பிரபல நடிகை கரீனா கபூர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்ததாகவும், இந்த விருப்பத்தை கரீனா ராகுலிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளய்து.
கரீனா கபூர்:
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கரீனா கபூர். தற்போது சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கரீனா விரும்பியதாக பத்திரிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். இந்த தகவலை பகிர்தவர் சோனியா காந்தி மற்றும் கரீனா குடும்பத்திற்கு நெருக்கமான பத்திரிக்கையாளர் தான்.
இரு குடும்பங்களைப் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு, இரு குடும்பங்களுடனும் இணக்கமாக நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது, ராகுல் காந்தி மீது தனது ஆசையை கரீனா வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டுவாக்கில், இரு குடும்பங்களும் நெருங்கி பழகி வந்துள்ளன. அப்போது, ராகுல் காந்தி, எம்.பி. ஆகவில்லை. அவர் மீதான தனது விருப்பத்தை கரீனா வெளிப்படுத்தியது உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுபோல், ராகுல் காந்தியும் நடிகை கரீனா நடித்த படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டினார். முதல் நாளிலேயே அந்த படங்களை பார்த்து விடுவார் என்று அந்த பத்திரிகையாளர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.