New Update
/indian-express-tamil/media/media_files/vFYrU89bAZHMEUrIGs3V.jpg)
UP Kanpur Train Accident: உத்தரப் பிரேதசம் மாநிலம் வாரணாசி-அகமதாபாத் சென்றுகொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஆக.17) அதிகாலை கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக ரயிலில் இருந்த பயணிகள், ஊழியர்களுக்கு ந்த காயமும் ஏற்படவில்லை.
வாரணாசியிலிருந்து அகமதாபாத் வரை (19168) இயக்கப்படும் சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 20 பெட்டிகள், சனிக்கிழமை அதிகாலை உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தின் குறுக்கே இருந்த அடையாளம் தெரியாத பொருளின் மீது ரயில் மோதியதால் தடம் புரண்டன.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், " பாறாங்கற்கள் போன்ற பொருள் இன்ஜினின் முன்பகுதியில் மோதியதில் முன்பகுதி கடுமையாக சேதமடைந்து வளைந்துவிட்டதாக லோகோ பைலட் கூறினார்" என்றனர்.
ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் செல்லும் 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 ரயில்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: 20 coaches of Ahmedabad-bound Sabarmati Express derail near Kanpur; no injuries reported
விபத்து நடந்த பகுதியை மேற்பார்வையிடும் வட மத்திய ரயில்வே மண்டலத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) சஷி காந்த் திரிபாதி, விபத்து நடந்த இடத்திலிருந்து கான்பூர் ரயில் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார்.
மேலும் பயணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவ ரயில்வே உதவி எண்களை அறிவித்துள்ளது. அந்தந்த ரயில் நிலையத்திற்கு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ்: 0532-2408128, 0532-2407353, கான்பூர்: 0512-2323018, மிர்சாபூர்: 054422200097, எட்டாவா: 73929597 303994411 , கோரக்பூர்: 0551-2208088. விரங்கனா லக்ஷ்மிபாய் ஜான்சி சந்திப்பு -0510-2440787 மற்றும் 0510-2440790. ஓரை -05162-252206, பண்டா-05192-227543, லலித்பூர் ஜேஎன் - 07897992404
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.