ஹரித்வாரில் புகழ்பெற்ற கன்வார் யாத்திரை நடைபெறுகிறது. இந்தாண்டு கடந்த ஜூலை 22 தொடங்கி ஆகஸ்ட் 6-ம் வரை நடைபெறுகிறது. இந்நிலையில், யாத்திரை வழித்தடம் செல்லும் மசூதிகள் மற்றும் மசார்கள் பெரிய வெள்ளைத் தாள்கள் ( திரைச்சீலைகள்) கொண்டு மறைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாலையில் மாவட்ட நிர்வாகம் திரைச்சீலைகளை அகற்றியது. மேலும், நடந்தது தவறு என்றும் போலீசார் கூறினர்.
திரைச்சீலைகள் வைப்பதற்கு தாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று நிர்வாகம் கூறியது. அதேசமயம், இதுகுறித்து பேசிய ஹரித்வார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சத்பால் மகராஜ், யாத்திரையின் போது எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க இதை செய்ததாக கூறினார்.
ஹரித்வாரில் உள்ள யாத்திரை பாதை நகரின் ஜ்வாலாபூர் பகுதி வழியாக செல்கிறது, அங்கு மசூதிகள் மற்றும் மசார் அமைந்துள்ளன. அங்கு தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இப்படி நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
ஆங்கிலத்தில் படிக்க: In Haridwar, mosques and mazar on Kanwar Yatra route briefly hidden using covers, police say ‘mistake’
சத்பால் மகராஜ் கூறுகையில், “இதைச் செய்தால் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது. கன்வர் யாத்திரை சுமூகமாக நடக்க வேண்டும் என்று இருக்கிறது. கட்டுமான வேலை நடைபெற்றால் கட்டிடங்கள் மூடப்படும் அல்லவா அதையே நாங்கள் இங்கே செய்துள்ளோம் என்றார்.
இருப்பினும் ஹரித்வார் காவல்துறை கண்காணிப்பாளர் (நகரம்) ஸ்வதந்த்ர குமார், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் அல்லது காவல்துறையிடம் இருந்து இதுபோன்று செய்ய எந்த உத்தரவும் இல்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேசி துணிகளை அகற்றியுள்ளோம். அப்பகுதி மக்களிடமும் பேசினோம். யாத்திரை செல்லும் பாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன, அதில் ஏதேனும் தவறு இருந்திருக்க வேண்டும், இதனால் மறைக்கப்பட்டிருக்கலாம். இது வேண்டுமென்றே செய்யப்படவில்லை” என்று குமார் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“