வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுமார் 2000 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து வெங்கள் புயலாக மாற உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.இன்று காலை வரை சுமார் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
காரைக்கால் அடுத்த தலத்தெரு மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 200 ஏக்கர் விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.விளை நிலங்கள் நடுவே செல்லும் விழுப்புரம்-நாகை நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சாலையின் இருபுறமும் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால்கள் தூர்வாரப்படாமல் சீரமைக்காமல் உள்ளதால் மழை நீர் வடியாமல் பயிர்கள் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - காரைக்கால்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“