காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கன்குடி கிராமத்தில் மக்களைத் தேடி கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை சென்றனர் .
தேவமாபுரம், வளத்தாமங்கலம், பத்தக்குடி போன்ற கிராமங்களில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து தீர்வு காணும் வகையில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் முனைவர் மணிகண்டன் தலைமையில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் மக்களைத்தேடி கருக்கன்குடி கிராமத்தில் முகாமிட்டனர்.
மக்களை தேடி மாவட்ட ஆட்சியரின் நான்காவது கிராமமாக இக்கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பார்க்க வந்துள்ளோம். இதில் சில விஷயங்கள் விரைவாக முடிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் முனைவர் மணிகண்டன் கூறினார்.
தற்போது இந்த முகாம் மூலமாக நேரடியாக மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வது. இதன் முக்கிய நோக்கமாக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார். சிறப்பம்சமாக விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மூலம் இந்த கிராமத்தை தத்தெடுத்து மருத்துவ சிகிச்சைகளை செய்வது மேலும் மேல் சிகிச்சைக்காக விநாயகா மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ உதவி அளித்தல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.
ஜிப்மர் மருத்துவமனை மூலம் சிறப்பு முகாம்கள் இன்று அமைத்து பெண்களுக்கான கர்ப்பப்பை புற்று நோய் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முக்கிய நோக்கமாக செயல் படுத்தப்படுகிறது.
மிஷன் சக்தி இத்திட்டம் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் மத்திய மாநில அரசின் திட்டங்கள் கிராமப்புறங்களில் பலருக்கும் கொண்டு செல்வது இதன் முக்கிய அம்சமாகும். குறிப்பாக மகளிருக்கு இத்திட்டங்கள் செயல்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். மேலும், ஆயுஷ் திட்டத்தின் மூலம் வயதானவர்கள்களுக்கு மருத்துவ முகாம்கள் அமைத்து அவர்களுக்கு மருந்து மாத்திரை அளித்தல் மேலும் அவர்கள் நடப்பதற்கு உதவியாக ஊன்று கோல் அளித்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் இன்று விழாவில் மூன்று நபர்களுக்கு ஊன்றுகோல் அளிக்கப்பட்டன.
மேலும், கால்நடை பராமரிப்பு துறை மூலம் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இன்று முழுவதும் கால்நடைகள்,ஆடுகள் கோழிகள் ஆகியவற்றிற்கு சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் அளிக்கப்பட்டன. ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
இந்த முகாம்களை பார்வையிட்டு இந்நிகழ்வில் மேலும் பேசிய மாவட்ட ஆட்சியர் முனைவர் மணிகண்டன், மக்களை தேடி மாவட்ட ஆட்சியர் திட்டத்தில் ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கும்போது அந்த கிராமத்தில் நடைபெறும் நிகழ்வினை ஒரு வாரத்திற்கு முன்பே அரசு அதிகாரிகளை குறிப்பாக பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு அனுப்பி அங்கு சென்று மக்களின் அடிப்படைத் தேவைகள் என்னென்ன என்பது குறித்து கண்டறிந்து அதன் அடிப்படையில் அந்த கிராமத்திற்கு சென்று இத்திட்டம் செயல்படுத்தப் படுகின்றன என்று தெரிவித்தார்.
மேலும் கே.வி.கே மூலம் விவசாயிகளின் முக்கிய பிரச்னையான பன்றிகளை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக தமிழ்நாடு கே.வி.கே மூலம் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அதை பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டன. இத்திட்டமும் சிறப்பாக செயல்படுத்த கே.வி.கே-விற்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்கள். பொதுமக்களிடமிருந்து பல்வேறு மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார்கள்.
பாலித்தீன் பைகளை ஒழிக்கும் விதமாக பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பைகள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.