசியலில் சேர்வது குறித்தும் யோசிக்கவில்லை. நான் அரசியலில் இணைகின்றோனோ இல்லையோ, அரசியலில் இணைவதை தவறான முன்னுதாரணமாக இளம் தலைமுறையினர் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.