Manoj C G
Kapil Sibal says leadership not taking up issues, polls show Congress is not choice of people : காங்கிரஸ் கட்சியில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பீகார் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் மிகவும் மோசமாக தோல்வி அடைந்து இருப்பது குறித்து பேசியுள்ளார். மக்கள் காங்கிரஸ் கட்சியை செயல்திறன்மிக்க மாற்று கட்சியாக பார்ப்பதை நிறுத்திவிட்டனர். கட்சித் தலைமை, கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பேச தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்னவென்று தெரியும் ஆனால் அதனை முறைப்படுத்தி தீர்வுகளை கண்டுபிடிக்க மறுக்கிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினார் அவர். எங்களில் சிலர் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து தங்களின் கருத்துகளை எழுதி காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பினோம். அவர்கள் எங்களின் கருத்துகளை கேட்பதற்கு பதிலாக எங்களின் கருத்துக்களை மறுத்துவிட்டனர். பீகார் மட்டுமல்லாமல் இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்களிலும் மக்கள் காங்கிரஸ் கட்சியை மாற்றுக் கட்சியாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது தேர்தல் முடிவுகள் என்று கூறியுள்ளார்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
"உள்நோக்கத்திற்கான" நேரம் முடிந்தது, சிபல் கூறினார். காங்கிரஸ் காரிய கமிட்டியில் உறுப்பினராக இருக்கும் ஒரு கட்சிக்காரர் ஒரு நாள்," காங்கிரஸின் உள்நோக்கங்களை நம்புகிறேன் "என்று கூறினார். ஆறு ஆண்டுகளாக காங்கிரஸ் இதனை ஆராய்ந்து பார்க்கவில்லை என்றால், இப்போது உள்நோக்கத்திற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? காங்கிரசில் என்ன தவறு இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும்.
நிர்வாக ரீதியாகவும் என்ன தவறு என்று எங்களுக்குத் தெரியும். எங்களிடம் அனைத்து பதில்களும் உள்ளன. அனைத்து பதில்களும் காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும். ஆனால் அவர்கள் அந்த பதில்களை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. காங்கிரஸ் வீழ்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். காங்கிரஸ் தைரியமாக அந்த பதில்களை அங்கீகரிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் காரிய கமிட்டி ஒரு பரிந்துரைக்கப்பட்ட கமிட்டி என்பதால் இந்த பிரச்சனைகளை தீர்க்க தயக்கம் காட்டுகிறது என்று கூறுகிறார் சிபல். காங்கிரஸ் அரசியல் அமைப்பில் பிரதிபலிக்கும் காரீய கமிட்டியிலும் ஜனநாயக நடைமுறைகள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நபர் கேள்வி கேட்க துவங்குவதை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார் அவர்.
குஜராத் இடைத்தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட்டை இழந்த நிலையில் மொத்தமாக 8 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. அதே போன்று உ.பியிலும் 7 தொகுதிகளில் பதிவான வாக்குகளில் 2%ற்கும் குறைவாகவே காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. சமீபம் வரை ஆட்சி செய்து கொண்டிருந்த மத்திய பிரதேசத்திலும் கூட 28 தொகுதிகளிலும் மோசமாக செயல்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமை இதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறதா என்று சிபலிடம் கேட்ட போது, எனக்கு தெரியாது. நான் என் வரையில் மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றேன். தலைமை என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் தலைமையை சுற்றி எழும் குரல்களை நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி தன்னுடைய நிலைப்பாட்டினை இன்னும் கூறவில்லை.
ஆகஸ்டில், இடைக்கால காங்கிரஸ் தலைவரான சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் சிபலும் ஒருவர், இந்த கட்சியில் முழு நேர மற்றும் பயனுள்ள தலைமையை நியமிக்க கோரினார்கள் அவர்கள். அந்த கடிதம் குறித்து கேட்ட போது, அப்போது இருந்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. பேச்சுவார்த்தையை துவங்க கட்சி தலைமையில் எந்த முயற்சியும் இல்லை. என்னுடைய கருத்துகளை வெளிப்படுத்த ஒரு அமைப்பும் இல்லாததால் நான் பொதுவெளியில் தெரிவிக்க வற்புறுத்தப்படுகிறேன். நான் காங்கிரஸ்காரர். நான் காங்கிரஸ்காரராக தான் இருப்பேன். அதிகார உள்கட்டமைப்பிற்கு மாற்றினை காங்கிரஸ் கட்சி வழங்கும் என்று நாம் உறுதியாக நம்பி பிரார்த்தனை செய்கிறேன் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க : பீகார் முடிவுகள்: என்.டி.ஏ- பாஜக.வுக்கு சாதகமற்ற 5 முக்கிய அம்சங்கள்
ஜனநாயக தேர்தல் தான் காங்கிரஸ் கட்சி மறுமலர்ச்சிக்கான விடையா என்ற போது, அவர் கூறினார், தகவல் தொடர்பு புரட்சி நடைபெற்றதில் இருந்து, தேர்தல்கள் தலைவருக்கான தேர்தலாக மாறிவிட்டது. நாம் நம்முடைய குறைபாடுகளை அடையாளம் காண முடியவில்லை என்றால், தேர்தல் முடிவுகள் கூட நாம் விரும்பிய இடத்திற்கு நம்மை விட்டுச் செல்லாது. வேட்புமனுக்கள் மூலம் தேர்தல்கள் விரும்பிய முடிவுகளுக்கு வழிவகுக்காது… முடிவுகள் நேரத்துடன் மட்டுமே வரும், நம்பகத்தன்மையுடன் வரும், சொற்பொழிவில் மாற்றத்துடன் வரும், நமது கருத்தியல் நிலைப்பாடுகளை ஒரு குறிப்பிட்ட ஏற்றுக்கொள்ளலுடன் வரும். எனவே அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்டிருந்தாலும், எங்களுக்கு சிறந்த முடிவுகள் கிடைக்காது. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸை புத்துயிர் பெறுவதற்கான பாதையில் நாங்கள் இருப்போம். ”
”அனுபவம் வாய்ந்த மனதுடன், அனுபவம் வாய்ந்த கைகளுடன், இந்தியாவின் அரசியல் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளும் மக்களுடன், ஊடகங்களில் எதை, எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவர்களுடன், மக்களை எப்படிக் கேட்கவைப்பது என்று தெரிந்தவர்களுடன் ஒவ்வொரு அமைப்பும் உரையாட வேண்டும். கூட்டணி குறித்து பேசிய போது, நாங்கள் இனிமேல் எங்களிடம் மற்ற கட்சியினர் வந்து சேர வேண்டும் என்று கூறவில்லை. நாங்கள் இதற்கு முன்பு இருந்த அதிகாரத்துடன் தற்போது இல்லை” என்றும் அவர் தன் வருத்தத்தை பதிவு செய்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.