கான்பூர் ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் தற்கொலை; போலீஸ் விசாரணை

கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் புதன்கிழமை மாலை ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கான்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

By: Updated: July 9, 2020, 04:43:45 PM

கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் புதன்கிழமை மாலை ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கான்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கான்பூர் ஐ.ஐ.டி வளாகத்தில் 35 வயதான உதவி பேராசிரியர் பிரமோத் சுப்பிரமணியன் உடல் ஐஐடி வளாகத்தில் ஒரு அறையில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த கான்பூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

உதவிப் பேராசிரியர் மரணம் குறித்து கான்பூர் ஐ.ஐ.டி இயக்குனர் பேராசிரியர் அபய் கரண்டிகர் வெளியிட்ட அறிக்கையில், “கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் பிரமோத் சுப்பிரமண்யனின் துயர மரணம் குறித்து உங்களுக்குத் தெரிவிப்பதில் வருத்தப்படுகிறேன். நாட்டில் கணினி அறிவியலில் ஒரு பிரகாசமான மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரத்தை இழந்துவிட்டோம். அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த துக்கம் அனுசரிக்கிறோம். அவருடைய குடும்பத்திற்கு ஆதரவு அளிக்கும்படி சர்வவல்லமையுள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். அவருடைய ஆன்மா அமைதி அடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, போலீசார் கூறுகையில், உதவிப் பேராசிரியரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் தூக்கிட்டுக் கொள்ள நைலான் கயிற்றைப் பயன்படுத்தியுள்ளார். அதைத் தவிர, அந்த அறையில் இருந்து தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் கிடைக்கவில்லை.  அதனால் தற்கொலைக்கான காரணம் உடனடியாக அறிய முடியவில்லை என்று தெரிவிதனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kanpur iit assistant professor suicide at campus police investigation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X